தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் நாளை தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்தநாளை ரசிகர்கள் சிறப்பாக கொண்டாட காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிவகுமார் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “நடிப்புக் கலையில் அசகாய சூரர்கள் என்று நான் மதித்துப் போற்றுபவர்கள் தமிழ்ச் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியும், உலகநாயகன் கமலும்தான். அவர்கள் செய்த ‘வெரைட்டி ரோல்களை’ இதுவரை வேறுயாரும் செய்ய முடியவில்லை.
சிவாஜி நடித்த சரித்திர, சமூக, புராண வேடங்களை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவு அவர் செய்துவிட்டார். கமல், நீங்கள் நடிப்பதோடு நில்லாமல், தேர்ந்த பரதக்கலைஞர், நடனக் கலையில் வல்லவர், பாடகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர்..
‘டூப்’ போடாமல் அல்லாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் நீங்கள் சிங்கத்தோடு மோதியவர் .. ‘மீண்டும் ஒரு சூர்யோதயம்’ படத்தில் ரன்வே ரோட்டில் பாய்ந்து ஓடிய குதிரை சறுக்கி கீழே விழ 20 அடி தூரம் குதிரையின் அடியில் உங்கள் கால் மாட்டி எலும்பு நொறுங்க நடித்தவர் நீங்கள்.
1973-ல் அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன் என்று துவங்கி தங்கத்திலே வைரம், மேல்நாட்டு மருமகள் என8 படங்களில் நாம் இருவரும் சேர்ந்து நடித்தோம். நான் கதாநாயகன், கமல், நீங்கள் பெரும்பாலும் வில்லனாக நடித்தீர்கள்.. வில்லன் வேடங்களில் நடித்து பெரிய ஹீரோவாக எங்கள் தலைமுறையில் உயர்ந்த முதல் நடிகர் நீங்கள் தான் கமல் !
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல உங்களுக்குள் இருந்த ‘பொறி’யை கண்டவன் நான். அந்தச் செடி வளர்ந்து இன்று விருட்சமாகி ‘நாயகன்’, ‘குணா’, ‘அன்பே சிவம்’, ‘ஒளவை சண்முகி’, ‘ஹேராம் ‘ என்று நடிப்பின் இமயத்தைத் தொட்டுள்ளது. நடிப்பில் இனி சாதிக்க உங்களுக்கு எதுவும் மிச்சம் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியல் களம் உங்களுக்காக காத்திருக்கிறது.
அமெரிக்கா கொண்டாடிய ஆப்ரஹாம் லிங்கனே இரண்டு முறை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த பின்னரே அதிபரானார். அரசியலிலும், திரையில் சாதித்தத்தை, நீங்கள் சாதிக்க முடியும்.. துணிந்து இறங்குங்கள். நூறாண்டு நீவிர் வாழ்க…” என்று குறிப்பிட்டுள்ளார்.
கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார் 2’…
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள்…
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…
ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…
Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…