பாஜகவில் இணைகிறாரா சிவகார்த்திகேயன்?? – வெளியான பரபரப்பு தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்கிரி ஆர்டிஸ்டாக தங்கள் பயணத்தை தொடங்கிய இவர் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர், அயலான் உள்ளிட்ட திரை படங்கள் ரிலீசாக உள்ளன. டாக்டர் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க அயலான் திரைப்படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார்.

இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பாஜகவில் இணைய இருப்பதாக யூடியூப் சேனல்கள் வழியாக தகவல் பரவியது.

இதனையடுத்து தற்போது அவரது தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான தகவல் உண்மை அல்ல என தெரிவித்துள்ளனர்.

மேலும் சிவகார்த்திகேயன் எந்தவித கட்சியிலும் சேர மாட்டார், அரசியலில் ஈடுபட மாட்டார் எனவும் தெரிவித்துள்ளனர். சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து இப்படி ஒரு விளக்கம் அளிக்கப்பட்டதையடுத்து நடிகையும் பிக் பாஸ் தமிழ் பிரபலமான காயத்ரி ரகுராம் சிவகார்த்திகேயன் விருப்பப்பட்டால் பாஜகவில் இணையலாம் என கூறியுள்ளார்.

மேலும் பாஜக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் காலம் வந்து விட்டது என கூறியுள்ளார்.

admin

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

7 hours ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

7 hours ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

7 hours ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

1 day ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

1 day ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

2 days ago