‘Siva Manasula Sakthi’ team to reunite
ஜீவா நடிப்பில் 2009-ம் ஆண்டு வெளியான சிவா மனசுல சக்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜேஷ். குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக வெளியாகி இருந்த இதில் ஜீவா, சந்தானம் இணைந்து நடித்திருந்த காமெடி காட்சிகள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஜீவாவுக்கு இப்படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து பெரிய பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தன.
இந்நிலையில், நடிகர் ஜீவா – இயக்குனர் ராஜேஷ் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதையை சிவா மனசுல சக்தி பட பாணியில் ராஜேஷ் அமைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் இப்படத்தில் காமெடியனாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படம் குறித்த அறிவிப்பை பொங்கலையொட்டி வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். நடிகர் ஜீவா தற்போது மேதாவி, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…