Sirakadikka Aasai Episode Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அண்ணாமலைக்கு பென்ஷன் பணம் மொத்தமும் கிடைக்க ரோகிணி வந்த ராசி தான் காரணம் என விஜயா சொல்ல முத்து அப்படின்னா அதே ராசியை வச்சு இவன் தூக்கிட்டு போன 27 லட்சத்தை கொடுக்க சொல்லுங்க பார்க்கலாம் என்று கேட்டு பதில் அடி கொடுக்கிறார்.
மனோஜை திருட்டு பையன் என்றெல்லாம் பேசி முத்து வெறுப்பேற்ற ரோகினி கடுப்பாகிறார். முத்துவிடம் அவரை மரியாதை இல்லாம பேசாதீங்க என்று சொல்ல இவ்வளவு பேசுறியே அப்படினா அவன் தூக்கிட்டு ஓடின 27 லட்சத்தை நீ குடு பார்க்கலாம் என்று கேட்டு ரோகிணியை ஆஃப் ஆக்குகிறார்.
அதன் பிறகு பாட்டிக்கு போன் செய்து அண்ணாமலை விஷயத்தை சொல்ல பிறகு முத்து பேசும்போது அவர் எல்லாம் மீனாவோட நல்ல ராசி தான். நடக்க வேண்டிய சடங்கு எல்லாம் நேரத்துக்கு கரெக்ட்டா நடந்தா எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று சொல்லும் பாட்டி 11 மாசத்துல ஒரு பேரப் புள்ளையை பெற்று கொடு என்று சொல்ல முத்து கனவில் நான்கு குழந்தை பிறந்த விஷயத்தைச் சொல்ல அதுவும் நல்ல சகுனம் தான் என்று சொல்கிறார்.
முத்து பெண் குழந்தையே வேண்டாம் செலவு அதிகம், ஏற்கனவே வாங்கன கடன் வட்டிக்கு மேல குட்டி போடுது இதுல இது வேறயா என்று பேச மீனா கோபித்துக் கொண்டு உள்ளே சென்று விடுகிறார். பிறகு முத்து ரூமுக்குள் வந்ததும் மீனா அவரிடம் சண்டை போட முத்து ஒரு வழியாக மீனாவை சமாதானம் செய்து சரி வா தூங்கலாம் என்று கூறுகிறார்.
உடனே மீனா இப்போ உங்களுக்கு பயமா இல்லையா என்று கேட்க முத்து பாயை எடுத்து தரையில் போட்டு படுத்து கொள்கிறார். இருவரும் கொஞ்ச நேரத்தில் தலையணையை வைத்து சண்டை போட்டு சந்தோஷமாக சிரித்துக் கொள்ள அந்த சிரிப்பு சத்தம் கேட்டு விஜயா இவ ரோகிணிக்கு முன்னாடி புள்ளை பெத்துடுவா போல என புலம்பி தவிக்கிறார்.
பிறகு நடு இரவில் தூக்கம் வராத விஜயா பார்வதிக்கு போன் செய்து மீனாவையும் முத்துவையும் பிரித்து வைக்க ஒரு ஐடியா கொடு என்று கேட்க இது ஆடி மாசம் தானே அதையே சாக்கா வச்சு ரெண்டு பேரையும் பிரித்து வைத்து விடு என்று சொல்ல விஜயா சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…