SiragadikkaAasai Serial Episode Update 21-03-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சரக்கு வைத்திருக்கும் இருவர் முத்துவின் மீது மோத முத்துவின் கையில் சரக்கு பாட்டில் வருகிறது அவர்களிடம் முத்து நல்ல பங்க்ஷன் நடக்கிறதுல எதுக்கு இப்படி எங்களால் வெளியே போய் குடிங்க என்று சொல்லி அட்வைஸ் பண்ணிக் கொண்டிருக்க மனோஜ் முத்து கையில் சரக்கு பாட்டிலை பார்த்துவிட்டு இங்கு வந்து பிடிக்க ஆரம்பிச்சிட்டா நான் என்று தப்பாக நினைத்துக் கொண்டு உடனே விஜயாவிடம் போய் நம்ம இங்கிருந்து கிளம்பலாம் என்று சொல்லுகிறார் ஏன் என்று கேட்க முத்துக்கு குடிக்க ஆரம்பிச்சுட்டா எதாவது பிரச்சனை பண்ணா நமக்கு தான் அசிங்கம் என்று சொல்லுகிறார்.
உடனே விஜயா இங்க வந்தோம் இவன் இப்படித்தான் பண்ணுவானா என்று சொல்லிவிட்டு உடனே அண்ணாமலை இடம் சென்று மனோஜ் சொன்ன விஷயத்தை சொல்லுகிறார் அண்ணாமலை முத்து அப்படி எல்லாம் பண்ண மாட்டோம். அதோ இது பரசு கல்யாணம் அவன் தான் இந்த கல்யாணம் நடக்கவே காரணம் எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சுகிட்டு இருக்கான் அவன் எப்படி செய்வான் என்று சொல்ல மனோஜ் கையில சரக்கு வச்சிருக்கறத பாத்துட்டு தான் சொன்னா இருந்தாலும் நீங்க சொல்லி வைங்க இல்லனா நம்மளுக்கு தான் அசிங்கம் என்று சொல்ல உடனே அண்ணாமலை மற்றும் விஜயா இருவரும் மீனாவை சந்தித்து இந்த விஷயத்தை சொல்லுகின்றனர்.
மீனாவும் அவர் அப்படி எல்லாம் பண்ண மாட்டாரு என்று சொல்ல அண்ணாமலை தெரியுமா இருந்தாலும் நம்ப கவனமா இருக்கறது நல்லது என்று சொல்ல நீங்க எதுக்கு சுத்தி வளைச்சு பேசிக்கிட்டு இருக்கீங்க அவன் கையில ஃப்ரெண்ட்ஸ் கூட சரக்கு பாட்டிலோட இருந்ததா மனோஜ் பார்த்து தான் சொல்லுங்க என்று சொல்ல மீனா மண்டபத்தில் முத்துவை தேடுகிறார். ஸ்ருதி மற்றும் ரவி வெளியில் இருக்க அவர்களிடம் முத்துவை பற்றி விசாரிக்க அவர்கள் தெரியாது என்று சொல்லுகின்றனர் உடனே சுருதி ஒரு போட்டோ எடுத்துக்கலாம் மீனா என்று சொல்லி எடுக்க எடுத்துவிட்டு மீண்டும் முத்துவை தேடுகிறார். கிச்சனில் கறிக்கடைக்காரர் மணி காய்கறி கட் பண்ணி கொண்டு இருக்க சரக்கு பாட்டலுடன் வந்த இருவர் ஊறுகாய் கேட்கின்றனர் உடனே அவர் சரக்கா என்று கேட்க ஆமாம் என்று சொல்ல இந்த டிஸ்டர்ப் பண்ண கூடாது வெளியே எங்கையாவது போய் குடிக்கணும் எந்த தொந்தரவும் பண்ணக்கூடாது என்று சொல்லிவிட்டு ஊறுகாய் கொடுத்து அனுப்புகிறார்.
