“வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு இதயம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”: நடிகர் சிவகார்த்திகேயன்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சார் மற்றும் SK 23″ பட குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது பிறந்தநாளுக்கு நீங்கள் அனைவரும் செலுத்திய அன்பு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும், மனநிறைவாகவும் இருந்தது. அதற்கு அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்,

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது பிறந்தநாளுக்கு நீங்கள் அனைவரும் செலுத்திய அன்பு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும், மனநிறைவாகவும் இருந்தது. அதற்கு அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் கலைத்துறை மற்றும் ஊடகங்களில் (பத்திரிக்கை தொலைக்காட்சி, பண்பலை மற்றும் இணைய ஊடகம் இருந்து வாழ்த்திய எனது அன்பான நண்பர்களுக்கும் எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் எனது மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அன்பைப் பொழிந்த அனைத்து நட்சத்திரங்களின் சிகர்களுக்கும் நன்றி

அமரன்” டீசர் மூலம் இந்த நாளை மேலும் மறக்க முடியாத நாளாக மாற்றிய எனது தயாரிப்பாளர் உலகநாயகன் கமல்ஹாசன் சார், சோனி பிக்சர்ஸ், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மகேந்திரன் சார், டிஸ்னி மற்றும் அமரன் பட குழுவினார் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

அதே நாளில் எங்கள் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான கொட்டுக்காளி திரைப்படம் பெரிலின் சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேகமாக திரையிடப்பட்டு உலக அரங்கில் பெரும் பாராட்டுகளை பெற்றது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி

எனது பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சார் மற்றும் SK 23″ பட குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது அன்பான ரசிகர்களான சகோதர், சகோதரிகள், சமூக ஊடகங்களில் அன்பையும் வாழ்த்துக்களையும் நிரப்பி, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல நலத்திட்டங்கள் செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது முழு மனதுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அளவு கடந்த அன்பு தான், என்னை இன்னும் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது.

அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என் இதயம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Sivakarthikeyan latest update viral
jothika lakshu

Recent Posts

நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் வேப்பிலை..!

நீரிழிவு நோயாளிகளுக்கு வேப்பிலை உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான்…

9 hours ago

லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் தமன்னா..!

கேடி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கல்லூரி ,படிக்காதவன், பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை…

17 hours ago

பிங்க் நிற உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் வாணி போஜன்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன்.அதனைத் தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையிலும் சில…

17 hours ago

காந்தி கண்ணாடி : 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா வெள்ளித்திரையில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஷெரிப்…

18 hours ago

சூர்யா கேட்ட கேள்வி, நந்தினியின் பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

18 hours ago

கிரிஷ் மீது சத்யாவுக்கு வந்த சந்தேகம்,ஸ்ருதி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரா…

19 hours ago