sita-ramam-movie-new latest update
மலையாள சூப்பர்ஸ்டாரான மம்முட்டி அவர்களின் மகன்தான் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ஹே சினாமிக்கா” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்ததை தொடர்ந்து தற்போது இவர் நடிப்பில் திரைக்கு வர தயாராகி இருக்கும் படம் தான் “சீதா ராமம்”. இப்படத்தை இயக்குனர் ஹனுராகவாபுடி இயக்கியுள்ளார். இதில் துல்கர்க்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார்.
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா, சுமந்த் ஆகியோர் நடித்துள்ளனர். சொப்னா சினிமாஸ் தயாரித்திருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ஆகஸ்ட் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தற்போது இப்படத்தில் நடித்திருக்கும் இயக்குனர் கௌதம் மேனனின் பிரஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கும் கௌதம் மேனனின் இந்த போஸ்டர் மற்றும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகை ஷகீலா உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதும்,…
இளன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள…
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’. பிரபல இயக்குநர் அட்லீ வழங்கும் இப்படத்தை Star…
நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாறு வேஷம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு…
முத்தையா எழுதி இயக்கும் புதிய திரைப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘இருளன்’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில், படக்குழு…
Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions