actor sivakarthikeyan latest speech update
பல நாட்கள் தொடர்ந்த சந்தேகத்தை தீர்த்துள்ளார் சிவகார்த்திகேயன்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சாய் பல்லவி முகுந்த் வரதராஜனின் மனைவி இந்துவாக நடித்துள்ளார்.
சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதில் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை கொடுத்த விஜயிடம் நீங்க ஏதோ முக்கியமான விஷயமா போறீங்க நீங்க அதைப் பாத்துக்கோங்க நான் இதை பார்த்துக்கிறேன் என்று சொல்லி இருந்தார். இந்த வசனம் தளபதி விஜய் தளபதி 69 படத்துக்கு பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால், சிவகார்த்திகேயன் தான் விஜய் இடத்தை நிரப்புவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து வந்தது.
தற்போது சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் பேசியபோது அடுத்த தளபதி நீங்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன் கண்டிப்பா அப்படி கிடையாது, தமிழ் சினிமாவை பொருத்தவரை ஒரு தளபதி தான், ஒரு தல தான் ,ஒரு உலகநாயகன் தான், ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான், அவர்களைப் பார்த்து சினிமாவை கற்றவன் நான். கடினமாக உழைத்து நல்ல திரைப்படங்களை கொடுக்க ஆசைப்படலாம் ஆனால் அவர்களாகவே ஆசைப்படுவது தவறு என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு பலரின் சந்தேகங்களை தீர்த்திருக்கிறது என்றே சொல்லலாம். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…
ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…
மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் கவுன்சிலிங் வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…