கவுதம் மேனனுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்?

கவுதம் மேனன் இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ என்கிற குறும்படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை இயக்கி வருகிறார் கவுதம் மேனன். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘வெந்து தணிந்தது காடு’ படத்துக்கு பின் இயக்குனர் கவுதம் மேனன் இயக்க உள்ள புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி உறுதியானால் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் முதல் படமாக இது அமையும்.

தற்போது டான் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அசோக் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை முடிந்த பின்னர், அவர் கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suresh

Recent Posts

பாதாம் மில்க் ஷேக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

பாதாம் மில்க் ஷேக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…

4 hours ago

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்ட ரம்யா பாண்டியன்.!!

ட்ரெண்டிங் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான…

11 hours ago

குக் வித் கோமாளி சீசன் 6 டைட்டில் வின்னர் யார் தெரியுமா? வெளியான தகவல்.!!

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…

12 hours ago

ரோபோ ஷங்கருக்காக கமல்ஹாசன் செய்யப்போகும் விஷயம்..வைரலாகும் தகவல்.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஸ்டாண்ட்அப் காமெடியனாக பயணத்தை தொடங்கி வெள்ளி திரையில் முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து தனக்கென…

12 hours ago

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த…

12 hours ago

முத்து மீனாவால் கடுப்பான விஜயா, மனோஜ்க்கு விழுந்த அடி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து பிச்சைக்காரர்…

13 hours ago