Sirakadikka Aasai Episode Update
தமிழ் சின்னத் திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலையின் நண்பர் பரசு மனோஜை கூப்பிட்டு எங்க வேலை பண்ற என்ன வேலை பண்ற என கேள்வி கேட்க மனோஜ் கிண்டில என சொல்ல அண்ணாமலை அன்னைக்கு போரூர்னு சொன்ன என்று கேள்வி கேட்க மனோஜ் செய்வதறியாது திருத்திருவென முழிக்கிறார். உடனே விஜயா அங்கு வந்து நீ இங்க என்ன பண்ற போய் ரெடியாகிட்டு வா என மனோஜை அனுப்பி வைத்து விடுகிறார்.
அடுத்து மீனா விளக்கேற்ற திரியை போட்டு கொண்டிருக்க அதை பார்த்த விஜயா நீ எதுக்கு இதெல்லாம் பண்ற நீ என் வீட்டுக்கு வந்து விளக்கேத்தியே இல்லாத பிரச்சனை எல்லாம் வந்துடுச்சு என் புள்ள வாழ்க்கை நல்லா இருக்கணும் அப்படி ஓரமா போ என அவமானப்படுத்தி அனுப்புகிறார்.
அதைத்தொடர்ந்து மீனா கண்கலங்கியபடி நகர்ந்து செல்ல அண்ணாமலை ஏன் கண்ணு கலங்கி இருக்கு என கேட்க ஊதுவத்தி புகை என சொல்லி சமாளிக்கிறார். சரி போய் ரோகிணி ரெடி ஆகிட்டாலா என்று பார்த்து கூட்டிட்டு வா என அனுப்புகிறார்.
அதற்குள் ரோகிணி உங்ககிட்ட முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என மனோஜ்க்கு போன் செய்து எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கான், அவன் பேரு கிரிஷ் என்று சொல்ல மனோஜ் மொபைல் கட் ஆகி விடுகிறது. இதனால் ரோகிணி என்னாச்சு மனோஜோட முடிவு என்ன என்று தெரியாமல் தவிக்கிறார்.
இந்த சமயம் பார்த்து மீனா வந்து ரூமின் கதவைத் தட்ட இவர்கள் மனோஜ் என நினைத்து பயப்படுகின்றனர். பிறகு மீனா நான் தான் சீக்கிரம் ரெடி ஆயிட்டு வாங்க பொண்ணை கூட்டிட்டு வர சொல்றாங்க என்று சொல்ல ரோகிணி கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க வந்து விடுகிறேன் என சொல்கிறார். அடுத்து விஜயா மணமேடை அருகே நின்று கொண்டிருக்க அப்போது ரவியும் சீதாவும் மாலையும் கழுத்துமாக நடந்து வருவது போல பார்த்து அதிர்ச்சி அடைந்து என் புள்ள வாழ்க்கை போச்சு என கத்தி புலம்புகிறார்.
அண்ணாமலை எல்லோரும் விஜயாவை திட்ட விஜயா நன்றாக கண் திறந்து பார்க்க இருவரும் கையில் மாலையை எடுத்து வருகின்றனர். அடுத்து போய் ரோகிணியை கூட்டிட்டு வா என்று அனுப்ப விஜயாவும் பார்வதியும் இங்கே வரும்போது மீனா வெளியில் காத்திருப்பதை பார்த்து திரும்பவும் மீனாவை கூப்பிட்டு அவ புடவை கட்டிக்கிட்டு நேர மணமேடைக்கு வரப்போறா, உன் முகத்துல முழிச்சா வாழ்க்கை விளங்குமா? என அவமானப்படுத்தி அனுப்ப மீனா திரும்பவும் கண்ணீரோடு வர அண்ணாமலை எங்க ரோகினியை கூட்டிட்டு வரலையா? நீ தான் இந்த வீட்டோட மூத்த மருமக, எல்லாவற்றையும் நீ தான் செய்யணும் போய் கூட்டிட்டு வா என அனுப்புகிறார். இதனால் மீனா செய்வது அறியாது நிற்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் மாலையும் கழுத்துமாக மண மேடையில் இருக்க மீனா ரோகினி கழுத்தில் இருக்கும் மாலையை சரி செய்ய போக விஜயா மீனாவை திட்டி அனுப்புகிறார்.
Paranthene Penne Music Video , Youth , Ken Karunaas ,Anishma ,GV Prakash Kumar https://youtu.be/iF5OOYEn6Q8?si=U5P2FMxdUEbBuilR
ANTHONY (TAMIL) OFFICIAL TRAILER , ISAIGNANI ILAIYARAAJA , KAYAL VINCENT , TJ BHANU , SUDHARSHAN…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
பாலிவுட்டில் அவமரியாதை மற்றும் தரக்குறைவான அனுபவத்தை ரெஜினா சந்தித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கண்ட நாள் முதல் என்ற…
சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? சூர்யா தற்போது 'கருப்பு' படத்தை முடித்து விட்டு வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் இணைந்துள்ளார்.…
இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத்! புதிய இசை நிறுவனம் தொடங்கியுள்ளார் அனிருத். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவல்கள் பார்ப்போம்..…