பாக்கியா எடுத்த முடிவு. கிண்டல் அடித்த இனியா.இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அப்போது அங்கு வரும் செழியன் நான் ஏதாவது உதவி பண்ணட்டுமா என ஐஸ் வைக்க என்ன விஷயம்னு சொல்லு என்று கேட்கிறார். பிறகு சென்னைக்கு அழகாப்பன் நடத்தனுமே அவங்க அம்மா உன்கிட்ட பேசணும்னு சொன்னதா சொன்னா வளைகாப்பு முடிஞ்சு அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு வாங்கலாமே அதனை எப்படியாவது வேண்டாம் என்று சொல்லிடு என்று இருக்கிறார்.

பாக்யா அவங்க பொண்ணு அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறாங்க நான் எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும்? சொல்ல முடியாதுல என்று கூற செழியனும் சொல்ல முடியாது தான் ஆனால் முயற்சி பண்ணுமா என்று சொல்ல சரி பார்க்கலாம் என்று சொல்ல செழியன் சந்தோஷப்படுகிறார்.

இந்த நேரத்தில் திடீரென ராமமூர்த்தி தூக்கத்தில் இருந்து எழுந்து ஈஸ்வரி என கத்த இருவரும் பதற்றத்துடன் ரூமுக்கு ஓடி வருகின்றனர். நான் உடனே ஈஸ்வரியை பார்க்கணும் என ராமமூர்த்தி அடம் பிடிக்க பாக்யா நீங்க போட்டிங்களா இல்லையா என கேட்டு மாத்திரை போட வைத்து சமாதானம் செய்கிறார்.

அடுத்ததாக கேண்டின்கு வரும் பாக்கியா செல்லியிடம் ராஜசேகர் சார் போன் பண்ணி இருந்தாரு இந்த மாதிரி பேங்க்ல பண்றவங்களுக்கு குறைந்த வட்டியில் லோன் கொடுக்கிறதா சொல்லி இருக்காரு நாம பேங்குக்கு போய் பாத்துட்டு வந்துடலாம் என்று சொல்லி கிளம்பி வருகின்றனர். பேங்க் ஆபிஸர் எல்லா டாகுமெண்டையும் வாங்கிப் பார்த்து எல்லாம் சரிதான் ஆனால் டிகிரி சர்டிபிகேட் இல்லை என்று சொல்ல பாக்யா நான் 12-ம் வகுப்பு வரை தான் படிச்சேன் என்று கூறுகிறார். மேனேஜர் இந்த லோன் டிகிரி முடிச்சு சீரியல் பண்றவங்களுக்கு தான், இதுக்கு நீங்க எலிஜிபில் கிடையாது என்று சொல்லி விடுகிறார்.

அடுத்ததாக வீட்டுக்கு வந்ததும் ஜெனி மற்றும் அமிர்தாவிடம் லோன் விஷயமாக பேசிக்கொண்டிருக்க அப்போது ராமமூர்த்தி அங்கு வருகிறார். பாக்கியா காலேஜ் படிக்காதனால எனக்கு லோன் கிடைக்காதுன்னு சொல்லிட்டாங்க என்று சொல்ல நம்ப எழில், அமிர்தா, ஜெனி டிகிரி தானே படிச்சிருக்காங்க, அவங்க பேர்ல வாங்கலாமே ஐடியா கொடுக்க இதுவும் நல்ல யோசனை தான் விசாரிச்சு பார்க்கிறேன் என சொல்கிறார்.

பிறகு இனியாவும் பாக்கியாவும் தூங்கிக் கொண்டிருக்கும் போது பாக்யா தூக்கம் வராமல் காலேஜ் செல்வது பற்றிய யோசித்துக் கொண்டிருக்க பிறகு இனியாவை எழுப்பி நானும் காலேஜ் போறேன் என சொல்ல அவர் லூசு மாதிரி பேசாத அம்மா, நீயும் நானும் ஒரே காலேஜ் போனா பாக்குறவங்க என்ன சொல்லுவாங்க? அதெல்லாம் அந்த வயசுல படிச்சு இருக்கணும் என சொல்லி படுத்து விடுகிறார்.

அதனைத் தொடர்ந்து வீட்டில் ராமமூர்த்தி சாப்பிடாமல் ஈஸ்வரியின் நினைப்பாகவே உட்கார்ந்து இருக்க செழியன் மற்றும் ஜெனி இருவரும் ஈஸ்வரிக்கு போன் போட்டு பேசி வீடியோ கால் வர சொல்லி ராமமூர்த்தி பேச வைக்க அவர் ஈஸ்வரியை பார்த்ததும் கண் கலங்குகிறார். இருவரும் பேசி முடித்து போனை வைத்ததும் இரண்டு பேரும் ஒரே லவ் பேர்ட்ஸா இருக்கீங்க என தாத்தாவை கலாய்க்கிறார்.

Baakiyalakshmi Episode Update
jothika lakshu

Recent Posts

Yezhu Kadal Yezhu Malai Release Trailer

Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…

10 hours ago

Oru Chinna Panithuli Lyric Video

Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…

11 hours ago

திருமணத்தின் விளிம்பு வரை சென்றேன்; ஆனால் அது எனக்கு பயத்தை ஏற்படுத்தவில்லை – சுருதி ஹாசன் ஓபன் டாக்

நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…

12 hours ago

இளையராஜா இசையில் நடிப்பேன் என கனவில் கூட நினைத்ததில்லை – நெகிழ்ச்சியுடன் கீர்த்தி சுரேஷ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…

12 hours ago

தவெக ஆட்சி எப்படி உள்ளது? – ஒரே வார்த்தையில் பதிலளித்த ஜி.வி.பிரகாஷ்

72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…

12 hours ago

மகன்களுடன் தேசிய விருது விழாவில் தனுஷ்! வைரலாகும் புகைப்படங்கள்

72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…

13 hours ago