sirakadikka-aasai serial episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ரோகிணி பணத்தை கொடுத்துவிட்டு ரூமுக்குள் சென்றதும் உள்ளே வரும் மனோஜ் அம்மாவிடம் பணம் கேட்டு நச்சரிக்க விஜயா கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொடுத்து சீக்கிரம் வேலைக்கு போ என்று திட்டுகிறார்.
பிறகு முத்து வீட்டுக்கு வந்ததும் அத்தைக்கு நாமளும் ஏதாவது காசு தரலாம் என்று கேட்க முத்து ஏன் அம்மா ஏதாவது கேட்டாங்களா என்று கேள்வி கேட்கிறார். இல்லங்க ரோகிணி உங்களுக்கு பாக்கெட் மணின்னு ஒரு ரூ. 5000 ரூபாய் கொடுத்தாங்க. மாசம் மாசம் இந்த மாதிரி தருவதா சொல்லி இருக்காங்க என்று சொல்ல முத்து எனக்கு என்னவோ இங்க பொண்ணு மேல சந்தேகமா இருக்கு. அப்பா சிங்கப்பூர்ல இருக்காரு மலேசியாவில் இருக்கார்னு கதையெல்லாம் விடுது ஆனா எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு என்று கூறுகிறார்.
அடுத்ததாக நைட்டு எல்லோரும் தூங்கிய பிறகு விஜயா அவசரமாக பாத்ரூம் செல்ல அவஸ்தப்படுகிறார். முதலில் ரவியின் ரூமை தட்ட அவர்கள் கதவை திறக்காமல் இருக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து மனோஜ் ரூமை தட்ட அவர்களும் கதவை திறக்காமல் இருக்க விஜய் இப்ப என்ன பண்றது என்ன தவிக்கிறார். பிறகு முத்து ரூம் கதவை தட்ட பாக்க அண்ணாமலை வேணா அவன் இப்பதான் வந்து படுத்திருப்பான் எழுப்ப வேண்டாம் என்று சொல்லி கீழே இருக்கும் பாத்ரூமுக்கு அழைத்துச் சென்று வருகிறார். பிறகு முத்து மீனாவுக்கு வெளியில ஒரு வீடு பார்த்து வாடகைக்கு வெச்சிடலாம். நீங்க என்ன முடிவு பண்ணி இருக்கீங்க அவங்க ஆளுக்கு ஒரு ரூம்ல இருக்காங்க. அவங்க அப்படியே இருக்கட்டும். நாம ஊர்ல அம்மா வீட்டுக்கு போயிடலாம் என்று சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார்.
அதை தொடர்ந்து பார்வதி வீட்டுக்கு வரும் விஜயா பாக்கெட் மணியாக ரோகிணி பணம் கொடுத்த விஷயத்தை பற்றி சொல்லி பெருமை கொள்ள நடு தெருவுக்கு வராமல் இருந்தா சரிதான் என்று பார்வதி மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார். மேலும் அந்த முத்துவையும் மீனாவையும் முத்துவையும் வீட்டை விட்டு போற மாதிரி வேலையை பண்ண போறேன் என சொல்கிறார்.
மறுநாள் காலையில் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக சமைக்க சொல்லி விஜய்யாவை யாரும் வாங்கிக் கொண்டிருக்க ரோகிணி எனக்கு இட்லி வேண்டாம் தோசை வேண்டும் என சொல்கிறார். ரெண்டு தோசை சாப்பிட்டு ஆப்பிள் சாப்பிட்டு போம்மா ஹெல்தியா இருப்ப என்று விஜயா ஆப்பிளை கட் பண்ண கழுவ செல்கிறார். அப்போது ஸ்ருதி வாழாவெட்டி சீரியல் மாமியார் பற்றி போனில் திட்டிவிட்டு எனக்கு மட்டும் இப்படி ஒரு மாமியார் கிடைச்சிருந்தா வாயிலேயே குத்தி இருப்பேன் என்று சொல்கிறார்.
பிறகு விஜயா என்னமா மாமியார் பற்றி இப்படி எல்லாம் பேசுற என்று கேட்க ஒரு ஏழை பெண்ணை அவர்கள் மாமியார் ரொம்ப கொடுமை படுத்துவாங்க அந்த இடத்துல நான் அந்த இடத்தில் இருந்தால் வாயிலேயே கத்தி விட்டு குத்தி இருப்பேன் என்று சொல்ல இதைக் கேட்ட மீனா கையில் கத்தியுடன் வந்து நிற்க விஜயா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…
Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…