முத்துவால் ரோகினி எடுத்த முடிவு. அதிர்ச்சியில் மனோஜ். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவை கிலோ கணக்கில் வாங்கி இருக்க இதெல்லாம் எதுக்கு வாங்கினீங்க என்று கேள்வி கேட்க விஜயா ரோகிணிக்காக வாங்குனது, அதெல்லாம் சாப்பிட்டா தானே நல்லா ஆரோக்கியமா இருக்க முடியும் என்று சொல்ல இதெல்லாம் நாங்க சாப்பிடலையே ஆரோக்கியமா தானே இருக்கோம். அப்பா இவ்வளவு நாளா நீ சம்பாதித்து இந்த குடும்பத்துக்கு போட்ட உனக்கு இதெல்லாம் வாங்கி கொடுத்து இருக்காங்களா என்று கேட்க அவர் இல்லையே என்று பதில் சொல்கிறார்.

ரோகினி இதெல்லாம் எனக்கு மட்டும் ஒன்னும் வாங்கல இந்த வீட்ல இருக்க எல்லாருக்கும் சேர்த்து தான் வாங்கினேன் என்று சொல்ல இதெல்லாம் சாப்பிட்டு எங்களுக்கு பழக்கமில்லை என பதில் அளிக்கிறார். இன்னொரு பாக்ஸை திறந்து பார்க்க அதில் முழுக்க முழுக்க மேக்கப் பொருட்களாக இருப்பதை பார்த்து அதோட பில்லு மட்டும் 2000 என ஷாக் ஆகிறார் முத்து. மொத்தம் உங்களுக்கு மட்டுமே 3 ஆயிரம் செலவாகி இருக்கு என்று சொல்ல அதுக்கு என்னடா இப்போ என மனோஜ் கேள்வி கேட்க உன் பொண்டாட்டிக்கு நீ உன் காசுல வாங்கி கொடு உன் பொண்டாட்டிக்கு நான் எதுக்கு வாங்கி தரணும் என்று கேள்வி கேட்டு அவமானப்படுத்துகிறார்.

மனோஜ் பதில் ஏதும் சொல்லாமல் இருக்க இவனே தண்டசோறு இதுல இவங்களுக்கு வேற இவ்வளவு செலவு பண்ணனுமா என்று முத்து கேள்வி கேட்க ரோகிணிக்கு கோபம் வந்து போதும் நிறுத்துங்க ரொம்ப ஓவரா பேசாதீங்க உங்களுக்கு என்ன பணம் தானே வேணும் என்று ரூமுக்கு போகும் ரோகிணி பணத்தை எடுத்து வந்து கொடுக்க பார்க்க மனோஜ் அதெல்லாம் நீ கொடுக்காத அப்படி பழக்கப்படுத்திட்டா அதுவே வாடிக்கை ஆகிடும் என்று சொல்ல மனோஜை முறைத்துப் பார்த்துவிட்டு ரோகிணி பணத்தை எடுத்து வந்து கொடுக்க அண்ணாமலை, விஜயா என எல்லோரும் பொறுமையாக இருக்க சொல்கின்றனர்.

ரோகினி எங்களுக்கும் சுயமரியாதை இருக்கு என்று சொல்ல விஜயா அவன் அப்படித்தான் பேசுவான் ஆனா பணமெல்லாம் வாங்க மாட்டான் என்று சொல்ல முத்து யார் சொன்னது நான் வாங்கிப்பேன் என்று ஷாக் கொடுத்து ரோகினிடமிருந்து பணத்தை வாங்கிக் கொள்கிறார். திரும்ப இப்படி எல்லாம் பேசாதீங்க என்று ரோகினி சொல்ல அடுத்த மாதம் இந்த மாதிரி வாங்கினால் பேசுவேன் என பதிலடி கொடுக்கிறார்.

பிறகு ரோகிணி ரூமுக்கு சென்று விட மனோஜ் சமாதானம் செய்ய வர உங்க தம்பி அவ்வளவு பேசுறாரு ஆனா நீங்க ஒரு வார்த்தை கூட பேசாம நிக்கிறீங்க உங்கள பத்தி பேசும்போது பேசல சரி என்ன பத்தி பேசும் அதாவது நீங்க பேசலாம்ல என்று சொல்ல நான் தான் பேசணுமே என்று மனோஜ் சொல்ல என்ன பேசினீங்க என்று கேள்வி கேட்டு திட்டுகிறார். விஜயா சமாதானம் செய்ய வர அடுத்த மாசத்துல இருந்து மனோஜோட மொத்த சம்பளத்தையும் குடும்ப செலவுக்கு கொடுத்து விடுகிறேன் என்று சொல்ல அதிர்ச்சி அடைகின்றனர்.

மனோஜ் எனக்கு வேலை இருக்கு நான் கிளம்புறேன் என அப்படியே நைசாக நழுவி கொள்கிறார். முத்து மீனாவை ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்துச் செல்ல வழியில் சென்னைக்கு வந்த ரோகினியின் அம்மா மயக்கம் போட்டு விட முத்துவும் மீனாவும் அதை பார்த்து ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்று அட்மிட் செய்கின்றனர்.

கிரிஷ் இடம் யார் வீட்டுக்கு வந்தீங்க என்ன ஏது என்று விசாரிக்க ரோகினி சொன்ன விஷயங்களை நினைவுபடுத்தி எனக்கு தெரியாது என்று சொல்லி விடுகிறான். டாக்டர் அவங்க 24 மணி நேரம் ஹாஸ்பிடல் தான் இருக்கணும் அதுக்கு அப்புறம் தான் எதுவும் சொல்ல முடியும் என்று சொல்ல இவர்கள் கிருஷ்ஷை வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


sirakadikka-aasai-episode-update
jothika lakshu

Recent Posts

திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

14 hours ago

இட்லி கடை திரைவிமர்சனம்

தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…

14 hours ago

விருது வாங்கிய ஜீவி பிரகாஷிற்கு ஏ ஆர் ரகுமானின் அன்பு பரிசு..!

ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…

17 hours ago

மருமகள் சீரியல் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்.. வெளியான புதிய நேரம்.!

விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…

20 hours ago

இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் இதோ உங்களுக்காக.!!

இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

20 hours ago

ரோகினி போட்ட திட்டம், விஜயாவுக்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…

22 hours ago