ரோகினி கொடுத்த ஐடியா, கோபத்தில் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா வீட்டுக்கு வந்த மகாலட்சுமி திரும்ப அம்மா வீட்டுக்கு போயிட்டா, பணத்தோட வர இருந்த குபேரன் ஜெயில்ல கிடக்காரு. ஒன்னும் இல்லாதவ இந்த வீட்ல இருக்கா என்று விஜயா கோபப்பட இப்ப ஜாடை மடையா என்ன தானே சொல்றீங்க என்று மீனா கேள்வி கேட்க ஆமா உன்னை தாண்டி சொல்றேன் என்று விஜயா கோபப்படுகிறார்.

நான் என்ன அத்தை பண்ணேன் என்று மீனா கேட்டதும் ஸ்ருதி இந்த வீட்டை விட்டு போனதுக்கு நீ தான் காரணம் என்று பழியை தூக்கி போட மீனா இது நல்ல கதையா இருக்கு, அவங்க கோச்சிட்டு போனதுக்கு நான் எப்படி காரணமாக முடியும் என்று கேட்கிறார். நீ மட்டும் அவ ரூமுக்கு போய் அந்த செயினை எடுக்காமல் இருந்தால் இவ்வளவு பிரச்சினையே வந்திருக்காது என்று சொல்ல ஸ்ருதியை கூப்பிட தான் நான் போனேன், செயினை திருட இல்லையே என்று சொல்கிறார்.

நீ எதுக்கு போனாலும் யார் பார்த்தா என்ற விஜயா கேட்க முத்து பார்க்கலைல அப்போ அத பத்தி பேசக்கூடாது என பதிலடி கொடுக்கிறார். அண்ணாமலை விஜயா உன்னால இந்த வீட்ல நிம்மதியே இல்ல யாரையும் நிம்மதியா இருக்க விடமாட்டியா என்று கேட்க இவங்களால தான் இந்த குடும்பத்துடன் நிம்மதியா போச்சு என்று சொல்ல சரி ஸ்ருதி கோச்சிக்கிட்டு வீட்டுக்கு போய்ட்டாங்க நீங்க என்ன போன்லயாச்சு பேசினீங்களா? என்று வஜயாவை கேள்வி கேட்கும் மீனா நான் அவங்கள போய் நேர்ல பாத்துட்டு வந்தேன் என்று சொல்லி ஆஃப் ஆக்குகிறார்.

அண்ணாமலை நீ போய் ஸ்ருதியை பார்த்தியா? என்னம்மா சொன்னா என்று கேட்க மண்டபத்தில் நடந்தது எல்லாவற்றையும் சொல்லி வீட்டுக்கு வர சொல்லி இருக்கேன் அவங்களும் வருவாங்கன்னு நினைக்கிறேன் என்று சொல்கிறார். பிறகு முத்து மீனா ரூமுக்குள் இருக்க இப்ப எல்லாம் என்கிட்ட சொல்லாமலே பல சமாதான வேலைகள் நடக்குது என்று கேள்வி கேட்க நீங்க மட்டும் என்கிட்ட சொல்லிட்டார் ரவியை பார்த்தீங்க என்று மீனா மடக்குகிறார்.

அவங்க ரெண்டு பேரும் இந்த வீட்டுக்கு வரவும் அப்பதான் வீடு பழையபடி சந்தோஷமா இருக்கும். அதே மாதிரி ரோகிணியோட அப்பாவும் வரனும் என்று மீனா சொல்கிறார். இதையடுத்து ரோகினி பியூட்டி பார்லரில் இருக்கும்போது பி ஏ அங்கு வர நீ எதுக்கு இங்க வந்த என்று ரோகினியும் வித்யாவும் கேள்வி கேட்கின்றனர்.

எனக்கு கல்யாணம் பொண்ணு எல்லாம் பார்த்து வச்சிட்டேன் என்று சொல்கிறார். ரோகினி அதுக்கு நான் என்ன பண்ணனும் என்று கேட்க கல்யாண செலவுக்கு ஒரு லட்சம் பணம் தேவைப்படுது என்று பிஏ சொல்ல ரோகிணி என்கிட்ட எல்லாம் அவ்வளவு பணம் கிடையாது ஏற்கனவே நான் உனக்கு நிறைய கொடுத்து இருக்கேன் என்று சொல்கிறார்.

