விஜயா போட்ட பிளான். முத்து கொடுத்த ஷாக். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் பார்வதி ஆடி மாதத்தை வைத்து முத்து மீனாவை பிரிக்க ஐடியா கொடுத்த நிலையில் விஜயா மீனாவின் அம்மாவுக்கு நடுராத்திரி ஒரு மணிக்கு போன் செய்து ஆடி மாசத்துக்கு பொண்ணு கூட்டிட்டு போகணும்னு தெரியாதா என சத்தம் போட்டு நாளைக்கு காலையில வந்து கூட்டிட்டு போங்க என்று உத்தரவு போடுகிறார்.

மறுநாள் காலையில் விஜயா மீனா கிளம்புவதற்கு முன்பாக எல்லா வேலைகளையும் வாங்கி விட வேண்டும் என அடுக்கடுக்காக வேலைகளை சொல்லி பாடுபடுத்துகிறார். அதன் பிறகு மீனாவின் அம்மாவும் சீதாவும் வீட்டிற்கு வருகின்றனர்.

ஆடிக்கு அழைக்க வந்ததாக சொல்ல அண்ணாமலை இதெல்லாம் எதற்கு இப்ப எல்லாம் காலம் மாறிப்போச்சு என்று சொல்ல சம்பிரதாயம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா? நாங்க கூட மறந்து போயிட்டோம் சம்மந்தி அம்மா தான் நைட் ஒரு மணிக்கு போன் பண்ணி ஞாபகப்படுத்தினாங்க என்று சொல்ல விஜயாவின் சதி வேலைகள் அம்பலமாகிறது.

அதனைத் தொடர்ந்து ரோகினி வெளியே வர அவரிடம் நீ ஆடிக்கு அம்மா வீட்டுக்கு போகலையா என்று கேட்டு விஜயாவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார் மீனாவின் அம்மா. மலேசியாவில் அப்படி எதுவும் கிடையாது என சொல்லி ரோகிணி சமாளிக்க நீ வேணா எங்க வீட்டுக்கு வந்துடு, நான் உன்னை பார்த்துக்கிறேன் என்று சொல்லி கூப்பிட விஜயா அவ எதுக்கு அந்த குருவி கூட்டுக்கு வரணும்? அவ மாளிகையில் வாழ்ந்த பொண்ணு என பதிலடி கொடுக்கிறார்.

அடுத்ததாக முத்து வீட்டுக்கு வர அவரிடம் மீனாவை ஆடிக்கு கூட்டிட்டு போக வந்ததாக சொல்ல அது எதுக்கு ஆடி மாசம் கூட்டிட்டு போகணும் என்று கேள்வி கேட்க இந்த மாசத்துல புதுசா கல்யாணம் ஆன புருஷன் பொண்டாட்டி பிரிஞ்சு தான் இருக்கணும் என சொல்கின்றனர். ஆல்ரெடி நாங்க அப்படித்தானே இருக்கோம், நேத்து கூட நான் கீழ பாய் போட்டு தான் படுத்துட்டு இருந்தேன் என சொல்ல மீனாவின் குடும்பம் அதிர்ச்சி அடைகிறது, அதே சமயம் விஜயாவுக்கு சந்தோஷம் பொங்குகிறது.

பிறகு ஆடி மாதம் எதுக்கு பிரிந்து இருக்கணும் என காரணம் கேட்க அண்ணாமலை விளக்கம் சொல்ல அப்பா இதெல்லாம் நீ முன்னாடியே சொல்ல மாட்டியா என்று முத்து பதற மீனாவுக்கு முத்துவுக்கு இடையே நெருக்கம் இருப்பதை எல்லோரும் புரிந்து கொண்டு சந்தோஷப்படுகின்றனர். இன்னொரு பக்கம் சீதாவும் ரவி பேசிக் கொள்வதை பார்த்து விஜயா டென்ஷன் ஆகிறார்.

அடுத்ததாக மீனா எல்லோரிடமும் கிளம்புவதாக சொல்லிவிட்டு கிளம்பும்போது அவருடைய அம்மா ரோகினியிடமும் சொல்லிட்டு வா என்று சொல்ல மீனா கதவை தட்ட ரோகிணி டிபன் ரெடியா என கேட்க முத்து அவ என்ன ஹோட்டலா நடத்துறா? ரெடியா இல்லையான்னு கிச்சனுக்கு போய் பார்க்க சொல்லுங்க என கோபப்படுகிறார். இல்ல நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன் என்று சொல்லி மீனா கிளம்ப முத்து மீனாவை வழி அனுப்பி விட்டு ஏக்கத்தோடு பார்க்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka-aasai-episode-update
jothika lakshu

Recent Posts

பைசன்: 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…

6 hours ago

டியூட்: 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்.!!

டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

7 hours ago

சண்டை போட்ட சீதா, விட்டுக்கொடுத்த முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…

8 hours ago

சூர்யாவை திருத்த நந்தினி எடுக்க போகும் முடிவு என்ன?வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

8 hours ago

டாஸ்கில் கோபப்பட்ட ஆதிரை, வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

9 hours ago

குறைந்த விலையில் நிறைய துணிகளை வேலவன் ஸ்டோரில் வாங்கி தீபாவளி ஷாப்பிங் செய்த எதிர்நீச்சல் ஷெரின்!

தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது…

2 days ago