sirakadikka aasai serial episode update 03-10-23
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ரவியை இன்னைக்கு வேலைக்கு போகாத என சொல்லிக் கொண்டிருக்க முத்து பொண்ணு யாரு வேனா இருக்கட்டும் ஆனால் அந்த குடும்பம் அப்பாவுக்கு மரியாதை கொடுக்கிற குடும்பமா இருக்கணும் என சொல்ல ரவி மற்றும் விஜயா என இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
ரவி எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என சொல்ல முத்து முதல்ல பொண்ணு வரட்டும் பார்க்கலாம் அதுக்கப்புறம் உனக்கு தோன்றுவதை சொல்லு, இப்போ ஃப்ரீயா விடு என கூறுகிறார். மறுபக்கம் ஸ்ருதியின் அப்பா அம்மா ஸ்ருதியை அழைத்துக் கொண்டு பிஜு வீட்டுக்குச் செல்ல அப்போதுதான் அவருக்கு கல்யாணம் ஏற்பாடுகள் நடக்கும் விஷயம் தெரிய வருகிறது.
பிறகு பிஜூ ஸ்ருதியிடம் தனியாக பேச வேண்டும் என சொல்லி அழைத்துச் சென்று இருவரும் பேச அப்போது ஸ்ருதி நீங்க என்ன பிசினஸ் பண்றீங்க என்று கேட்கும் போது சிலை கடத்தல், போதை பொருள் கடத்தல், தங்கம் வைரம் போன்றவை கடத்தல் என சொல்ல அதை கேட்டு சுருதி அதிர்ச்சி அடைகிறார்.
டப்பிங் ஸ்டுடியோவில் வேலை இருப்பதாக சொல்லி அங்கிருந்து கிளம்பி வருகிறார் ஸ்ருதி. மறுபக்கம் பார்வதி விஜயா வீட்டுக்கு வர மீனா எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்க விஜயா மீனாவை கூப்பிட்டு இன்னைக்கு பேசவே கூடாது என கூறுகிறார். முத்துவை வெளியே அனுப்பிட்டியா என கேட்க உங்க புள்ள கிட்ட நீங்களே சொல்லுங்க என மீனா செக் வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து பெண் வீட்டார் வீட்டுக்கு வர விஜயா அவர்களை கூப்பிட்டு வைத்து உபசரிக்க மீனாவின் தோழி நீ இன்னமும் அப்படியே காலேஜ்ல பார்த்த மாதிரி இருக்கு என்று சொன்னதும் முத்து சிரிப்பு தாங்காமல் சிரித்து விடுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்’.…