sirakadikka aasai serial episode update 20-10-23
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் அண்ணாமலை போலீஸ் ஸ்டேஷன் சென்று எழுதிக் கொடுக்க கிளம்ப அவரை ஜிப்பில் உட்கார சொல்ல மனோஜ் நாங்க பின்னாடி வரோம் என்று சொல்ல போலீஸ் நாங்களே கூட்டிட்டு வந்து விட்டோம் என சொல்லி அழைத்துச் செல்கின்றனர்.
ஸ்டேஷனுக்கு சென்றதும் அண்ணாமலை இடம் மரியாதை இல்லாமல் பேசுகின்றனர். அண்ணாமலை நிச்சயமா என் பையன் தப்பு பண்ணி இருக்க மாட்டான் அவன் வீட்டுக்கு வந்ததும் நானே கூட்டிட்டு வரேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்ப உங்களை கைது பண்ணி கூட்டிட்டு வந்திருக்கும் அப்படியெல்லாம் போக முடியாது என அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.
உங்க பையன் இங்க வந்ததும் நீங்க போகலாம் என்று சொல்லி அவரை ஒரு ஓரமாக உட்கார வைத்து திரும்பத் திரும்ப ரவி பற்றி கேள்வி கேட்க அண்ணாமலை எனக்கு எதுவும் தெரியாது என்று பதில் சொல்ல ஒரு கட்டத்தில் அவரை பிடித்து ஜெயிலுக்குள் தள்ளுகிறார்கள்.
இன்னொரு பக்கம் மீனா விஷயம் அறிந்து ஸ்டேஷனுக்கு வந்து கொண்டிருக்கும் போது முத்துவுக்கு போன் செய்து ரவிக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்ற விஷயத்தை சொல்ல முயற்சி செய்ய சிக்னல் இல்லாமல் ஃபோன் கட் ஆகி விடுகிறது. மாமாவை ஸ்டேஷனுக்கு கூட்டி சென்று இருப்பதாக கேட்டு பதறி அடித்து ஓடி வருகிறார் முத்து.
பிறகு மீனா போலீசிடமும் அவர்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு என்ற உண்மையை சொல்ல முயற்சி செய்ய மீனாவை பேச விடாமல் தடுத்து விடுகின்றனர். முத்துவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து எங்க அப்பாவ விட்டுடுங்க என கெஞ்சியும் போலீஸ் விட மறுக்கின்றனர்.
அடுத்ததாக கோவிலில் விசாரித்து அங்கு இருந்து எடுத்து வந்த நோட்டை பார்த்து அவர்களுக்கு காலையிலேயே கல்யாணம் ஆயிடுச்சு இங்க மீனா என்பது யார் என்று கேட்க முத்து என் பொண்டாட்டி தான் என்று சொல்ல அவங்கதான் சாட்சி கையெழுத்து போட்டு இருக்காங்க என்று சொன்னதும் மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது. இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…