முத்து கொடுத்த ஷாக்..மீனா சொன்ன வார்த்தை. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த முத்து இவன் ஓடிப் போகாம இருந்தா என்று சொல்ல விக்கல் வந்துவிட பக்கத்தில் பால் இருக்க அதை விரல்விட்டு நக்கி பார்த்து நல்லா இருக்கு என்று எடுத்து மொத்தமாக குடிக்க விஜயா டேய் அந்த பாலை ஏன்டா குடிக்கிற? அது ரோகிணி டயர்டா வந்திருக்கான்னு பாதாம், குங்குமப்பூ எல்லாம் போட்டு ரெடி பண்ண பால் என்று சத்தம் போடுகிறார்.

குங்குமம் பூவுலயா கிடைக்குது எனக்கு இது தெரியாம போயிடுச்சு என்று முத்து நக்கல் அடிக்கிறார். மனோஜ் ஏண்டா இப்படி குடிச்சிட்டு வந்து இப்படி பண்ணிட்டு இருக்க என்று கேட்க இவன் இந்த வீட்டுக்கு ஒரு ரூபா கூட சம்பாதிச்சு கொடுத்தது கிடையாது, இவன் போட்டு இருக்க டிரஸ் எல்லாம் இவனுடைய காசு கிடையாது என்று அவமானப்படுத்த ரோகினி அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்.

மேலும் இவன் மட்டும் அன்னைக்கு ஓடாம இருந்திருந்தால் என்று முத்து திரும்பவும் விஷயத்தை சொல்ல வர விஜயா இவன் சொல்றது எல்லாம் கேட்காத நீங்க ரெண்டு பேரும் ரூமுக்கு போங்க என்று சொல்லி ரூமுக்கு அனுப்பி வைக்க நீங்க வேணா ரூமுக்குள்ள போய் கதவை மூடிக்கலாம் ஆனால் உண்மையை ஒரு நாளும் மூடி வைக்க முடியாது என்று சொல்ல ரோகிணி கன்பியூஸ் ஆகிறார்.

அண்ணாமலை முத்துவைத் திட்டி ரூமுக்குள் அனுப்புகிறார். மீனாவை சமாதானம் செய்ய என் வாழ்க்கையில ஏதோ மாற்றம் வருதுன்னு கொஞ்சம் சந்தோஷப்பட்டேன், ஆனா கடவுள் ரொம்ப சந்தோஷப்படாத என்று புரிய வைத்து திரும்பவும் பழைய இடத்துக்கு கொண்டு வந்து நிறுத்திட்டாரு என்று வருத்தப்பட்டு உள்ளே செல்கிறார்.

அதைத் தொடர்ந்து மறுநாள் காலையில் முத்து எழுந்து வேக வேகமாக சவாரி செல்ல ரெடியாக மீனா உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும் நான் உங்ககிட்ட சுதாகரை பத்தி சொல்லாம விட்டதுக்கு இவ்வளவு கோபப்படுறீங்களே.‌‌. அன்னைக்கு சுதாகர் செஞ்ச விஷயத்தைப் பற்றி சொல்லி இருந்தா எவ்வளவு கோபப்பட்டு இருக்கீங்க என்ன பண்ணி இருப்பீங்க என்று கேள்வி கேட்க அதை பத்தி உனக்கு என்ன கவலை என்று முத்து கேள்வி கேட்கிறார்.

எனக்கு என்ன கவலையா நீங்க பாட்டுக்கு ஏதாவது பண்ணிட்டு ஜெயிலுக்குப் போனா உங்கள நம்பி வந்த என்னுடைய நிலைமை என்ன என்று கேள்வி கேட்க முத்து பதில் பேச முடியாமல் நிற்கிறார். இதுக்கு முன்னாடி குடிச்சிட்டு வந்தீங்க உங்க அப்பா அம்மா மட்டும் இருந்தாங்க அவங்க புள்ள தானேனு மன்னிச்சிடுவாங்க ஆனா இன்னைக்கு இந்த வீட்டுக்கு புதுசா ஒரு பொண்ணு வந்து இருக்கா அவ உங்கள பத்தி என்ன நினைப்பா? நீங்க பாட்டுக்கு பேசிட்டு போய்டுவீங்க, நாள் முழுக்க நான்தான் இந்த வீட்டுக்குள்ளே இருக்கணும் எனக்கு எவ்வளவு அவமானமா இருக்கும் ஒவ்வொருத்தரும் பார்க்குற பார்வையிலேயே என் உயிர் போயிடுது என்று மீனா கலங்குகிறார்.

இனிமேலாவது குடிக்காம வாங்க உங்களுக்கு கோபமா இருக்கா ரூமுக்கு வந்து என்ன திட்டுங்க அப்பயும் கோபம் குறையலையா நாலு அடி கூட அடிங்க ஆனா வெளிய நின்னு இப்படி பண்ணாதீங்க என்று அறிவுரை சொல்ல முத்து பதில் பேச முடியாமல் சரி நான் சவாரிக்கு கிளம்புறேன் என்று சொல்லி கிளம்ப இதை கேட்டுக் கொண்டிருந்த அண்ணாமலை உன்கிட்ட நான் என்ன பேசணும்னு நினைச்சேனோ அது மொத்தமா மீனா பேசிட்டா இப்போவாவது உனக்கு உரைத்திருக்கும் என்று நினைக்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

அடுத்ததாக மனோஜ் ரோகிணி பியூட்டி பார்லருக்கு வந்து அவரை கூட்டிக்கொண்டு வெளியே சென்று ஒரு காரை காட்டி வாங்கிட்டேன் எப்படி இருக்கு என்று கேட்க ரோகிணி அது எப்படி வாங்க முடியும் சும்மா சொல்லாத என்று சொல்ல டெஸ்ட் ரைட் வந்தது அதான் அப்படியே உன்னை ஒரு ரவுண்டு கூட்டிட்டு போலாம்னு கொண்டு வந்தேன் என்று சொல்லி இருவரும் காரில் சென்று ரவுண்டு அடிக்கின்றனர்.

மனோஜ் கூடிய சீக்கிரம் ஒரு நல்ல வேலைக்கு போகணும் என்று சொல்ல ரோகிணி கொஞ்சம் பொறுமையா இரு நல்ல வேலை கிடைக்கிற வரைக்கும் இந்த வேலையை விட்டுடாத என்று அறிவுரை கூறுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Sirakadikka Aasai Episode Update
jothika lakshu

Recent Posts

Jai Jai Ram Song

Jai Jai Ram Song | Ramayana | Namit M, Nitesh T | Ranbir, Yash |…

20 hours ago

The Grand Master Trailer

The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon

2 days ago

Sandakari Official Trailer

Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish

2 days ago

Mandavetti Teaser

Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal

2 days ago

என்ன விலை திரை விமர்சனம்

ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…

2 days ago

மகன் படத்தின் ரிலீஸுக்காக விலகிய அப்பா படம்! ‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு

முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…

2 days ago