முத்துவிடம் சிக்கிய மனோஜ், மீனா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா சாப்பாடு சமைத்து விட்டு எல்லாரையும் சாப்பிட கூப்பிட உனக்கு வந்த விஜய்யா மனோஜ் குட்டியா என்று கேட்க இங்கு எல்லாரையும் கூப்பிட்டு தான் சாப்பாடு எடுத்து வைத்தேன் அத்தை என்று சொல்கிறார்.

சாப்பாடு எடுத்து வைத்த பிறகு கூப்பிட்டியா? போய் கூப்பிடு என்று மீனாவை அதட்ட மீனா கூப்பிட போக அங்கு வந்த முத்து நீ வா வந்து உட்காரு என்று கூப்பிட்டு உட்கார வைத்து சாப்பிட சொல்கிறார். விஜயா அவ சாப்பிட ஒக்காந்துட்டா பரிமாறுவது யாரு என்று கேள்வி கேட்க அண்ணாமலை எல்லாருக்கும் கை இருக்குல்ல அவங்களை தேவையானதை அவங்க போட்டுப்பாங்க நீ சாப்பிடுற வேலையை மட்டும் பாரு என்று சொல்கிறார்.

அதன் பிறகு மனோஜ் மற்றும் ரோகினி சாப்பிட வர கடை பற்றிய பேச்சு எழுகிறது. மனோஜ் இன்னும் கடைக்கு என்ன பெயர் வைக்கிறதுன்னு முடிவு பண்ணல அத பத்தி தான் டிஸ்கஷன் பண்ணிட்டு இருக்கும் என்று சொல்ல மீனா பெரியலங்களோட பேரு வச்சா நல்லதுன்னு சொல்லுவாங்க பாட்டி பெயர் வைக்கலாம் என்று ஐடியா கொடுக்க முத்துவும் அம்மா இது நல்ல ஐடியா என்று சொல்ல அண்ணாமலையின் நல்லாதான் இருக்கும் என்று சொல்கிறார்.

மனோஜ் மற்றும் ரோகினி பாட்டி பேர பழசா இருக்கும் என்று சொல்ல விஜயா மீனாவிடம் உன்னை யாராவது ஐடியா கேட்டாங்களா என்று கோபப்பட அதானே உனக்கு எங்க அம்மா பேரு வைக்கணும்னா பிடிக்காதே என்று அண்ணாமலை சொல்கிறார். உனக்கு ஏத்த மாதிரி நீயே பேர வச்சுக்க என்று மனோஜிடம் சொல்ல இனிமேல்தான் பேரை யோசிக்கணும் என்று சொல்ல விஜயா தன்னுடைய பெயரை வைப்பாங்க என்று ஆவலோடு காத்திருந்து நிலையில் ஏமாற்றம் அடைகிறார்.

மனோஜின் இந்த வார்த்தைகளை கேட்டதும் விஜயாவின் முகம் மாறுவதை முத்து கவனிக்கிறார். அதன் பிறகு ரூமுக்குள் மனோஜ் மற்றும் ரோகினி கடைக்கு பேர் வைப்பதை பற்றி யோசனையில் இருக்க மனோஜ் அம்மா சொன்ன மாதிரி உங்க அப்பா பெரிய வைக்கலாமா என்று கேட்க அதற்கு எங்க அப்பா பணத்தை கொடுத்து இருக்கணும் என்று ரோகினி சொல்ல அப்படின்னா ஜீவா பேர்தான் வைக்கணும் அவ தானே பணம் கொடுத்தா என்று மனோஜ் சொல்கிறார். உடனே ரோகினி இன்னும் அவ மேல உனக்கு காதல் இருக்கா என்று கோபப்படுகிறார்.

அதன் பிறகு ஆன்ட்டி பெயரையே வைக்கலாம் என்று ரோகிணி சொல்ல மனோஜ் வேண்டாம் அம்மா பேரு அவ்வளவு லக்கி இல்ல பார்லருக்கு அம்மா பேரு தான் வச்சோம் ஆனால் அது பாதியிலேயே போயிடுச்சு, முத்துவோட பூக்கடைக்கும் அம்மா பேரு தான் வச்சான் அதையும் கார்ப்பரேஷன் காரங்க தூக்கிட்டு போய்ட்டாங்க என்று சொல்லி பேச இதை வெளியில் இருந்து கேட்ட முத்து ரெக்கார்ட் செய்து விடுகிறார்.

அதன் பிறகு ரூமுக்குள் வந்து பேர டிஸ்கஸ் பண்ணியாச்சா என்று கேட்க அதுதான் யோசிச்சிட்டு இருக்கும் என்று மனோஜ் சொல்ல நான் ஒரு நல்ல ஐடியா சொல்றேன் விஜயானு பேரை வைங்க என்று சொல்கிறார். எங்க கடைக்கு என்ன பெயர் வைக்கணும்னு நீ ஏன் சொல்ற என்று மனோஜ் கேட்க இது ஆப்ஷன்லாம் கிடையாது இந்த பேர தான் நீ வைக்கணும் என்று சொல்கிறார்.

அம்மா உன் மேல உயிரையே வச்சிருக்காங்க நீ பண்ண எல்லா தப்பையும் மறந்துட்டு உனக்காக நின்னு இருக்காங்க அவங்கள போய் இப்படி சொல்ற என்று கோபப்பட நான் என்ன சொன்னேன் என்று மனோஜ் கேட்க அது நீயே கேளு என்று ரெக்கார்டை ஆன் செய்து காட்ட இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மனோஜ் எனக்கும் அம்மா மேல பாசம் இருக்கு ஆனா அவங்க பேர் வச்சு தான் ரெண்டுமே பாதியில போயிடுச்சு என்று சொல்ல அதுக்கு காரணம் அவங்க பேரு கிடையாது. பார்லர் உங்க கையை விட்டு போனதுக்கான காரணம் உன் பொண்டாட்டி மீனாவோட பூ கடை போனதுக்கான காரணம் யாரோ வயித்தெரிச்சல் புடிச்சவங்க பண்ண வேலை. நீ அம்மா பேரை தான் வைக்கணும் என்று சொல்கிறார்.

