விஜயாவிற்கு பணம் கொடுத்த பாட்டி.மீனாவுக்கு வந்த ஆபத்து. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா பாட்டியின் காலை அமுக்கி கொண்டிருக்க அவர் கல்யாணத்துக்கு செலவு இருக்குல்ல என்று சொல்ல அண்ணாமலை இப்போ மனோஜ் வேலைக்கு போகிறான். வர்றத வச்சு சமாளித்துக் கொள்ளலாம் என சொல்கிறார்.

இதனால் அதிர்ச்சி அடையும் விஜயா இன்னமும் நாம அமைதியாக இருந்தால் இந்தாளே காரியத்தை கெடுத்து விடுவார் என நைசாக குத்தகை பணம் பற்றி பேச முத்து கைதட்டி கொண்டு இப்ப எனக்கு புரிஞ்சு போச்சு முருகா நீ இருக்க என்று விஜயாவின் திட்டத்தை பற்றி புட்டு புட்டு வைக்க பாட்டி குத்தகை பணத்தோட காய்கறி வித்த பணமும் இருக்கு என சொல்லி பணத்தை தருவதாக சொல்ல விஜயா சந்தோஷப்படுகிறார்.

அதன் பிறகு பாட்டி பணத்தை எடுத்துக் கொடுக்க விஜயா அதை வாங்கிக்கொண்டு அண்ணாமலையை அழைத்துக் கொண்டு ஊருக்கு கிளம்புகிறார். முத்துவும் மீனாவும் வெளியே வர பாட்டி அண்ணாமலையிடம் இன்னும் அவங்க சேர்ந்து வாழ தொடங்கல, நான் அதுக்கான எல்லா ஏற்பாடையும் செய்து அவங்கள சேர்த்து வைத்து அனுப்புகிறேன் என சொல்லி அனுப்புகிறார்.

மறுபக்கம் ரவி பைக்கில் வந்து கொண்டிருக்க ஸ்ருதி வேகமாக அவனது பைக்கின் குறுக்கே சென்று வண்டியை நிறுத்தி போனில் பேசிக் கொண்டிருக்க இதனால் ரவி ஸ்ருதியின் பைக்கை இடித்து சண்டை போட்டு அங்கிருந்து கிளம்புகிறான்.

பிறகு ஸ்ருதி டப்பிங் நடுவில் கடுப்பாகி ரவிக்கு போன் செய்து இந்த மாதிரி என்கிட்ட ஒருத்தன் சண்டை போட்டான். ஒரே மூட் அப்செட்டா இருக்கு என சொல்ல ரவிக்கு அப்போதுதான் பேசுவது ஸ்ருதி என்பது தெரிய வருகிறது. மேலும் ஸ்ருதி அவனை நீ அடிக்கணும் எனக்கு இந்த உதவி மட்டும் பண்ணு, நம்ப பிரண்ட்ஷிப் இன்னும் ஸ்ட்ராங்காகிடும் என சொல்கிறார். என்னை அடிக்க சொல்லி என்கிட்டயே சொல்றா என ரவி நினைத்துக் கொண்டு அவனை நான் பார்த்தது கூட கிடையாது என்று சொல்ல சுருதி எனக்கு ஸ்கெட்ச் பண்ண நல்லா தெரியும். ஒரு முறை பார்த்தாலே அப்படியே வரைந்துடுவேன் அவன நான் வரைந்து உனக்கு அனுப்புறேன் என சொல்கிறார்.

பிறகு அப்படியே ரவியின் போட்டோவை வரைந்து போட்டோ எடுத்து அவனுக்கு அனுப்ப இதை பார்த்த ரவி அப்படியே வரைந்து இருக்க இதை கூலிப்படை கிட்ட கொடுத்தா என் கதை அவ்வளவுதான் போலையே என நினைக்கிறான்.

இதனைத் தொடர்ந்து மீனாவும் முத்துவும் வயல்வெளிக்கு வந்திருக்க அப்போது முத்து ஒருவரிடம் பேசிட்டு வருவதாக சொன்னால் மீனா கிரிஷ் உடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்க அப்போது பால் பறந்து ஓட கிரிஷ் நான் எடுத்துட்டு வரேன் என கிணற்றின் அருகே ஓட மீனா பதறி ஓடிப் போய் தவறி கிணற்றில் விழுகிறார்.

இதனால் கிரிஷ் முத்துவிடம் ஓடி வந்து விஷயத்தை சொல்ல முத்து பதறி ஓடிப்போய் கிணற்றில் குதித்து மீனாவை தூக்கிக்கொண்டு மேலே வருகிறார். பிறகு எல்லோரும் மீனாவை தூக்கி வந்து ஒரு கட்டிலில் படுக்க வைக்க முத்து கையை தேய்த்து விட ரோகிணியின் அம்மா காலை தேய்த்து விடுகிறார். தண்ணி குடிச்சிருப்பா வயித்துல நல்லா அமுக்கி விடுப்பா என்று சொல்ல முத்து மீனாவின் வயிற்றை அமுக்க கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் வெளியே வருகிறது.

கொஞ்ச நேரத்தில் மீனா கண் விழிக்க முத்து உனக்கு ஒன்னும் இல்லை என நிம்மதி அடைய மீனா முத்துவை கட்டிப்பிடித்துக் கொள்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Sirakadikka Aasai Serial Episode Update 26.06.23
jothika lakshu

Recent Posts

BANG BANG TEASER

BANG BANG TEASER | Prabhu Deva, Vadivelu | Sam Rodrigues | Yuvan Shankar Raja |…

19 hours ago

KITTI Movie Teaser

KITTI Movie Teaser | #MurugaaASHOK as #AKB |Thirumaran | Nisha | Sangavi | Simuadvani

19 hours ago

Chala Happy Nenu Lyrical Video Song

Chala Happy Nenu Lyrical Video Song (Tamil) | Beep Tamil Movie | L. Shanmuga Sundar…

2 days ago

Bethlehem Kudumba Unit Official Trailer

Bethlehem Kudumba Unit Official Trailer | Girish AD | Nivin Pauly | Mamitha Baiju |…

2 days ago

Ennachu Lyrical Video

Ennachu Lyrical Video | Magenta | Shanthnu | Vaaheesan | Dharan Kumar | Anjali |…

2 days ago

Jai Ho Lyrical Video

Jai Ho Lyrical Video | Operation Tral | Sudhir Yaduvanshi | Jayasurya | Ratheesh Vega

2 days ago