Sivakarthikeyan's new venture for Amaran Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார்.
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த கதை உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சாய் பல்லவியின் அறிமுக வீடியோவை பட குழு வெளியிட்டு இருந்தது அந்த வீடியோ ரசிகர்களின் மனதை மிகவும் கவர்ந்தது என்றே சொல்லலாம்.
குறிப்பாக சிவகார்த்திகேயன் படம் என்றாலே கிளைமாக்ஸ் இல் சந்தோஷமாக முடிப்பது வழக்கம். ஆனால் எதுவரை எந்த ஒரு படத்திலும் இல்லாத அளவிற்கு அமரன் படத்தில் கிளைமாக்ஸ் இல் சிவகார்த்திகேயன் இறந்து விடுவது போல காட்சிகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் கிளைமேக்ஸ் மிகவும் எமோஷனலாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…