sirakadikka aasai serial episode update 24-10-23
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி சொன்னதைக் கேட்டு போலீசார் இனிமே இந்த விஷயத்தில் நாங்க எதுவும் பண்ண முடியாது இரண்டு குடும்பமும் உட்கார்ந்து பேசுங்க என்று சொல்லி அண்ணாமலையை விடுதலை செய்ய முத்து அவரை அழைத்துக் கொண்டு வரும்போது ரவி இப்படியெல்லாம் எனக்கு நடக்கும்னு தெரியாது பா என்று சொல்ல அவனைப் பிடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து கிளம்பி வருகிறார்.
அடுத்து முத்து மீனாவை பார்த்து உனக்கும் அதேதான் வீட்டுப் பக்கம் வந்துடாத என்று சொல்ல மீனா நீ வீட்டுக்கு வாமா என்று சொல்கிறார். அடுத்து வீட்டுக்கு வந்த அண்ணாமலை வெளியிலிருந்து தண்ணீரை எடுத்து தலை மேல் ஊற்றிக் கொண்டு உள்ளே வர விஜயா ஆரத்தி எடுக்க நான் என்ன சாதனையா படைச்சிட்டு வந்து இருக்கேன்? மானமே போச்சு என புலம்புகிறார்.
பிறகு அண்ணாமலை தூங்கச் சென்றதும் ரவியை வெளுத்து வாங்க முத்து அங்கிருந்து கிளம்பி செல்ல மீனா வீட்டுக்கு வர விஜயா மீனாவை தடுத்து நிறுத்தி வெளியே போ என கழுத்தை பிடித்து தள்ள அதை அவர் சொல்லட்டும் என்று மீனா சொன்னதும் மனோஜை முத்துக்கு ஃபோன் போட சொல்ல முத்து நினைக்கிறேன் நான் மட்டும் இப்ப வீட்டுக்கு வந்தா அவ்வளவு தான் என்று அதிர்ச்சி கொடுக்க கேட்டல்ல வீட்டை விட்டு வெளியே போ இனிமேல் இந்த வீட்டுக்கு நீ வரவே கூடாது கோவில்ல போய் பூ கட்டுற வேலையை பாரு என துரத்தி விட மீனா அவரா வந்து கூப்பிடாமல் இனிமே நான் வரமாட்டேன் என்று கிளம்பி செல்கிறார்.
அதைத்தொடர்ந்து ரெஸ்டாரண்ட் வந்த முத்து ரவியை கேட்டு அங்கிருந்து பூச்சட்டியை எடுத்து உடைத்து அதற்கு பணம் கொடுத்து விட்டு பிறகு செக்யூரிட்டியிடம் பணம் கொடுத்து தன்னுடைய போன் நம்பரையும் கொடுத்து ரவி வந்தால் ஃபோன் பண்ணுமாறு சொல்லிவிட்டு வருகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions
Ram in Leela Official Trailer | Rio Raj | Vartika | Ankit Menon | Ramachandrran…
நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சமீபத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் மூலம் ரசிகர்களின்…
1991-ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம்,…
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே. பாலாஜி, மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “‘எல்.கே.ஜி’ படத்தைப் போல நிஜ…