புலம்பிய முத்து. விஜயா எடுத்த முடிவு. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி ஒரு கடையை பார்த்து கடை பிடித்திருக்கு, இந்த கடை எல்லாத்துக்கும் சூப்பரா செட் ஆகும் என தன்னுடைய தோழியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பிறகு கடை ஓனர் வந்து 30,000 வாடகை பத்து மாசம் வாடகையை அட்வான்ஸ்ஸா கொடுத்துடனும் என சொல்ல ரோகிணி நாளைக்கு பணத்தை கொடுத்துடுறேன் என்று சொல்கிறார். பிறகு ரோகிணியின் தோழி பணத்துக்கு என்ன பண்ண போற என கேட்க அதெல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு, இப்போதைக்கு பியூட்டி பார்லருக்கு என்ன பெயர் வைக்கலாம்னு மட்டும் யோசி என சொல்கிறார்.

மறுபக்கம் அண்ணாமலை மீனாவிடம் நாளைக்கு நீங்க ஊருக்கு போறீங்க என சொல்கிறார். பிறகு அவர் அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்க அப்போது முத்து வந்து பாட்டியா என கேட்க பிறகு அவர் முத்துவிடம் நாளைக்கு நீயும் மீனாவும் பாட்டி ஊருக்கு போயிட்டு ஒரு 4 நாள் இருந்துட்டு வாங்க என சொல்ல இவளோடவா நான் போகல என முத்து மறுப்பு தெரிவிக்க பிறகு அவரது பாட்டி பேச மறுக்க முடியாமல் ஓகே சொல்கிறார். ‌‌‌‌

பிறகு முத்து தன்னுடைய நண்பர்களுடன் பாட்டி வீட்டுக்கு போறேன் என சொல்ல அவர்கள் போயிட்டு சந்தோஷமா இருந்துட்டு வா என சொல்கின்றனர். அவளை கூட்டிட்டு போறேன் எங்க சந்தோஷமா இருக்கிறது என முத்து புலம்புகிறார்.

இன்னொரு பக்கம் விஜயா பார்வதி வீட்டுக்கு சென்று ஒரு பிரச்சனை தீர்ந்து விட்டது, ஒரு வழியாக முத்து ஊருக்கு போக ஓகே சொல்லிட்டான். ஆனா இன்னொரு பிரச்சனை என ரோகினி பணம் கேட்ட விஷயத்தை பற்றி சொல்ல எனக்கு தெரிஞ்ச பைனான்ஸ் கம்பெனி ஒன்னு இருக்கு அங்க உன்னோட வீட்டு பத்திரத்தை வைத்து பணம் வாங்கிக்கலாம். வட்டியையும் பணத்தையும் கட்டி விட்டு பத்திரத்தை மீட்கலாம் என சொல்ல விஜயா முதலில் பயப்பட பிறகு வேறு வழி இல்லாமல் சரி என சொல்கிறார்.

அதன் பிறகு மீனாவும் முத்துவும் ஊருக்கு கிளம்ப விஜயா சந்தோஷப்பட அண்ணாமலை தன்னுடைய அம்மாவுக்கு போன் போட்டு கிளம்பிட்டாங்க என சொல்ல அவர் வரும்போது அவங்க ரெண்டு பேரும் நரம்பும் சதையுமா ஒண்ணா சேர்ந்து தான் வருவாங்க என வாக்கு கொடுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka-aasai-episode-update
jothika lakshu

Recent Posts

கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

50 minutes ago

சன் டிவியில் மூன்று சீரியல்கள் இணையும் மெகா சங்கமம்..!

சன் டிவியின் மூன்று சீரியல்கள் மெகா சங்கமமாக இணைய உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென…

2 hours ago

சுந்தரவல்லி வளையில் சிக்கிய சூர்யா, நந்தினிக்கு விழுந்த அறை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

2 hours ago

தளபதி விஜய்க்கு திரிஷா சொன்ன வாழ்த்து..!

விஜய்க்கு திரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. ஜோடி படத்தின் மூலம்…

9 hours ago

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஃபைனலிஸ்ட் யார் தெரியுமா?முழு விவரம் இதோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது…

9 hours ago

மதராசி : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

10 hours ago