முத்து செய்த வேலை மீனா எடுத்த முடிவு .இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து, செல்வம் மற்றும் இன்னொரு டிரைவர் என மூவரும் பாருக்கு செல்ல முத்து வீட்டில் நடந்த விஷயத்தை சொல்லி புலம்பி கொண்டே வருகிறார்.

பாருக்கு வந்தவுடன் அங்கு ஒருவர் போனில் என்ன மன்னிச்சிடு மன்னிச்சிடு என தொடர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருக்க அதை கேட்ட முத்து கடுப்பாகி அவரை திட்டுகிறார். பிறகு அதிகமாக குடிச்சா அப்பாவுக்கு தெரிஞ்சுடும் அதனால லிமிட்டா குடிச்சிட்டு ஸ்டெடியா வீட்டுக்கு போயிடுறேன் என வீட்டுக்கு வருகிறார்.

மீனா சப்பாத்தி போட்டு கொண்டிருக்க வீட்டுக்கு வந்த முத்து எனக்கு சப்பாத்தி வேண்டாம் ரெண்டு முட்டை போட்டு ஆம்லெட் மட்டும் போட்டு கொடு என்று கேட்கிறார். முத்துவை பார்த்த மீனா கிச்சனுக்கு அழைத்து சென்று குடித்து இருக்கீங்களா என்று கேட்க முதலில் இல்லை என்று சொல்லும் முத்து பிறகு மீனா அதட்டி கேட்டதும் லைட்டா என்று சொல்லி நான் ஸ்டெடியா தான் இருக்கேன் என நடந்து காட்டுகிறார்.

அதனைத் தொடர்ந்து ரவி மற்றும் ஸ்ருதி வீட்டுக்கு வர மீனா சாப்பிட கூப்பிட வெளியே சாப்பிட்டு வந்துட்டோம் என்று சொல்ல முத்து உங்களுக்காக இவ்ளோ சப்பாத்தி போட்டு வச்சிருக்கான் நீங்க வெளியேவே சாப்பிட்டு வந்துட்டீங்கன்னா என்ன அர்த்தம்? சாப்பாடு வேண்டாம் னா வேண்டாம்னு போன் பண்ணி சொல்ல மாட்டீங்களா என்று கோபப்பட்டு ரவியை இழுத்து உட்கார வைத்து சப்பாத்தியை போட்டு வாயில் திணிக்க ஸ்ருதி கோபப்பட்டு திட்ட முத்துவுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

பிறகு அண்ணாமலை முத்துவுக்காக பேச வர அவர் சாதாரணமாக கேட்டிருந்தார் பிரச்சனை இல்லை குடிச்சிட்டு வந்திருக்கிறார் என்று ஸ்ருதி கோர்த்து விடுகிறார். இதனால் அண்ணாமலை தலை குனிந்து போய் உட்காந்து விட மீனா கண்ணீர் விட்டு நிற்கிறார்.

ரோகிணி இதெல்லாம் எங்களுக்கு பழகி போச்சு உனக்கு தான் புதுசு என முத்துவை அவமானப்படுத்தி பேசுவது போல் பேச என்னமோ நான் மட்டும்தான் குடிக்கிற மாதிரி சொல்றீங்க எல்லாம் இவனுங்களும் குடிகாரங்க தான் என்று ரவி மற்றும் மனோஜை கோர்த்து விடுகிறார். மூணு பேரும் மொட்டை மாடியில் ஒன்றாக உட்காந்து சரக்கு அடித்த விஷயத்தை சொல்ல சுருதி மற்றும் ரோகிணி அதிர்ச்சி அடைகின்றனர்.

ரவி சும்மா ஜாலிக்காக லைட்டா என்று சொல்லி சுருதியை சமாளிக்க மனோஜ் டேஸ்ட் பார்ப்பதற்காக குடித்ததாக சொல்ல எப்படி மூன்று பாட்டில் முழுசா குடிச்சு டேஸ்ட் பார்த்தியா என சிக்க வைக்கிறார் முத்து. பிறகு ஸ்ருதி ரவியை கூட்டிக்கொண்டு ரூமுக்கு செல்ல ரோகிணி மனோஜை கோபமாக இழுத்துச் செல்கிறார்.

விஜயா அமைதியா இந்த வீட்ல கொஞ்ச நேரத்துல எவ்வளவு பிரச்சனை பண்ணிட்டு இந்த சப்பாத்தியை நீங்களே உக்காந்து கொட்டிக்கங்க என்று திட்டி விட்டு செல்ல மீனா கண்கலங்கி ரூமுக்கு சென்று விடுகிறார்.

அங்கு வரும் முத்து இப்ப எதுக்கு அழுதுட்டு இருக்க வந்து சாப்பிடு என்று சொல்ல சாப்பாடு ஒன்னு தான் இப்போ குறை, நீங்க பண்ற தப்புக்கு எல்லாரும் முன்னாடியும் நான் தானே அவமானப்பட்டு நிற்கிறேன் என கோபப்படுகிறார். நான் லைட்டா தான் குடிச்சேன் என்று சொல்ல லைட்டா குடிச்சாலும் குடி குடி தானே, நீங்க குடிகாரன் தானே என்று திட்டுகிறார்.

அன்னைக்கு சாம்பார்ல பல்லி விழுந்ததுக்காக அப்படி திட்டினீங்களே அவ்வளவு பெரிய பாத்திரத்துல சாம்பார்ல நிறைய காய் இருந்தது அந்த ஒரு பல்லியை தூக்கி போட்டுட்டு சாப்பிட வேண்டியதுதானே என்று கேள்வி கேட்க அது விஷமாகிவிட்டது என்று முத்து பதில் சொல்ல அதே மாதிரி தான் அண்டாவுல குடிச்சாலும் கொஞ்சமா குடிச்சாலும் அதுவும் விஷம் தானே என்று பதிலடி கொடுக்கிறார்.

இப்ப நீங்க குடிச்சிட்டு வண்டி ஓட்டிட்டு வரீங்க யார் மேலயும் இடிக்காம ஸ்டெடியா தான் ஓட்டிட்டு வரீங்க ஆனால் வழியில் போலீஸ் புடிச்சா நீ நல்லா தான் வண்டி ஓட்டிட்டு விடுவாங்களா இல்ல ஃபைன் போடுவாங்களா என்று கேள்வி கேட்க முத்து பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka aasai serial episode update 19-12-23
jothika lakshu

Recent Posts

பிக் பாஸில் வைல்ட் கார்டில் பங்கேற்க போகும் இரண்டு பிரபலங்கள் யார் தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…

5 minutes ago

முத்து சொன்ன விஷயம், சத்யாவின் முடிவு என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் !!

தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதாவிற்காக அருண்…

29 minutes ago

Mysskin Speech at Mylanji Audio Launch

https://youtu.be/9ZN2NCgM4Ts?t=1

35 minutes ago

S A Chandrasekhar, Soundararajan, Poovaiyar Speech

https://youtu.be/3JsSvVdNKQI?t=1

39 minutes ago

நந்தினி சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி சொல்லும் பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

50 minutes ago

Oru Paarvai Paarthavanae video song

Oru Paarvai Paarthavanae - Video Song | OTHERS | Aditya Madhavan, Gouri | Abin Hariharan…

17 hours ago