நான் அந்த பொண்ணு கிட்ட எனக்கு கல்யாணம் ஆனது ஒரு பையன் இருக்கிறது எல்லா விஷயத்தையும் சொல்லி தான் கல்யாணம் பண்றேன் உன்ன மாதிரி எதையும் மறைத்து கல்யாணம் பண்ணல நீ எனக்கு பணம் கொடுத்து தான் ஆகணும் இல்லனா உன் மாமியார் மாமனார் வீட்டுக்காரர் ஏனோ எல்லார்கிட்டயும் உன்ன பத்திய விஷயத்தை சொல்லிடுவேன் என்று மிரட்டுகிறார்.

இந்த நேரத்தில் மனோஜ் பார்லருக்கு வந்துவிட ரோகினி பணத்தை தரும் என்று வேறு வழியாக பிஏவை அனுப்பி வைக்கிறார். பிறகு உள்ளே வந்த மனோஜ் ரோகிணியிடம் கனடா வேலைக்கு போக பணம் கேட்கிறார். ரோகிணி கோபத்தில் எல்லாரும் பணம் பணம்னு கேட்டா நான் என்ன பண்ணுவேன் நான் என்ன பணம் காய்க்கும் மரமா? என கோபப்படுகிறார்.

யார் பணம் கேட்டது என்று மனோஜ் கிடைக்க வித்யா பேங்க்ல இருந்து போன் பண்ணி இருந்தாங்க என்று சொல்லி சமாளிக்கிறார். எனக்காக நீ இதை கூட பண்ண மாட்டியா என்று மனோஜ் விடாமல் பணத்தைக் கேட்டு டார்ச்சர் செய்ய என்கிட்ட கேட்காத எதுவும் கிடைக்காது போய் உன் அப்பா அம்மா கிட்ட கேளு முத்துவுக்கு வீட்டை வைத்து பணத்தை வாங்கி கொடுத்த இல்ல அதே மாதிரி உனக்கு செய்ய மாட்டார்களா உங்க அம்மா தான் உன்னால ரொம்ப அக்கறையா இருப்பாங்களே என்று ஏற்றி விடுகிறார்.

மனோஜ் நீ ரொம்ப கோவமா இருக்க நான் அப்புறம் பேசுறேன். இருந்தாலும் நீ கொடுத்தது நல்ல ஐடியா என்று சொல்லி வீட்டிற்கு கிளம்பி வருகிறார். தூங்கிக் கொண்டிருக்கும் அண்ணாமலையை எழுப்பி விஜயாவையும் கூப்பிட்டு உட்கார வைத்து கனடா வேலை பற்றி பேச முத்து இவர் பேசறது பாத்தா எதுக்கோ அடி போடுறான் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

sirakadikka-aasai serial episode-update
jothika lakshu

Recent Posts

Hi Movie Official Trailer

Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…

15 hours ago

Modha Rathri Title Song Video

Modha Rathri Title Song Video | Rishikanth | Anishma AnilKumar | Raja Karuppasamy | Bharath…

15 hours ago

Mudhala Mudiva Video Song

Mudhala Mudiva Video Song | Modha Rathri | Rishikanth | Anishma AnilK | Bharat Sankar…

15 hours ago

47 வயதில் முதல் ‘புல்-அப்ஸ்’ செய்து அசத்திய நடிகை ஜோதிகா!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஜோதிகா, தனது 47 வயதில் முதல்முறையாக ‘புல்-அப்ஸ்’ செய்து அசத்தியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக…

1 day ago

“ஐட்டம் பாடல்களுக்கு மட்டுமே என்னை அணுகுகிறார்கள்!” – தமன்னா வேதனை

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து…

1 day ago

“இந்தக் காலத்தில் ஒரு நிமிடத்திற்குமேல் யாரிடமும் பேச முடியவில்லை!” – ராதிகா சரத்குமார்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், பவானிஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’…

1 day ago