SiragadikkaAasai Serial Episode Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் அம்மா மீனாவை நினைத்து அழுது கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சத்யா வீட்டுக்கு வருகிறார். அவரை அடித்து உன்னால தாண்டா எல்லா பிரச்சனையும் என்று திட்டி விடுகிறார். ஏற்கனவே உங்க அப்பாவை கொன்னுட்ட நாங்க உயிரோடு இருக்கிறது உனக்கு புடிக்கலையா என்று கேட்க என்னம்மா ஆச்சு என்ன பிரச்சனை என்று கேட்கிறார். நீ அந்த சிட்டி கூட சேருவது தான் பிரச்சனை, சிகரெட் புடிக்கிற பழக்கம் உனக்கு வந்ததுனால அந்த சிட்டி தான் காரணம்னு மீனா கேக்க போனா அப்போ அவன் மீனாவ தள்ளிவிட்டு அவளுக்கு அடிப்பட்டு இருக்கு என்று அழுது பேசுகிறார்.
மீனாவின் அம்மா சீதாவிற்கு ஃபோன் போட்டு வீட்டுக்கு கூப்பிடுவதற்குள் சத்யா வேக வேகமாக சிட்டியை பார்க்க செல்கிறார். ஏன் இப்படி பண்ண சிட்டி எங்க அக்காவ எதுக்கு அடிச்ச என்று கேட்க, எல்லாரும் முன்னாடியும் உங்க அக்கா என்ன மரியாதை இல்லாம பேசினா அதனாலதான் அடிச்சேன் என்று சொல்ல ஆயிரம் தான் இருந்தாலும் அவங்க என்னோட அக்கா அவங்க தான் என்ன வளர்த்தாங்க, அவங்க கிட்ட வந்து மன்னிப்பு கேளு இல்லனா இதோட நம்மளோட பிரண்ட்ஷிப் கட் பண்ணிக்கலாம் என்று சொல்ல என்னோட மரியாதை எல்லாம் உட்டுக் கொடுத்துட்டு வர முடியாது என்று சொல்லிவிட அப்போ இதோட நீயும் என்னை தேடி வராத நானும் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு சத்யா கிளம்பி விடுகிறார்.
மீனாவுக்கு ஸ்கேன் எடுத்து ரிப்போர்ட்டை டாக்டர் பார்த்துவிட்டு எந்த பிராப்ளமும் இல்ல டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம் என்று சொல்லிவிட்டு ஏதாவது சாப்பிட குடுங்க என்று சொல்லுகின்றனர். முத்து ஜூஸ் வாங்க போக அந்த நேரம் பார்த்து மீனாவின் குடும்பத்தினர் வருகின்றனர் மீனாவின் தலையில் இருக்கும் கட்டை பார்த்து அவரது அம்மா மற்றும் தங்கச்சி பதறுகின்றனர். மீனா எதுவும் இல்லமா உனக்கு ஏதாவது ஆகப்போகுது என்று சமாதானம் செய்கிறார். உடனே சீதாவும்,மீனாவின் அம்மாவும்,சத்யாவை போட்டு அடிக்க உன்னால தான் எல்லா பிரச்சினையும் என்று அடிக்கின்றனர்.
பிறகு சத்யா மீனாவிடம் என்னால தான் அக்கா எல்லாம் பிரச்சனை இனிமே நான் எந்த தப்பு பண்ண மாட்டேன் நான் அவன் கூட சேர மாட்டேன் இப்ப கூட அவன போய் திட்டிட்டு தான் வந்த அவன் இப்படி பண்ணுவான் என்று நான் நினைக்கல ,நீ எங்களுக்காக பண்ணது நான் மறக்கல அக்கா என்று சொல்லி அழ குடும்பத்தினர் மகிழ்ச்சியடைகின்றனர். இதையெல்லாம் முத்து ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இதுவே எங்களுக்கு போதும் சத்தியா என்று மீனா சந்தோஷப்படுகிறார். எனக்கு அடிபட்டா தான் நீ திருந்துவ நெனச்சிருந்தா இந்த அடியை நான் எப்பயோ வாங்கி இருப்பேன் என்று சொல்லுகிறார். முத்து ஜூஸ் வாங்கிக் கொண்டு வந்து கொடுக்க சீதாவிடம் கொடுத்து ரெண்டு பேருக்கும் ஊற்றி கொடு என்று சொல்லுகிறார்.
