மீனாவை திட்டிய விஜயா. முத்து சொன்ன வார்த்தை.இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து வீட்டில் சாப்பிடாமல் வந்து டீ குடித்துக் கொண்டே இருக்க செல்வம் இதுக்கு ஒழுங்கா வீட்ல சாப்பிட்டு வந்து இருக்கலாம் இல்ல என கூறுகிறார்.

இந்த நேரத்தில் மீனா மத்தி மீன் குழம்பு மீன் வருவல் என எல்லாவற்றையும் செய்து எடுத்துக் கொண்டு வந்து சாப்பிட கூப்பிட முத்து எனக்கு ஒன்னும் வேண்டாம் என கூறுகிறார். எவ்வளவு கோபம் இருந்தாலும் என்ன திட்டுங்க இல்ல அடி கூட அடிங்க ஆனா சாப்பிடாம இருக்காதீங்க என்று கூப்பிட முத்து எனக்கு வேண்டாம் என உறுதியாக இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து மீன் குழம்பு என்ன சொன்னது முத்துவின் நண்பர்கள் மூன்று பேரும் சாப்பிட ஓடிச் சென்று விட மீனா நீங்க சாப்பிடுங்க அவருக்கு பசிச்சா சாப்பிடட்டும் தனியா ஒரு பாக்ஸ்ல கொண்டு வந்து இருக்கேன் என எடுத்து வைத்துவிட்டு வீட்டுக்கு வரும்போது இந்த பாக்ஸ் எல்லாம் கொண்டு வந்துடுங்க என சொல்லி கிளம்பி செல்கிறார்.

ஓடி வந்து சாப்பாட்டை எடுத்து கொண்டு அப்பா சாப்பாடு வேஸ்ட் பண்ண கூடாதுன்னு சொல்லி இருக்காரு அதனால சாப்பிடுறேன் என்று சொல்லி ரசித்து ருசித்து சாப்பிடுகிறார். அதைத்தொடர்ந்து விஜயா பார்வதியிடம் வாங்கிய பணத்தை மனோஜிடம் கொடுத்து இந்த ரோகிணி கிட்ட கொடு சீக்கிரம் ஒரு வேலையை தேடிக்க என சொல்லி கொடுக்கிறார்.

பிறகு மனோஜ் ரோகினியிடம் பணத்தை கொடுத்து விட்டு ஆபீஸ் கலந்த அவர் பிஏவுக்கு போன் செய்து 25 ஆயிரம் இருக்கு நான் உனக்கு அக்கவுண்ட்ல அனுப்பி விடுகிறேன் என்று கூறுகிறார். இதோட என்ன டிஸ்டர்ப் பண்ணாத என்று சொல்ல அது எப்படி முடியும் இந்த மாசத்தோட டன் ஓவர் அடுத்த மாசம் போன் பண்ணுவேன் பணம் கொடுக்கலைன்னா உன்னுடைய பிளாஷ்பேக் எல்லாத்தையும் ஓபன் பண்ணி விடுவேன் என மிரட்ட ரோகினி கண்கலங்கி அழுகிறார்.

பிறகு முத்து அண்ணாமலைக்கு மாத்திரை கொடுக்க எல்லோரும் பக்கத்தில் உட்கார்ந்து இருக்க பாட்டி போன் அண்ணாமலை குறித்து நலம் விசாரிக்க இப்போ உடம்பு பரவாயில்ல என கூறுகிறார். அதோட பாட்டு முத்துமீனா மற்றும் மனோஜ் ரோகினிக்கு தல தீபாவளி என்பதால் பணம் அனுப்பி இருக்கேன் அவங்களுக்கு டிரஸ் எடுத்துக் கொடு என கூறுகிறார். மேலும் குடும்பத்தோடு ஊருக்கு வர சொல்ல அண்ணாமலை இப்போதைக்கு வர முடியாது எல்லாருக்கும் வேலை இருக்கு பொங்கலுக்கு வருவோம் என கூறுகிறார். பிறகு பாட்டி ரவிக்கு ஒரு பொண்ணு பார்த்து வச்சிருக்கேன். மீனா மாதிரியே தங்கமான பொண்ணு என்று சொல்லி ஃபோனை வைக்க விஜய்யா இவ தங்கமா தகரம்னு நமக்கு தானே தெரியும் உங்க அம்மா கிட்ட சொல்ல வேண்டியது தானே என்று சொல்ல எல்லோரும் ஆமா இவள பத்தியும் பாட்டி தெரிஞ்சுக்கணும் என முத்து கூறுகிறார்.

அண்ணாமலை அதெல்லாம் அவங்க கிட்ட எப்ப சொல்லணும்னு எனக்கு தெரியும் அதுவரைக்கும் யாரும் எதுவும் வாய் திறக்க கூடாது என சொல்லி விடுகிறார். பிறகு எல்லோருக்கும் டிரஸ் எடுத்துக் கொடுக்க சொல்லி விஜய்யாவிடம் சொல்ல ரோகிணி இப்ப எதுக்கு மாமா அதெல்லாம் என சொல்ல இதுதான் நான் பார்த்த மருமக என விஜயா பெருமையாக கூறுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka aasai serial episode update 08-11-23
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

3 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

3 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

3 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

3 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

3 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

3 days ago