SiragadikkaAsai Serial Episode Update 23-08-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா சிக்கன் குழம்பு வச்சு அசத்துகிறார். ஸ்ருதி வீட்டுக்குள் வர அந்த நேரம் பார்த்து விஜயாவும் எழுந்து வருகிறார். சிக்கன் குழம்பு வாசத்தை பார்த்து எழுந்து வந்த நீ ஏதாவது வாங்கிட்டு வந்தியா ஸ்ருதி என்று கேட்க இல்லை கிச்சனிலிருந்து தான் வருது மீனாதான் சமைச்சு இருக்காங்க என்று ரெண்டு பேரும் போய் பார்க்கின்றன. ஸ்ருதி மீனாவின் சிக்கன் குழம்பு ருசி பார்க்க புகழ்ந்து தள்ளுகிறார். விஜயா குறை சொல்ல விஜயாவை ஆப் செய்கிறார் ஸ்ருதி. பின் ஒருவருக்கொருவர் வந்து சிக்கன் குழம்பு பற்றி பாராட்டி பேச விஜயா கடுப்பாகிறார்.
எல்லாருக்கும் அள்ளி அள்ளி வைத்து சாப்பிடுங்கள் சாப்பிடுங்க என்று விஜயா சொல்ல எல்லாம் காலியாகி விடுகிறது. மீனாவிற்கு எதுவும் இல்லாததால் ஸ்ருதி ஆர்டர் செய்யவா என்று கேட்கிறார் வேண்டாம் சட்னி இருக்கு நான் சாப்பிடுகிறேன் என்று மீனா சொல்லிவிடுகிறார்.
அல்வாவுடன் வீட்டுக்கு வந்த முத்து மீனா விடம் அக்கா தம்பி பாசத்தை பிரிக்கிறதுக்கு நான் யாரு? எல்லாம் இப்பதான் புரிஞ்சது. எனக்கு சத்யாவை பிடிக்காது எல்லாம் கிடையாது அவனோட சேர்க்க சரியில்ல அதுதான் எனக்கு கோவம் வருது என்று பேச இதை விஜயா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பிறகு பசிக்குது சாப்பிடலாம் என்று கிச்சனுக்கு வர அந்த நேரம் பார்த்து ரவி வருகிறார். இன்னிக்கு சிக்கன் குழம்பு அண்ணி சூப்பரா வெச்சிருந்தாங்க சாரிடா எல்லாமே காலியாயிருச்சு என்று சொல்ல என்னடா சொல்றீங்க ஒரு பொட்டு கூட வைக்காம இப்படி காலி பண்ணி இருக்கீங்க அப்படின்னு சொல்லிக் கொண்டிருக்க மீனா இருங்க வரேன் என்று உள்ளே செல்கிறார். பிறகு முத்துக்கு சிக்கன் குழம்பு எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க இது எப்படி வந்தது என்று நான் அப்போவே தனியா எடுத்து வச்சுட்டேன் என்று சொல்லுகிறார் முத்து சந்தோஷமாக சிக்கன் குழம்பை சாப்பிட மீனாவிடம் அல்வாவை எடுத்து கொடுத்து சாப்பிட சொல்லுகிறார்.
இதெல்லாம் பார்த்து கடுப்பாகி கொண்டிருக்கும் விஜயாவிடம் சென்று அல்வா கேட்டீங்களே எடுத்துக்கோங்க என்று சொல்ல அவர் உள்ளே சென்று விடுகிறார். மனோஜ் நடந்து வரும்போது கட்டில் காலில் தடுக்கி விழ காலில் அடிப்படுகிறது.
மீனாவை கூப்பிடும் விஜயா அவரிடம் என்ன கேட்கிறார்.?? அதற்கு முத்து என்ன பதில் சொல்லப் போகிறார்.?? என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…
சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்யின் கடைசிப்படமாக…
தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! துபாயில் இருந்து கடந்த மார்ச்…
சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார் சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி…
பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர்…