வீட்டுக்கு வந்த முத்து மீனாவிடம் அண்ணாமலை என்ன ஆச்சு என்று பதற்றத்துடன் கேட்க ஒன்னும் இல்லப்பா என்று சொல்லுகிறார்.இவ்வளவு பெரிய கட்டு போட்டு இருக்க என்ன ஆச்சு, மீனா நடந்ததை சொல்ல வர முத்து வண்டியில் இருந்து கீழே விழுந்துட்டா என்று சொல்லுகிறார். அதுக்கா இவ்ளோ பெரிய கட்டு போட்டு இருக்காங்க என்று கேட்க கள்ளு பட்டுருச்சு அதனால போட்டு இருக்காங்க என்று சொல்லி பேசிக்கொண்டிருக்க விஜயா வருகிறார்.
என்னடி தலைல கட்டு போட்டு இருக்க என்ன ஆச்சு என்று கேட்க வண்டியில் இருந்து கீழே விழுந்துட்டதாக சொல்ல கண்ணு எங்க வச்சிருக்க என்று கேட்க மூஞ்சில தான் என்று நக்கல் அடிக்கிறார் முத்து. எப்பவுமே பணம் சம்பாதிக்கிறதுலே இருந்தா எப்படி வாய் மட்டும் பேசுற வண்டி ஒழுங்கா ஓட்டலையா என்று கேட்கிறார். இப்போ எப்படி இருக்கு என்றும் விஜயா அக்கறையோடு கேட்க மூவரும் அதிர்ச்சி ஆகி நிற்கின்றனர்.இது மட்டும் இல்லாமல் நீ சமைக்க வேணாம் நான் சமைக்கிறேன் என்று கிச்சனுக்கு போக அண்ணாமலை எந்த நேரத்தில் எப்படி இருக்கான்னு தெரிய மாட்டேங்குது என்று சொல்லுகிறார்.
முத்து மீனாவிற்காக கஞ்சி எடுத்துக் கொண்டு வந்து ஊட்டி விடுகிறார். நீ எதுக்கு சிட்டி பாக்க போன என்று கேட்க, சத்யா கெட்ட பழக்கத்தை கத்துக்கும் போது என்னால பாத்துட்டு சும்மா இருக்க முடியல என்று சொல்ல,அப்ப நான் சொல்லும் போது உங்க யாருக்கும் தெரியல என்று கேட்கிறார். பிறகு செல்வம் விஷயத்தைப் பற்றி கொஞ்ச நேரம் பேசிவிட்டு, முத்து மீனாவிடம் நம்மளுக்குள்ள ஆயிரம் சண்டை வரலாம் ஆனால் உன்னோட தலையிலிருந்து ரத்தம் வருவதை பார்த்துவிட்டு ஒரு நிமிஷம் எனக்கு உயிரே போயிடுச்சு என்று கண்கலங்க மீனா அழுகிறார். இனிமே இப்படி பண்ணாத என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் ரோகினி சிட்டியை வந்து சந்திக்கிறார். அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்? ரோகினி சொன்ன விஷயம் என்ன? அதற்கு சிட்டி எடுக்கப் போக முடிவு என்ன? என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
Alaakaa Loova Lyrical Video (Tamil) | OM | Dhanush | Mammootty | Sai Pallavi |…
Kaadana Kaadu Lyrical Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika | Riythvika…
Mittai Mazhai Lyrical Video | AOT | Dulquer Salmaan | Satvika | GV Prakash |…
Street Fighter Official Tamil Trailer | In Cinemas October 16
Vaane Vaane Lyrical Video | Sri Sri (Tamil) | Dulquer Salmaan | Pooja Hegde |…
Kalangathey Lyrical Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Dushara | GV Prakash