siragadikkaaasai serial episode update 27-09-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா கிச்சனின் சூப் வைத்துக் கொண்டிருக்க ஸ்ருதி வருகிறார்.ஸ்ருதியிடம் சூப் கொடுத்து குடிக்க சூப்பரா இருக்கும் மீனா நானே ஏதாவது ஹாட்டா சாப்பிடலாம்னு இருந்தேன் என்று சொல்ல என்னை கொஞ்ச நாளா ஒரே டென்ஷனா இருக்கீங்க என்று கேட்க செப் கிடைக்காம இருந்தா டென்ஷன் ஆகுது என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க உடனே சுருதிக்கு ஒரு ஐடியா கிடைக்கிறது நீங்க ஏன் என்னோட ஹோட்டலுக்கு பார்ட்னரா வரக்கூடாது என்று பேசிக் கொண்டிருக்க வெளியிலிருந்து ரவி இதை கேட்கிறார். அப்படியெல்லாம் பண்ண முடியாது ஸ்ருதி அப்படி பண்ணா ரவி என்ன நினைப்பாரு அதுவும் இல்லாம நீ ரவியா சமாதானப்படுத்தி பேசி பாரு என்று சொல்ல நானும் அதுக்கு தான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார்.இது மட்டும் இல்லாம எனக்கு வீட்லதான் சமைக்க தெரியும் ஹோட்டல்ல அவ்வளவு பேருக்கெல்லாம் சமைக்க தெரியாது என்று சொல்லுகிறார். பிறகு மீனா நீங்க வேணா ரவிகிட்ட கிடைக்கிற டைம்ல வந்து ஹெல்ப் பண்ற மாதிரியும் இல்ல ஒர்க் பண்ற மாதிரியே கூட பேசி பாருங்க என்று சொல்ல, இதுவும் நல்ல ஐடியா தான் மீனா நான் பேசி பார்க்கிறேன் என சொல்லிவிட்டு சுருதி சென்று விடுகிறார். உடனே ரவி வந்து கிச்சனில் ரொம்ப தேங்க்ஸ் அண்ணி என்று சொல்ல, எடுத்துக்கோங்க ரவி என்று சொல்லிக் கொடுக்கிறார்.
பிறகு மீனா அனைவருக்கும் சூப்பு ஊத்தி எடுத்து வந்து கொடுக்க முத்து வேகமாக வந்து சூப்பரா வாசனை தூக்குது மீனா என்று எடுத்துக் குடிக்க அண்ணாமலை மற்றும் விஜய் அவருக்கு கொடுக்கிறார் அந்த நேரம் பார்த்து ரோகினி வர ரோகினிக்கு கொடுக்க வேண்டாம் என சொல்லுகிறார். அடுத்த சூப்பு கடை தான்பா போடலாம் ஈவினிங் மட்டும் அம்மா சொல்லி தர யோகா கிளாஸ் வித்திடலாம் என்று சொல்ல அங்கெல்லாம் எதுவும் வைக்க கூடாது என்று விஜயா கோபமாக சொல்லுகிறார். அம்மாவுக்கு டாக்டர் பட்டம் கிடைக்கலைன்னு கோவம் பா பேசாம நீட் எக்ஸாம் எழுத சொல்லுங்க என்று சொல்ல விஜயா இந்த வீட்டில டாக்டர் பட்டம் வாங்குறதுக்கு ஒரே தகுதி மனோஜ் மட்டும் தான் இருக்கு என்று சொல்லி கொண்டிருக்கும்போதே நடக்க முடியாமல் வீட்டுக்கு வருகிறார் மனோஜ் உடனே விஜயா மற்றும் ரோகிணி இருவரும் உட்கார வைத்து தண்ணீர் கொடுக்கின்றனர்.
என்னாச்சு என்று கேட்க அங்கு நடந்த விஷயத்தை சொன்னால் இவங்க தொடப்பக்கட்டையில் அடிப்பாங்க என்று நினைத்து விட்டு அப்படியே மாற்றிப் பேசுகிறார் டீலரை பார்க்க போற இடத்துல ஒருத்தர் பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்கிட்டா அவங்கிட்ட சண்டை போட்டுட்டு வந்தேன் என்று சொன்ன யாரும் நம்ப மறுக்கின்றனர். முத்து அண்ணாமலை இடம் கேட்க அவரும் நம்புகிற மாதிரி இல்லை என தலையாட்ட மீனா ஸ்ருதி ரவி என யாரும் நம்பாமல் இருக்கின்றனர் உடனே என் புள்ளையை நான் நம்பறேன் மனோஜ் அடிச்சு தான் இருப்பான் என்று சொல்ல நீங்க நம்புனா நம்புங்க நம்ப கட்டிக்கோங்க இதுதான் உண்மை என்று மனோஜ் ரூமுக்குள் சென்று விடுகிறார்.
ரோகினி ஒத்தடம் கொடுக்க மனோஜிடம் என்ன நடந்தது என்று உண்மையை சொல்லுங்கள் என்று சொல்ல அதுதான் வெளியே சொல்ல வேண்டும் என்று சொல்கிறார் அது அவங்கள சமாளிக்க அது உண்மை இல்லை என்று எனக்கு தெரியும் நடந்த விஷயத்தை சொல்லு என்று சொல்ல தயங்கி கொண்டு மனோஜ் சந்தோஷ் கொடுத்த ஐடியாவையும் அதனால் மாட்டிக்கொண்ட பிரச்சனையும் சொல்ல ரோகினி கோபப்பட்டு திட்டுகிறார் எதுக்காக நீ இது மாதிரி பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்கிறார். சந்தோஷுக்கு என்னை அடி வாங்கணும்னா விட்டுட்டு ஓடிட்டாரு என்று சொல்லுகிறார். இனிமே அவர் கிட்ட பேசுற வேலை வச்சுக்காத என்று ரோகிணி திட்டுகிறார். மறுபக்கம் யோகா கிளாஸ் இல் அனைவரும் இருக்க விஜயா வருகிறார் சிவன் பர்த்டே கேக் போக்கே என வாங்கிக் கொண்டு வர விஜயா என்ன சொல்லுகிறார்?பார்வதியின் பதில் என்ன? என்ன நடக்கப்போகிறது?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
பருத்திப்பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே…
தமிழ் சின்ன திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
ராஜா ராணி இருவரும் விஜயாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
OG படத்தின் 3 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன்…
நெஞ்சை பதற வைக்கும் கரூர் சம்பவம் குறித்து பிரபலங்கள் பதிவு வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும்…