கொஞ்ச நேரத்தில் அவர்கள் கிச்சனுக்கு வெளியில் சரக்கு ஊத்திக் கொண்டிருக்க முத்து தெரியாமல் அவர்கள் மேல் மோதி விடுகிறார் இதனால் முத்துவின் சட்டையின் மேல் சரக்கு போட்டு விடுகிறது இதனால் கோபப்பட்ட முத்து உங்கள தான் இங்கு குடிக்க வேண்டாம் என்று சொன்னேன்ல பார்க்கின்ற போங்கன்னு சொன்னா திரும்ப திரும்ப இங்கேயே குடிச்சிட்டு இருக்கீங்க அதும் இல்லாம என் மேல வேற ஊத்தி விட்டீங்க என்று சொல்லித் திட்டி அவர்களை அனுப்புகிறார். உடனே முத்து ரூமுக்கு போக வழியில் இரண்டு பெண்கள் பட்ட பகலில் எப்படி குடிச்சிருக்கான் பாரு எப்படி ஸ்மெல் வருது என்று பேசிக் கொண்டிருக்க மீனா யாரை சொல்றீங்க என்று கேட்க இப்போ ஒருத்தன் இப்படி போனா அவன் மேல ஒரே சாராய வாசனை வந்துச்சு என்று சொல்ல மீனா பின்னாலே செல்ல முத்து இருக்கிறார்.
மீனாவை பார்த்தவுடன் கல்யாணம் வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு என்று முத்து கேட்க நீங்க உங்க வேலை ஆரம்பிச்சிட்டீங்களா என்று கேட்கிறார். என்ன சொல்ற எனக்கு ஒன்னும் புரியல என்று கேட்க, உங்களுக்கு ஏதாவது பண்ணுனா வெளியே பண்ண வேண்டியதுதானே கல்யாண வீட்டுல எதுக்கு இப்படி பண்றீங்க என்று சொல்ல இப்ப எதுக்கு நீ உளறிக்கிட்டு இருக்க என்று கேட்கிறார். நான் பேசறது உங்களுக்கு ஒளர மாதிரி தான் இருக்கும் என்று கோபப்பட்டு திட்டிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ரவி வந்து விடுகிறார் முத்துகிட்ட வந்த உடனே ஏன்டா இப்படி குடிச்சிருக்க என்று அவரும் தவறாக நினைத்துக் கொண்டு திட்ட ஆரம்பிக்க முத்து நடந்த விஷயங்களை சொல்லியும் அவர்கள் நம்ப மறுக்கின்றனர் பிறகு உங்களுக்கு நான் நிரூபிக்கிறேன் என்று பார்க்கையில் வந்து தேட அந்த இருவரும் அங்க இல்லாமல் இருக்கின்றனர் மறுபக்கம் அதே இடத்திற்கு கறிக்கடைக்காரர் மணி ஆரஞ்சு பழப்பெட்டியை இறக்கி தூக்கிக் கொண்டு வர வெளியில் வர யாரும் அவரை பார்க்காமல் இருக்கின்றனர்.
மறுபக்கம் மனோஜ் மற்றும் ரோகினி மொழி போடுவது குறித்து பேசிக்கொண்டிருக்க முத்து இவர்கள் காணாமல் இருப்பதால் மீனா குடிச்சா குடிச்சதா ஒத்துக்குங்க அதுக்காக இப்படி எதுக்கு பொய் சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்று மீண்டும் கோபப்படுகிறார். பரசு கறிக்கடைக்காரர் மணியை சந்தித்து சாப்பாடு எல்லாம் ரெடி ஆயிடுச்சா என்று கேட்க அதெல்லாம் ரெடி ஆயிடுச்சு நீங்க கல்யாணம் முடிஞ்சதும் பந்திக்கு வர வச்சுடலாம் என்று சொல்லுகிறார். நான் என்னோட பிரண்டுக்கு உங்களை அறிமுகப்படுத்தி வைக்கணும் என்று பேசி அழைத்து வர அண்ணாமலை பக்கத்தில் வருவதற்குள் சமையல்காரர் ஒருவர் வந்து மணியை அழைத்து சென்று விடுகிறார். பிறகு முத்து குடிக்கவில்லை என நிரூபிக்க என்ன செய்கிறார்? நீ நான் ரவி நம்புகிறாரா? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
மல்லிகை பூவில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது…
மதராசி படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
காந்தி கண்ணாடி படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்று எபிசோடில் சுருதி கடை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா, இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…