sirakadikka-aasai serial episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி ஸ்ருதியோட உதவி நமக்கு தேவை அதனால அவ அவகிட்ட நல்லபடியா பேசிகிட்டு இருக்கேன் என்று சொல்லி வெளியே வருகிறார் ரோகினி.
அதன் பிறகு போட்டு முடித்துவிட்டு வெளியே வர உள்ளே வந்த மீனா புடவை மடிப்பை சரி செய்ய அங்கு வரும் விஜயா நீ என்ன பண்ணிட்டு இருக்க நீ என்ன ரோகினி மாதிரி பியூட்டிஷனா வெளியே போய் பாலை காய்ச்சுற வேலையை பாரு என துரத்தி விடுகிறார்.
ஸ்ருதி எதுக்கு மீனாவுக்கு நிறைய வேலை சொல்லிக்கிட்டு இருக்கீங்க எங்களுக்கு அதெல்லாம் வேண்டாம் என்று சொல்ல அதெல்லாம் அவ பண்ணலாமா எனக்கு பண்ண வராது அதனாலதான் அவகிட்ட சொல்றேன் என்று சொல்லி சமாளிக்கிறார்.
பிறகு மீனா பாலை காய்ச்சி வச்சிருக்க பழத்தை ரூமில் வைக்க போகும் சமயத்தில் கிச்சனுக்குள் வரும் முத்து மீனா தனக்காக தான் பால் காய்ச்சி வைத்திருப்பதாக நினைத்து எடுத்து குடித்து விட விஜயா அங்கு வந்து முத்துவை பிடித்து திட்டுகிறார். முத்து அசால்டாக இப்ப என்ன அவங்களுக்கு வெறும் தண்ணிய கொடுங்க போதும் என சொல்லி சென்று விடுகிறார்.
அதைத்தொடர்ந்து முத்து மேலே இருக்கும் போது ரவி அங்கு பேச வர வழக்கம்போல் கோபப்படுகிறார். எல்லாத்துக்கும் உன்னுடைய கோபம் தான் காரணம் என்று சொல்ல முத்து ரவியை அடிக்கப் பாய மனோஜ் வந்து தடுக்கிறார். ரெண்டு பேரும் சேர்ந்து உன்னுடைய கோபத்தால் தான் அப்பாவுக்கு இந்த நிலைமை என்று சொல்ல இருவரிடமும் சண்டைக்கு போகிறார் முத்து.
பிறகு இவர்கள் கீழே வந்து விட அண்ணாமலை வீட்டுக்கு வர வித்தியா சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்திருப்பதாக சொல்லி ஆசீர்வாதம் செய்ய சொல்கிறார். வீட்ல இருக்க எல்லாரையும் கூப்பிடு எல்லாரும் சேர்ந்து ஆசீர்வாதம் செய்வோம் என்று சொல்லி முத்து எங்கே என கேட்க மீனா அவர் மொட்டை மாடியில் இருப்பதாக சொல்ல விஜயா அவங்க ரூம்ல தான் சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன் என்று சொல்கிறார்.
சரி அவனையும் கூப்பிடு அவளும் ஆசீர்வாதம் பண்ணனும் என்று சொல்ல விஜயா வேண்டாம் என்று கூறுகிறார். ஸ்ருதியின் அவர் எதுக்கு அவர் எங்களை கிட்ட தான் செய்வாரு நீங்க ஆசீர்வாதம் பண்ணுங்க அங்கிள் என்று சொல்ல அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. இந்த வீட்ல எல்லாரை பத்தியும் நீ புரிஞ்சுக்கணும் என்று சொல்கிறார்.
மீனா முத்துவை கூப்பிட இங்கே ரோகினி மனோஜிடம் முத்து கண்டிப்பாக வந்து சத்தம் போடுவாரு பதிலுக்கு சுருதியும் சத்தம் போடவா நமக்கு நல்ல என்டர்டெயின்மென்ட் இருக்கு என சொல்லி ஆவலோடு காத்திருக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
திணை அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
The Raja Saab Tamil Trailer | Prabhas | Maruthi | Thaman S | TG Vishwa…
குக் வித் கோமாளி ஷோ குறித்து டைட்டில் வின்னர் ராஜூ பேசியுள்ளார் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இட்லி கடை படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம்…
தனது கணவர் குறித்து பரவும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பென்சி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி…
மாதவி திட்டம் ஒன்று போட, சுந்தரவல்லி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…