sirakadikka aasai serial episode update 28-10-23
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து டிரைவரிடம் இப்படி போய் என வழி சொல்லி கடைசியாக மீனாவின் வீட்டிற்கு கூட்டி வர செல்வம் இப்ப குடிச்சிருக்குமே எப்படி வீட்டுக்கு போறது என்று சொல்கிறார். என்ன விட நீ கம்மியா தான் குடிச்சிருக்க நீ போய் முத்து இருக்கான்னு கேளு முத்து காணாம போயிட்டான்னு சொல்லு அவ பார்த்துட்டு எனக்கு போன் பண்ணுவா நான் கால் மேல கால் போட்டு பேசுவேன் என அனுப்பி வைக்கிறார்.
பிறகு வீட்டுக்கு வந்த செல்வம் கதவைத் தட்டி நமது காலையிலிருந்து முத்துவை காணோம் அவன் இங்கு வந்தானா என்று கேட்க மீனா மாமா அவர் இங்கதான் இருக்காரு வந்தாரு சாப்டாரு படுத்து தூங்கிட்டு இருக்காரு. மேலும் அந்த வெட்டி பையன் செல்வம் வருவான் அவன் தான் என்ன குடிக்க கூட்டிட்டு போறது, அவ வந்தா நான் தூங்கிட்டு இருக்கேன்னு சொல்லி அனுப்பிவிடு என சொன்னாரு என்று பல்பு கொடுத்து அனுப்புகிறார்.
பிறகு செல்வம் கீழே வந்து முத்துவிடம் நடந்த விஷயத்தை சொல்ல ஓ அந்த அளவுக்கு பேசினா எல்லாம் நல்லா இருக்காங்களா அது போதும் என சொல்லி அங்கிருந்து கிளம்ப மீனா இதை மொட்டை மாடியில் இருந்து பார்த்து சந்தோஷப்படுகிறார்.
அதனைத் தொடர்ந்து அண்ணாமலை முத்து காணமே என வீட்டில் உட்கார்ந்து கொண்டு போன் செய்ய முத்து போன் பேசிக் கொண்டே வீட்டுக்குள் நுழைகிறார். ஏண்டா இப்படி குடிச்சிட்டு வந்திருக்க நீ திருந்தவே மாட்டியா என்று அண்ணாமலை கேட்க முத்து மனசு வலிக்குது என தனது மனதில் இருக்கும் கஷ்டத்தை சொல்ல மனோஜ் முத்து வைத்திட்ட எல்லாம் உன்னால வந்தது நீ மட்டும் அன்னைக்கு போடாம இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனை இல்லை என்று சொல்ல இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகி முத்து மனோஜ் போட்டு அடிக்க இடையில் ஒரு அடி ரோகிணிக்கும் விழுகிறது.
இது எல்லாம் பார்த்த அண்ணாமலை நெஞ்சை குறித்து கீழே சாய மறுபக்கம் மீனா ஏதோ தப்பாக இருக்கிறது என தூக்கத்திலிருந்து பயந்து எழுந்துக் கொள்கிறார். அடுத்து அண்ணாமலையை ஹாஸ்பிடலில் கொண்டு வந்து சேர்க்க அவருக்கு மைல்ட் அட்டாக், ஆனால் இன்னும் கண் முழிக்கல என சொல்கிறார் டாக்டர். மேலும் அவருடைய ஹார்ட் பீட் கம்மியா இருக்கு கொஞ்சம் சீரியஸ் கண்டிஷன் தான் என சொன்ன அதை கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…