sirakadikka-aasai-episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகினி மற்றும் மனோஜ் ரூமில் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்க அந்த வழியாக வரும் மீனா அதைப் பார்த்து விட்டு கிச்சனுக்கு செல்ல விஜயா ரோகினியை கூப்பிட்டு நீங்க ரெண்டு பேரும் ரூமுக்குள் பேசும்போது கதவை சாத்திட்டு பேசுங்க, நீங்க புருஷன் பொண்டாட்டியா அன்னோன்யமாக இருக்கிறது போல முத்து மீனா இருக்கிறது இல்ல, அதனால மீனா உங்களை பார்த்து பொறாமைப்படுவா, வயிறு எரிவா என்று சொல்ல மீனா அதைக் கேட்டு கஷ்டப்படுகிறார்.
அடுத்ததாக மனோஜ் வெளியே கிளம்ப போட்டோவை பற்றி சொல்லிவிட்டு செல்லும்போது விஜயா என்ன போட்டோ என்று கேட்க என்னுடைய சின்ன வயசு போட்டோவை காட்டிக் கொண்டிருந்தேன் என்று சொல்ல எனக்கும் காட்டு என்று கூறுகிறார். பிறகு ரோகிணி போட்டோவை காட்ட நல்லா கொழு கொழுன்னு இருக்கு ஆனா இதெல்லாம் நம்ம ஊர்ல எடுத்த மாதிரி இருக்கு நீ சின்ன வயசுல மலேசியாவில் தானே இருந்த என்று கேள்வி கேட்க ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.
உடனே இதெல்லாம் ரெஸ்டாரன்ட் தொடங்குவதற்கு முன்னாடி அங்கு ஒரு கிராமத்தில் இருந்தபோது எடுத்தது என சொல்லி சமாளிக்கிறார். அடுத்ததாக பரதநாட்டியம் ஆடிய போட்டோவை காட்ட விஜயா உனக்கு பரதநாட்டியம் ஆட தெரியுமா நானும் கத்துக்கிட்டேன் அதெல்லாம் கல்யாணமானதும் மறந்துட்டேன் என்று சொல்ல ரோகிணி நாம ரெண்டு பேரும் ஆடலாம் என்று சொல்லி பரதநாட்டியம் ஆட மீனா அதை வியந்து பார்க்கிறார்.
பிறகு ரோகிணி மீனாவிடம் உங்களுக்கு ஆட தெரியுமா என்று கேட்க இவளுக்கு இதெல்லாம் எங்கிருந்து தெரியும் குத்து டான்ஸ் வேணும்னா ஆடுவா என்று விஜயா அசிங்கப்படுத்துகிறார். அதைத்தொடர்ந்து அண்ணாமலை வீட்டுக்கு வர ரோகிணி விஜயா பரதநாட்டியம் ஆடும் விஷயத்தைப் பற்றி சொல்ல அவர் எனக்கு இதெல்லாம் தெரியாது இவ ஆணவத்தில் ஆடி பார்த்து இருக்கேன் பரதம் ஆடி பார்த்ததில்லை என்று நக்கல் அடிக்கிறார்.
மறுபக்கம் ஸ்ருதி பைக் சர்வீஸ் விட்டிருக்க ரவியை வந்து பிக்கப் செய்துகொள்ள ரவியும் வந்து கூட்டி செல்கிறான். இதை ஸ்ருதியின் அம்மா அப்பா பார்த்து விட்டு நேராக ஸ்டூடியோவுக்கு வந்து ஸ்ருதிக்கு சாப்பாடு கொடுப்பது போல கொடுத்து அந்தப் பையன் யாரு என்ன என்று விசாரித்து அவருடைய அம்மா கோபப்பட சுருதி கோபப்பட்டு அவர்களை அங்கிருந்து அனுப்பி வைக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
PEDDI Trailer Tamil | Ram Charan | Shiva Rajkumar | Janhvi Kapoor | A R…
Habeebi Official Trailer | Kasthoori Raja, Malavika Manoj | Meera Kathiravan | Sam C.S
Ego Raman Official Teaser | Robo Shankar | Ciby chandran | Ganesan Nachimuthu | Reymen…
Blast Official Trailer | Arjun, Preity Mukundhan, Abhirami | Ravi Basrur | Subash K Raj…
Kannamma En Kannamma Video Song | Dhanush & Mamitha Baiju | GV Prakash | Ishari…
Reengara Lyric Video | Nooru Sami | Vijay Antony | Anurag Kulkarani | Balaji Sriram…