ரவி செய்த வேலை. அண்ணாமலைக்கு காத்திருந்த ஷாக். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாட்டி மீது பைக் மோதி விட்டு நிற்காமல் போன பெண்ணை தடுத்து நிறுத்தும் ரவி அவரிடம் வாக்குவாதம் செய்து பாட்டியின் மருத்துவ செலவுக்கு பணம் கேட்கிறார். கொடுக்க முடியாது என அடம் பிடிக்கும் அந்த பெண் மக்கள் கூடிவிட்டதால் வேறு வழி இல்லாமல் பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு உன்னை சும்மா விடமாட்டேன் என ரவியை எச்சரித்து விட்டு செல்கிறார்.

மறுபக்கம் பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் மீனா கையை ஜன்னல் ஓரத்தில் வைத்திருக்க அதை பார்த்த முத்து மீனா கையை உள்ளே வை என சொல்கிறார். அதன் பிறகு பசிக்குதா என கேட்க மீனா இல்லை என சொல்ல இதையெல்லாம் பார்த்த ரோகிணியின் அம்மா நீங்க ரெண்டு பேரும் காதல் திருமணம் பண்ணிட்டீங்களா? என்று கேட்க மீனா இல்ல வீட்ல பார்த்து தான் கல்யாணம் பண்ணி வச்சாங்க என்று சொல்கிறார்.

அதற்கு அடுத்ததாக ரோகினி அம்மா என் பொண்ணுக்கும் கல்யாணம், காதல் கல்யாணம் அவளா பார்த்துக்கிட்ட மாப்பிள்ளை என சொல்ல மீனா நீங்க இன்னும் மாப்பிள்ளையை பாக்கலையா என கேட்கிறார். கோவில்ல பூஜை முடிச்சுட்டு தான் சென்னைக்கு போகணும் என சொல்கிறார். மேலும் போகும் போது புடவை எடுத்துக்கிட்டு போகணும்னு சொல்ல மீனா உங்க பொண்ணு எப்படி இருக்காங்க என கேட்க போட்டோ இருக்கு காட்டுறேன் என்று சொல்லி போனில் போட்டோவை தேடுகிறார்.

அதற்குள் அந்த சின்ன பையன் க்ரிஷ் ஃபோனை புடிங்கி நான் காட்டுறேன் என நோண்டி கொண்டிருக்க பஸ் டிரைவர் ஒரு பிரேக் அடிக்க போன் தவறி கீழே விழுகிறது. இவர்களின் ஸ்டாப்பிங்கும் வந்துவிட போட்டோவை காட்டாமல் கிளம்பிச் சென்று விடுகின்றனர்.

இங்கே ரவியால் அப்செட் ஆகி வீட்டுக்கு வந்த அந்தப் பெண் தன்னுடைய அப்பா அம்மாவிடம் நடந்த விஷயத்தை சொல்லி வண்டி நம்பரை செல்கிறார். பிறகு அது முத்துவின் வண்டி என தெரியவர அந்த முத்து தான் நம்ப பொண்ணு கிட்ட பிரச்சனை பண்ணி இருக்கான் என நினைத்து அண்ணாமலையை வீட்டுக்கு வர வைக்கின்றனர்.

அண்ணாமலையிடம் பென்ஷன் அதிகாரி கோபப்பட முத்து ஊரிலேயே இல்லை என்ற விஷயத்தை சொல்கிறார். இரண்டு பசங்கள யாராவது வண்டி எடுத்துட்டு போயிருப்பாங்க என சொல்ல அவர்கள் முத்து எங்க கிட்ட மன்னிப்பு கேட்கணும் என் பொண்ணு கிட்ட வம்பு இழுத்தவன் என் பொண்ணு கிட்ட மன்னிப்பு கேட்கணும் என சொல்ல அண்ணாமலை உங்ககிட்ட மன்னிப்பு கேட்க தான் நான் என் பிள்ளைகளை பெற்று வச்சிருக்கேனா? அதெல்லாம் முடியாது என பேசுகிறார்.

அப்படினா பென்ஷன் பணம் வராது என சொல்ல அண்ணாமலை அந்த பணத்தை எப்படி வாங்கணும்னு எனக்கு தெரியும் என சவால் விட்டுவிட்டு செல்கிறார். வீட்டுக்கு வந்து ரவியிடம் நீ வண்டி எடுத்துட்டு போகும்போது ஏதாவது பிரச்சனையா என கேட்க ரவி நடந்த விஷயங்களை சொல்ல நீ தப்பு எதுவும் பண்ணல, நல்லது தான் செஞ்சிருக்க என்று சொல்கிறார்.

அதனைத் தொடர்ந்து விஜயா பென்ஷன் பணம் என்ன ஆச்சு? கல்யாண செலவு நிறைய இருக்கு, மண்டபம் பார்க்கணும் என்று சொல்ல அண்ணாமலை அதெல்லாம் வேண்டாம் என்று ஷாக் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Sirakadikka Aasai Episode Update
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

21 hours ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

21 hours ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

21 hours ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

21 hours ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

21 hours ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

24 hours ago