sirakadikka aasai serial episode update 01-11-23
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் மீனா அதனுடைய அம்மா மற்றும் சீதாவிடம் ஒரு குறி சொல்லும் பெண்மணியை வந்து சந்திக்க அவர் மந்திர கயிறு ஒன்றைக் கொடுத்து மாமனார் வீட்டுக்கு எந்த ஆபத்து வராது என்று சொல்லி அனுப்புகிறார்.
மறுபக்கம் முத்து பணத்திற்காக வேக வேகமாக கந்து வட்டிக்காரர்களை வந்து சந்தித்து 4 லட்சம் ரூபாய் பணம் கேட்க அவர் டாக்குமெண்ட் என்ன கொண்டு வந்திருக்க என்று கேட்கிறார். வீட்டு பக்கத்துல காணோம்னா சாயங்காலத்துக்குள்ள தேடிக் கொண்டு வந்து கொடுத்துவிடுகிறேன் பணத்தை கொடுங்கள் என் அப்பா உயிரை காப்பாத்தணும் வட்டி எவ்வளவு வேணா போட்டுக்குங்க என விட்டு கெஞ்சி கூத்தாட அந்த கஞ்சி வட்டிக்காரர் நாளைக்கு உங்க அப்பா செத்துப்போயிட்டா நான் எப்படி பணத்தை வாங்குவது என அதிர்ச்சி கொடுக்க முத்து உன் பணமும் வேண்டாம் ஒன்னும் வேணாம் எனக்கு தெரியும் என்று அங்கிருந்து கிளம்பி வருகிறார்.
அதைத்தொடர்ந்து மீனா அம்மாவையும் சீதாவையும் வீட்டுக்கு போக சொல்லிவிட்டு அண்ணாமலையை பார்க்க ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வர சீதா ரவிக்கு போன் செய்து அப்பா ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை சொல்கிறார். ரவி உடனே அங்கிருந்து கிளம்ப ஸ்ருதி செலவுக்காக 2 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து அனுப்புகிறார்.
அதன் பிறகு முத்து காரை நிறுத்திவிட்டு ஓரிடத்தில் கலங்கி நிற்க அங்கு மரத்தின் அடியில் ஒரு விநாயகர் சிலை வீசப்பட்டு இருக்க அதன் அருகே சென்று கண்ணீர் விட்டு கலங்குகிறார். அந்த நேரம் பார்த்தேன் மெக்கானிக் போன் செய்து உன் கார் ரெடியாயிடுச்சு, புது கார் மாதிரி ரெடி பண்ணிட்டேன் அதை பார்த்துட்டு ஒருத்தர் நாலு லட்ச ரூபாய் கொடுக்கிறேன் சொன்னாரு என்று விஷயத்தை சொல்ல முத்து காரை விற்க முடிவெடுக்கிறார்.
செட்டுக்கு சென்றதும் கணபதி என்பவர் வந்து பணத்தை கொடுத்து காரை வாங்கிக் கொள்ள விட்டு அங்கிருந்து ஹாஸ்பிடல் ஓடி வந்து பணத்தை கட்ட மனோஜ் ரூபாய் பணம் தேவைப்படும் என்று சொல்ல விஜயா தனது நகைகள் மொத்தத்தையும் கழட்டி கொடுக்கிறார். இதை வைத்து பணத்தை ரெடி பண்ணிட்டு வா என்று சொல்லி அனுப்ப முத்து கிளம்பி செல்கிறார். இதை எல்லாம் மீனா மறைந்து நின்று பார்த்து கண் கலங்குகிறார்.இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…