Sivakarthikeyan To Write The Lyrics For Vijay's Beast
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் முதல் முறையாக நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட்.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இதற்குமுன், கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்று எழுதியுள்ளதாக ஏற்கனவே சில தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்யின் இன்ட்ரோ பாடலை எழுதியுள்ளார் என்று விக்கி பீடியாவில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், விக்கி பீடியாவில் யார் வேடுமானுலும், எடிட் செய்யலாம் என்று இருக்கும் நிலையில், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் வரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…