Lokesh Kanagaraj to make Suriya a superhero
சூர்யா நடிப்பில் கடந்த வருடம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. இப்படத்துக்கு சர்வதேச பட விழாக்களில் விருதுகளும் கிடைத்தன. தற்போது ஞானவேல் இயக்கும் ஜெய்பீம், பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் சூர்யா.
இவற்றுள் ஜெய்பீம் படம் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த படத்துக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ள சூர்யா, அப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் மணிரத்னம், ஷங்கர், வெற்றிமாறன், லிங்குசாமி, மிஷ்கின், சசி, வசந்த பாலன், கவுதம் மேனன், பாலாஜி சக்திவேல், ஏ.ஆர்.முருகதாஸ், லோகேஷ் கனகராஜ் ஆகிய 11 இயக்குனர்கள் இணைந்து பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கினர்.
இவர்கள் புதிய படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும், இதில் நாயகனாக நடிக்க சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட படமாக இது தயாராவதாகவும் கூறப்படுகிறது.
சர்வதேச கார் பந்தய உலகில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள நடிகர் அஜித் குமார், தற்போது தனது குடும்பத்தினருடன் பிரான்சில் எடுத்துக்கொண்ட…
திரையுலகில் வெற்றி, போட்டி, நட்சத்திர அந்தஸ்து மற்றும் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து நடிகை சமந்தா சமீபத்திய நேர்காணலில்…
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டமான ‘சீயான் 63’ திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா ஹெக்டே அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். ‘கோமாளி’,…
சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெறும் 24 Hours of Le Mans கார் பந்தயத்தில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் மற்றும் தொழிலதிபர் உபாசனா கொனிடேலா தம்பதியினர், தங்களது புதிதாக பிறந்த இரட்டைக்…
Love Oh Love Official Teaser | Pavish Narayan | Naga Durga | Magesh Rajendran |…