sivakarthikeyan to join mankatha team
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘டான்’, ‘அயலான்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் கதை கேட்டுள்ளார். அந்த கதை அவருக்கு பிடித்துப்போகவே ஒப்பந்தமாகியுள்ள திரைப்படங்களில் நடித்து முடித்த பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இருவரும் இணைந்து பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் ‘மன்மத லீலை’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஹாலிவுட் படங்களை போன்ற முத்தக்காட்சிகள் கொண்ட இப்படத்தின் கிளிம்ப்ஸ் சமீபத்தில் வெளியாகி பேசு பொருளாக மாறியது. இந்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…
Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…
72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…