sirakadikka aasai serial episode update 17-04-23
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் மீனாவின் வீட்டில் வெளியே சண்டை போட்ட முத்து கோபமாக பைக்கில் வீட்டுக்கு கிளம்ப தயாராக இருக்க மீனாவின் தங்கையிடம் உன் அக்கா வராலா இல்லையா என கேட்க இருங்க மாமா அக்காவை வர சொல்றேன் என சொல்லி சீதா மேலே போகிறார்.
மேலே மீனா இந்த ஆள் இப்படித்தான் இவனுக்கு என்ன கல்யாணம் பண்ணி வச்சு என் வாழ்க்கையை நாசமாக்கிட்டிங்க என அம்மாவிடம் அழுது புலம்பிக் கொண்டிருக்க அங்கு வரும் அவரின் தங்கச்சி மாமா உன்ன கூப்பிடறாரு என சொல்ல மீனா கிளம்பி போக சொல்லு, நான் அவரோட போகமாட்டேன் என சொல்ல மீனாவின் அம்மா அவரை சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார்.
வண்டியில் போகும்போது மீனா முத்துமிடம் ஹவுஸ் ஓனரை எதுக்கு அடிச்சிங்க என சண்டை போட அவர் எதுக்கு சண்டையில குறுக்க வந்தாரு அதான் அடிச்சேன் என முத்து கோபப்படுகிறார். அவர் எவ்வளவு நல்ல மனுஷன் தெரியுமா இதுவரைக்கும் வீட்டு வாடகை கூட ஏத்துனது கிடையாது என மீனா சொல்ல அதுக்கு இப்ப என்ன பண்ணனும் என ஆவேசப்படுகிறார்.
பிறகு இருவரும் வீட்டுக்கு வந்து இறங்க இவர்களை பார்த்த விஜயா ஒளிந்து கொள்கிறார். முத்து அங்க நடந்தது எதையும் அப்பாகிட்ட சொல்ல வேண்டாம் அவருக்கு இதெல்லாம் தெரிஞ்சா வருத்தப்படுவாரு என சொல்லி இருவரும் உள்ளே செல்ல விஜயா மனோஜை பார்க்க கிளம்பி செல்கிறார்.
வீட்டுக்கு வந்த மீனாவும் முத்துவும் அங்கு நடந்த சண்டையை எதுவும் காட்டிக் கொள்ளாமல் இருக்க முத்து அவங்க செயின் போட்டாங்க நல்லபடியாக கவனிச்சாங்க என சொல்ல அதைக் கேட்டு அவருடைய அப்பா சந்தோஷப்படுகிறார்.
மறுபக்கம் மனோஜ் பார்க்க வந்த விஜயா அவனிடம் 75 ஆயிரம் பணம் கொடுத்து வேலைக்கு போற வரைக்கும் இதை செலவுக்கு வச்சுக்க என சொல்கிறார்.
இங்கே மீனா வருத்தமாக படுத்துக் கொண்டிருக்க அங்கு வரும் முத்து எதுக்கு மூஞ்ச இப்படி வச்சுக்கிட்டு நீ படுத்துகிட்டு இருக்க? அப்பா அதுக்கும் நான் தான் காரணம் என்று என்னை திட்டுறதுக்கா என கோபப்பட மீனா நீங்க பண்றது தப்புன்னு உங்களுக்கு கொஞ்சம் கூட புரியவே புரியாதா என கேட்க இப்ப என்ன உனக்கு என்னை அடிக்கணும் போல இருக்கா என கோபப்படுகிறார்.
எனக்கு அப்படி யாரையும் காயப்படுத்த தெரியாது என சொல்ல முத்து அம்மா எங்கேயோ வெளிய போயிட்டாங்க, அப்பா என்ன சாப்பிடுகிறார் என்று கேட்டு போய் செஞ்சு கொடு என சொல்ல மீனா வெளியே வந்து அவருடைய மாமனாரிடம் காபி குடிக்கிறீர்களா என கேட்கிறார். மேலும் அத்தை எங்க போயிருக்காங்க என விசாரிக்க பார்வதிக்கு உடம்பு சரியில்லன்னு சாப்பாடு சமைச்சு எடுத்துட்டு போய் இருக்கா என சொல்கிறார்.
கிச்சனுக்கு வந்த மீனா பார்வதி அம்மா நம்பர் தான் கொடுத்திருக்காங்களே போன் போட்டு எப்படி இருக்காங்க எனக்கு விசாரிக்கலாம் என போன் போட்டு இன்னும் காய்ச்சல் சரியாக இல்லையா என கேட்க பார்வதி காய்ச்சலா எனக்கா என சொல்ல மீனா குழப்பம் அடைகிறார். பிறகு அத்தை தான் உங்களுக்கு உடம்பு சரியில்லன்னு சொன்னாங்களே என கேட்க விஜயா சொன்னாளா ஆமா எனக்கு உடம்பு சரியில்லை என சொல்ல மீனாவுக்கு சந்தேகம் வருகிறது. இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Dont Trouble The Trouble Tamil Trailer | Fahadh Fassil, Ssara | Bhairava | SS Rajamouli…
Ooroda Oththa Don Lyric Video | Baththa | Vijay Sethupathi | Sai Abhyankkar| Balaji Tharaneetharan
Yedhayya Saami Full Song | Ranabaali | Vijay Deverakonda, Rashmika | Rahul Sankrityan | Ajay–Atul
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…