விஜயா சொன்ன வார்த்தை. பல்பு கொடுத்த மீனா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் முத்து தூக்கம் வராமல் தவிக்க கீழே இறங்கி வந்து மீனாவை எழுப்ப அவர் பதறுகிறார். பயப்படாதே நான் தான் எனக்கு தூக்கம் வரல நீ வா பேசிட்டு இரு என்று சொல்லி கூப்பிட எதுக்கு நான் வந்தா ஏதாவது சொல்லுவேன் நமக்குள்ள சண்டை வரும் வேண்டாம் நான் இங்கேயே தூங்கறேன் என்று சொல்ல முத்து நீ வா என இழுத்துச் செல்கிறார்.

பிறகு மொட்டை மாடிக்கு சென்றதும் இது கூட நல்லா தான் இருக்கு என்று மீனா செல்கிறார். ஆனா கொஞ்சம் குளிர மாதிரி இருக்கு என்று சொல்ல முத்து அதான் நான் இருக்கேன் இல்ல என பதில் கூறுகிறார். மீனா எனது என்று திருப்பி கேட்க ஒன்னும் இல்லை என்று சமாளித்து விடுகிறார். பிறகு முத்து நீ நிறைய எல்லாம் வேலை செய்யாத எல்லாரையும் வேலை செய்ய சொல்லு அப்பாவும் மட்டுமே நல்லபடியா பாத்துக்கோ என்று சொல்லிக் கொண்டே இருக்க மீனா அதைக் கேட்டுக் கொண்டு தூங்கி விடுகிறார்.

மறுநாள் காலையில் விஜயா காபி போட்டாச்சா என்று கேட்டு ரவிக்கு எடுத்துச் செல்ல மீனா எதையோ சொல்ல வர அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் என்று வந்துவிடுகிறார். பிறகு ரவிக்கு காபி கொடுத்துவிட்டு ஸ்ருதி எங்கே என்று கேட்க அவ கிளம்பி போயிட்டா என்று சொன்னதும் சண்டை போட்டுவிட்டு வீட்டுக்கு போய் விட்டதாக நினைத்து விஜயா பதறுகிறார். இல்லம்மா வேலைக்கு போயிட்டா என்று ரவி சொன்னதும் ஏன் ஒரு வார்த்தை சொல்லிட்டு போக மாட்டாளா மாமியார்னு இந்த வீட்டில நான் எதுக்கு இருக்கேன் என்று கோபப்படுகிறார்.

பிறகு அண்ணாமலை வந்ததில் அவரிடமும் இதைப் பற்றி குறையாக சொல்லிக் கொண்டிருக்க வெளியே வரும் ரோகிணி நானே காபி கேட்கலாம் என்று நீங்களே போட்டு வச்சுட்டு இருக்கீங்க என்று சொல்லி எடுக்க மனோஜ் எனக்கு காபி இல்லையா என்று கேட்க அது ஸ்ருதிக்காக எடுத்து வந்தேன் என்று சொன்னதும் ரோகிணி சாரி சொல்லி காபி கீழே வைக்க அவ தான் கிளம்பி போயிட்டாலே நீ குடிமா என்று சொல்கிறார்.

பிறகு மீனா வெளியே வந்து வர இவளுக்கு ஸ்ருதி சொல்லாம போனான்னு தெரிஞ்சா நம்மல மதிக்க மாட்டா என்று நினைத்து இங்கிலீஷ்ல நேத்து ஏதோ சொன்னா எனக்கு இப்பதான் ஞாபகம் வருது என்று சொல்லி சமாளிக்க முயற்சி செய்ய மீனா இல்லாத என்கிட்ட சொல்லிட்டு தான் போனாங்க அத்தை கிட்ட சொல்லல நீங்க சொல்லிடுங்கன்னு சொன்னாங்க என்று சொல்லி பல்பு கொடுக்கிறார்.

இருந்தாலும் விஜயா அதெல்லாம் என்கிட்ட சொல்லிட்டு தான் போனேன் நீங்க போய் உங்க வேலைய பாருங்க என்று நைசாக நழுவி கொள்கிறார். பிறகு முத்து கீழே வர மீனா கீழ இருக்க பாத்ரூம்ல குளிச்சிட்டு வாங்க என்று சொல்ல நான் பாத்துக்குறேன் என்று ரூமுக்குள் சென்று ரவி மற்றும் கேஸை வெளியே எடுத்து வந்து வைத்து துரத்தி விடுகிறார்.

அடுத்து விஜயா வந்து ரவி ரோகினி மனோஜ் ஆகியவரை கூட்டி சென்று சாப்பிட அவர் சாப்பிட்டாரா என்று மீனாவிடம் கேட்க மாமா சாப்பிட்டு வெளியே கிளம்பிட்டாரு என்று சொல்ல அதெல்லாம் சொல்லிட்டு தான் போனாரு என்று சொன்னது எல்லோரும் விஜய் அவை பார்க்க விஜயா உண்மையாக சொல்லிட்டு தான் போனாரு என்று கூறுகிறார். பிறகு முத்து வர மீனா சாப்பிட வாங்க என்று கூப்பிட நான் இங்கேயே உக்காந்து சாப்பிடுகிறேன் என்று சொல்லி ஹாலில் உட்கார்ந்து சாப்பிடுகிறார்.

முத்து வேக வேகமாக சாப்பிடுவதை பார்த்துவிட்டு மனோஜ் இவ்வளவு வேகமா எதுக்கு சாப்பிடறான்? கார் ஓட்ட தானே போறான் என்று கேட்க ரோகினி அதானே நீயும் நானும் ஷோரூம் போகணும் உங்களுக்கு வேலை நிறைய இருக்கும் என்று சொல்ல ஆமா எனக்கு நிறைய கிளைண்ட் காத்துகிட்டு இருப்பாங்க என்று சொன்னது விஜயா ஷாக்காகி பார்க்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka aasai serial episode update 12-12-23
jothika lakshu

Recent Posts

பைசன் : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…

1 hour ago

எலிமினேஷன் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி.. வெளியேறப் போவது யார்? வெளியான முதல் ப்ரோமோ.!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

2 hours ago

கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

15 hours ago

போட்டியாளர்கள் சொன்ன பதில், பார்வதி கொடுத்த ரியாக்ஷன், வெளியான நான்காவது ப்ரோமோ.!!

இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

15 hours ago

டியூட் திரைவிமர்சனம்

பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…

23 hours ago

டீசல் திரைவிமர்சனம்

வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…

23 hours ago