இல்லனா வா அம்மா கிட்ட இந்த ஆடியோவை போட்டு காட்டி என்ன பெயர் வைக்கலாம்னு கேட்டுடலாம் என்று செக்மேட் வைக்கிறார். நீ அம்மா பேர தான் வைக்கணும் அதுவரைக்கும் இந்த ஆடியோ என்கிட்ட இருக்கட்டும் என்று முத்து வெளியே வர இவர்கள் பேசியதை மீனா கேட்டு விடுகிறார்.

அடுத்ததாக மீனா முத்துவிடம் உங்கள புரிஞ்சிக்கவே முடியல. வெளில அத்தையை ஏதாவது சொல்லிக்கிட்டு அவங்கள கோபப்படுத்திக்கிட்ட இருப்பீங்க, அவங்களும் உங்கள பரம எதிரி மாதிரி பாப்பாங்க அப்படி இருக்கும்போது அவங்க பேரு தான் வைக்கணும்னு நீங்க ஏன் போய் சொல்லிட்டு வந்தீங்க. அத்தைக்கும் உங்களுக்கும் அப்படி என்னதான் பிரச்சனை கண்டிப்பா ஆரம்பத்துல அவங்களும் உங்க மேல அன்பா தான் இருந்திருப்பாங்க அதன் பிறகு இப்படி நடக்க ஏதாச்சு ஒரு காரணம் இருக்கும் அது என்ன என்று மீனா கேட்கிறார்.

பிளாஷ்பேக்கை சொல்ல வந்த முத்து எதையோ நினைத்து சுதாரித்துக்கொண்டு அதெல்லாம் இதுக்கு சில பேரோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னு சில விஷயங்கள் வெளிய தெரியாம இருக்கணும் என்று மறைக்க மீனா திரும்பத் திரும்ப கேட்க முத்து எனக்கு தலை வலிக்குது ஒரு காபி கொண்டு வா என்று சொல்கிறார். என்கிட்ட இருந்து ஏன் மறைக்குறீங்க அப்ப நீங்க இன்னும் என்னை முழுசா பொண்டாட்டிய ஏத்துக்கலயா என்று கேள்வி கேட்க முத்து சரி நான் வெளியே போய் காபி குடிச்சுக்கிறேன் என்று கோபப்பட மீனா நானே கொண்டு வரேன் என்று வெளியே வருகிறார்.

இதையடுத்து நைட் அண்ணாமலை கதவை சாத்த போக ரவி வீட்டுக்குள் நுழைந்து நான் கதவு சாத்திக்கிறேன் அப்பா என்று சொல்லி ரூமுக்குள் செல்ல ரவியின் டி-ஷர்ட் மற்றும் லுங்கியை கட்டிக்கொண்டு ஸ்ருதி பாட்டுக்கு டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பதை பார்த்து ஷாக் ஆகிறார். என்ன இது முதலில் டிரஸ் மாத்து என்று சொல்ல இது கூட நல்லாதான் இருக்கு உன் டிரஸ் போடும் அப்போது நீயே என் கூட இருக்க மாதிரி இருக்கு என்று சொல்ல அப்படின்னா என் டிரசையே கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே என்று கலாய்க்கிறார் ரவி.

பிறகு சுருதி தன்னுடைய நைட்டியை எடுத்துக் கொடுத்து இதை நீ போடு என்று சொல்ல நான் எதுக்கு இதை போடணும் என்று ரவி கேட்க அப்போ உனக்கு என் மேல லவ் இல்ல என் மேல லவ் இருந்தா இதை போடு என்று சொல்கிறார்‌. இதனால் ரவி வேறு வழியின்றி நைட்டி போட்டுக் கொண்டு உன் மேல லவ் இருக்குன்னு காட்டிட்டேன் போதுமா இப்ப கழட்டிட்டு வா என்று கேட்க அதுக்குள்ள கழட்டக்கூடாது இத இங்க போடறது பிரச்சனை கிடையாது நீ போய் எனக்கு டீ போட்டுக் கொண்டு வா என்று சொல்ல ரவி இந்த டிரஸ்ஸோட என்னால முடியாது என்று சொல்கிறார்.

அப்போ என் மேல இருக்க லவ் அவ்வளவு தான் என்று திரும்பவும் ஸ்ருதி மடக்க யாராவது பார்த்தா என்ன ஆகிறது என்று ரவி கேட்க பார்த்தா என்ன ஆகப்போகுது என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

sirakadikka-aasai serial episode-update
jothika lakshu

Recent Posts

Sardar 2 Teaser

Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…

2 days ago

Maayangal Maayangal Lyrical Video

Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran

2 days ago

Yen Ennai Edho Seidhai Official Teaser

Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…

2 days ago

மகளுடன் முதல் முறையாக இணையும் நடிக்கும் ஊர்வசி!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…

2 days ago

‘டாக்சிக்’ படத்துக்காக கியாரா அத்வானி வாங்கிய சம்பளம்… வைரலாகும் தகவல்!

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…

2 days ago

ராயன் தேசிய விருது சர்ச்சை… கடின உழைப்பையும் நீண்ட பயணத்தையும் மதிக்க வேண்டும் – டி. இமான்

72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…

2 days ago