நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர தம்பதியாக திகழ்ந்த நாக சைதன்யா – சமந்தா ஜோடி, கடந்த 2021-ம் ஆண்டில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
விவாகரத்துக்கு பிறகு நாக சைதன்யா – சமந்தா நடிப்பில் பிசியாகி விட்டனர். மயோசிடிஸ் நோய் தாக்கத்தில் இருந்து விடுபட்டு வரும் சமந்தா ஓராண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க தயாராகி வருகிறார்.
இந்தநிலையில் நாக சைதன்யாவும், நடிகை ஷோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் ஜோடியாக சுற்றுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஷோபிதாவிடம், ‘நாக சைதன்யாவுக்கும், உங்களுக்கும் காதலாமே…’ என்று கேட்கப்பட்டது. இதற்கு ஷோபிதா பதிலளிக்கையில், “உண்மை என்னவென்று தெரியாமல் பேசுபவர்களுக்கு நான் பதில் சொல்ல அவசியம் இல்லை.
நான் எந்த தவறும் செய்யாதபோது, அதைப் பற்றிய விளக்கத்தை நான் ஏன் கொடுக்க வேண்டும்? எப்போதும் அரைகுறை அறிவுடன் எழுதுபவர்களுக்கெல்லாம் பதில் கொடுப்பதை விட அவரவர் வாழ்க்கையைப் பார்த்து சொல்வதே மேல்”, என்று காட்டமாக பதிலளித்தார்.
வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது நம்ம வேலவன் ஸ்டோர்ஸ் பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்கும் வகையில் பிரசாந்த் டவர்ஸ்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக தக் லைப் என்ற திரைப்படம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போதைய எஸ்டிஆர் 49 என்ற படத்தில் நடித்து…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா…
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள்…