Sivakarthikeyan new movie update
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அண்மையில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான மாவீரன் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.
தொடர்ந்து திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்பபடத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் SK 21 திரைப்படத்தின் படப்பிடிப்பில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். சாய்பல்லவி கதாநாயகியாக நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ராணுவ வீரராக இப்படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி 2014ல் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் மூன்று தீவிரவாதிகளை கொன்று வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றில் சிவகார்த்திகேயன் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் படம் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வைரலாகி வருகிறது.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…