Sirakadikka Aasai Episode Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாட்டியும் அண்ணாமலையும் சேர்ந்து முத்து மற்றும் மீனாவுக்கு மோதிரம் எடுக்கும் சடங்கு நடத்த மீனா மோதிரத்தை எடுக்க முத்து கையை கிள்ளி மோதிரத்தை வெளியே எடுத்து ஜெயித்து விட்டதாக சொல்ல பாட்டியும் அண்ணாமலையும் மீனா கையில் போட்டு விட செய்கின்றனர்.
பிறகு அப்பளம் உடைக்கும் சடங்கு நடைபெற இருவரும் மாறி மாறி அப்பளத்தை உடைத்து சந்தோஷப்படுகின்றனர். இன்னொரு பக்கம் மனோஜ் ரூமை வேற லெவலில் டெக்கரேட் செய்து ரோகினிக்கு ஷாக் கொடுத்து முதலிரவை கொண்டாடுகிறார்.
மறுநாள் காலையில் 10 மணி ஆகியும் இருவரும் ரூமை விட்டு வெளியே வராமல் இருக்க விஜயா ரூம் அருகே சென்று அவர்களை எழுப்பாமல் வெக்கப்பட்டு வந்து விடுகிறார். இதையெல்லாம் அண்ணாமலை கவனித்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்து முத்து என்னுடைய சட்டை எங்கே என்று ஒரு சட்டையை பற்றி மீனாவிடம் கேட்க எல்லாத்தையும் மடிச்சி வச்சுட்டேன் என சொல்ல இந்த மனோஜ் பையன் எடுத்துட்டு போய் இருப்பான் இவன் இப்படித்தான் பண்ணுவான் என கதவை தட்ட பார்க்க விஜயா மீனாவை தள்ளி விட்டு ஓடி வந்து கதவுக்கு குறுக்கே நின்று கொள்கிறார்.
படிக்காதவன் உனக்கு என்ன தெரியும் என்று விஜயா சொல்ல ஆமா நீங்க டாக்டருக்கு படித்து இருக்கீங்களா என கவுண்ட்டர் போட்டு கலாய்க்கிறார் முத்து. பிறகு அண்ணாமலை அவனை கூப்பிட்டும் போய் சாப்பாடு போடுமா என்று சொல்ல மீனா முத்துவை கூட்டிப் போய் பூரியை பரிமாற முத்து சூப்பர் என ரசித்து ருசித்து சாப்பிடுகிறார்.
விஜயா ரோகினிக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு சமை என்று சொல்ல மீனா சமைக்கிறதை சாப்பிடுறதா இருந்தா சாப்பிடுங்க இல்லனா உங்களுக்கு பிடித்ததை நீங்களே சமைத்து சாப்பிடுங்க என விஜயாவுக்கு பதில் அளிக்கிறார் முத்து.
அடுத்து மனோஜ் மற்றும் ரோகிணி சாப்பிட வர கூறி பார்த்து ரோகினி காலையிலே புதுசா வந்துடும் என சாப்பிட மறுக்கிறார். மனோஜையும் சாப்பிடக்கூடாது என்று சொல்லி ஏபிசி ஜூஸ் போட்டு தருவதாக சொல்ல விஜயா எனக்கும் ஜூஸ் போட்டுக் கொடுத்திரு என சொல்ல பிறகு ரோகிணி ஜூஸ் போட்டு கொடுக்கிறார்.
பூரி சாப்பிட்டா எனக்கும் அசிடிட்டி வந்துடும் என வாய் கிழிய பேசிய விஜயா ஜூஸை வாயில் வைக்க முடியாமல் அதை வேண்டாம் என்று சொல்லவும் முடியாமல் குடிக்கிறார். இதை கவனித்த விட்டு கூறி சூப்பர் என்று மீனாவை பாராட்டி வெறுப்பேற்றி விட்டு செல்ல ரோகிணி முத்து மீனா மேல ரொம்ப பாசமாக இருப்பார் போல என்று கேட்க இது இன்னைக்கு தலையில் தூக்கி வைத்துவிட்டு ஆடுவான் நாளைக்கு காலைல போட்டு மிதிப்பான் அவங்க எப்படி போனாலும் எனக்கு கவலை இல்லை நீங்க சந்தோஷமா இருந்தா போதும் என சொல்ல மீனா இதைக் கேட்டு வருத்தப்படுகிறார்.
அடுத்ததாக பாட்டி ஊருக்கு கிளம்பிச் செல்ல விஜயா நாங்க வரதுக்குள்ள மதிய சமையல் வேலை எல்லாம் முடிச்சு வச்சிருக்கணும் என ஆர்டர் போட்டு விட்டு கோவிலுக்கு கிளம்புகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Paranthene Penne Music Video , Youth , Ken Karunaas ,Anishma ,GV Prakash Kumar https://youtu.be/iF5OOYEn6Q8?si=U5P2FMxdUEbBuilR
ANTHONY (TAMIL) OFFICIAL TRAILER , ISAIGNANI ILAIYARAAJA , KAYAL VINCENT , TJ BHANU , SUDHARSHAN…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
பாலிவுட்டில் அவமரியாதை மற்றும் தரக்குறைவான அனுபவத்தை ரெஜினா சந்தித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கண்ட நாள் முதல் என்ற…
சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? சூர்யா தற்போது 'கருப்பு' படத்தை முடித்து விட்டு வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் இணைந்துள்ளார்.…
இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத்! புதிய இசை நிறுவனம் தொடங்கியுள்ளார் அனிருத். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவல்கள் பார்ப்போம்..…