விஜயா போட்ட திட்டம், பணத்தை பறிகொடுத்த மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து வந்தவுடன் அண்ணாமலை இனிமே நைட்டு வேலைக்கெல்லாம் போகாத உடம்பு முக்கியம் போய் ரெஸ்ட் எடு என்று சொல்லி அனுப்ப முத்துவும் ரூமுக்குச் செல்கிறார் உடனே பின்னால் மீனா சென்று வாங்க சாப்பிடுவீங்க என்று சொல்ல வேணா நான் சாப்பிட்டேன் என்று சொல்லுகிறார் வீட்டுக்கு தானே வர போறீங்க அப்புறம் எதுக்கு சாப்பிட்டீங்க என்று கேட்க ரொம்ப பசிச்சது அதனால சாப்பிட்டேன் என்று சொல்லிவிட்டு கை கழுவச் செல்ல மீனா ரெடி பண்ணி வைத்த இரண்டரை லட்சத்தை எடுத்து பார்த்துக் கொண்டிருக்க முத்து இவளுக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது என்று யோசிக்கிறார் உடனே மீனா வெளியில் சென்று அண்ணாமலை இடம் நான் போய் அந்த ஆர்டருக்கு பணம் கட்டிட்டு வந்துடறேன் மாமா என்று சொல்ல சந்தோஷமாவும் நல்ல மனசுக்கு நல்லபடியா நடக்கும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் இதனை கவனித்த விஜயா இது எப்படியாவது சிந்தாமணி கிட்ட சொல்லனும் என்று முடிவெடுக்கிறார். சிந்தாமணி மண்டப ஆர்டர் எனக்கு கிடைக்க வேண்டும் என்று மேனேஜரிடம் பேசிக் கொண்டிருக்க அப்படியெல்லாம் கொடுக்க முடியாதும்மா அவங்களும் வரட்டும் அவங்க பணம் ரெடி பண்ணிட்டாங்கன்னா இரண்டு பேருக்கு குலுக்கி போட்டு யார் பெயருக்கு வருதோ அவங்களுக்கு கொடுத்து விடலாம் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் உடனே விஜயா போன் போட்டு மீனா பணம் ரெடி பண்ண விஷயத்தை சொல்ல சிந்தாமணி அவர்கள் ஆட்களை அனுப்பி மீனாவிடம் இருந்து பணத்தை புடுங்கி வந்து விட சொல்லுகின்றனர். உடனே அவர்கள் ஆட்களும் மீனாவுக்காக காத்துக் கொண்டிருக்க,மீனா ஒரு ஆட்டோவில் வருகிறார்.

கொஞ்ச நேரத்தில் அந்த ஆட்டோ ரிப்பேர் ஆகி நிற்க மீனா இறங்கி கொஞ்ச தூரம் தான் இருக்கு நான் நடந்து போகிறேன் என்று சொல்லிவிட்டு நடந்து வர, சிந்தாமணியின் ஆட்கள் ஸ்கூட்டியில் வந்து மீனாவிடம் பணத்தை பறித்து சென்று விடுகின்றனர் மீனா எவ்வளவு போராடியும் கீழே தள்ளி விட்டு அவர்கள் சென்று விடுகின்றனர் மீனாவின் கையில் அடிபட்டது மட்டுமில்லாமல் பணத்தை இழந்ததை நினைத்து நடுரோட்டில் என்று அழ மீனா கூட வேலை செய்யும் பெண்மணிகள் வந்து என்னாச்சு என்று விசாரிக்கின்றனர். மீனா பணத்தை தொலைத்த விஷயத்தை சொல்லி அவன பிடிக்கணும் என்று போக மீனாவின் கையில் அடிபட்டிருப்பதை பார்க்க அவர்கள் ரத்தம் வருது மீனா வா நம்ம முதல்ல ஹாஸ்பிடல் போகலாம் என்று அழைத்துச் செல்கின்றனர்.

மறுபக்கம் சிந்தாமணி ஆட்கள் போன் பண்ணி மீனாவிடம் பணத்தை திருடிய விஷயத்தை சொன்னவுடன் சந்தோஷப்பட்ட சிந்தாமணி மண்டபம் ஆர்டரை மீனா வராததால் அவ வரமாட்டா என்று சொல்லி மண்டப ஆர்டரை வாங்கி விடுகிறார். முத்து பதறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு ஓடி வருகிறார். மீனாவைப் பார்த்ததும் உனக்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டது என்று சொன்னவுடன் கார் எடுத்தது தான் தெரியும் மீனா என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியல என்று சொல்ல மீனா கட்டிப்பிடித்து பணம் பறிபோயிடுச்சு சீதாவோட சீட்டு காசு அவ பிரண்டு கிட்ட இருந்து வாங்கி கொடுத்தா டெபாசிட் பணம் தானே திருப்பி வந்துரும்னு நெனச்சு தானே கொடுத்திருப்பார் நான் எல்லாரையும் ஏமாத்திட்டேன் என்று மீனா கதறி அழ முத்து உனக்கு எதுவும் ஆகாம இருக்குல்ல அத பாரு பணம் எப்படி வேணா சம்பாதித்து கொடுக்கலாம் என்று சொல்ல மீனா பணத்தையே நினைத்து அழுது கொண்டே இருக்கிறார். முத்து என்ன சொல்லுகிறார்?அதற்கு மீனாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

6 hours ago

மீனாவுக்கு வந்த புது ஐடியா, ரோகினியை திட்டும் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரவி மற்றும் சுருதியிடம் விஜயா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…

7 hours ago

சூர்யா கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

9 hours ago

டாஸ்கில் தீயாக விளையாடும் போட்டியாளர்கள்.. வெளியான முதல் ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…

9 hours ago

ஆளி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

ஆளி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

23 hours ago

Kombuseevi Official Teaser

Kombuseevi Official Teaser | Sarath Kumar, Shanmuga Pandiyan | Ponram | Yuvan Shankar Raja

1 day ago