அருணிடம் சிக்கிய செல்வம், ரோகினி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி கிருஷ் ஸ்கூலில் சேர்க்க கிரிஷ் நான் உன்ன விட்டு தனியாக இருக்க மாட்டமானா கூடவே வரேன் என சொல்லுகிறார் ஆனால் ரோகினி நீங்கதான் படிச்சாகணும் கிரஷ் என்று சொல்ல வேறு வழி இல்லாமல் ஒரு கட்டத்திற்கு மேல் கிருஷ் ஓவராக அடம் பிடித்து அழுகிறார்.உடனே ரோகினி கோபமாக பேச கிருஷ் அமைதியாக சென்று விடுகிறார் ரோகிணி போர்டிங் ஸ்கூல் விட்டு வெளியில் வரும்போது லட்சுமி பார்த்துவிடுகிறார் உடனே ரோகினி வந்து நீ எதுக்கு அவனை விட்டுட்டு போன என்று கேட்க அவன நான் அனாதையாவா விட்டுட்டு போன அம்மா கிட்ட தானே விட்டுட்டு போன என்று கேட்கிறார். அவனுக்கு என்ன யாருமே இல்லையா உன் கூட இருப்பான்னு தானே விட்டுட்டு போன அவனுக்கு இப்போ அம்மாவோட பாசம் கிடைக்கலனா வேற எப்ப கிடைக்கும் அவன் ஒன்னும் அனாதை கிடையாது அவனுக்கு அம்மா நீ இருக்க பாட்டி நான் இருக்கேன் என்று சொல்ல என் கூட அனுப்பிடு என்று கேட்கிறார்.

நீதான் அவனை விட்டுட்டு போயிட்ட இல்ல இப்ப எதுக்கு வந்து கூப்பிடுற நீ பேசாம சித்தி கூட இரு நான் உனக்கு பணம் அனுப்புறேன் என்று சொல்ல உன் பணம் இன்னும் எனக்கு தேவையில்லை என்று கோபமாக பேசுகிறார். அவனுடைய எதிர்காலம் என்ன ஆகும் என்று கேட்க எல்லாத்தையும் நான் யோசிச்சு தான் இந்த ஸ்கூல்ல சேர்த்து இருக்கேன் அவன் இங்க நல்லா இருப்பான் நீ அவனை பாக்கணும்னா எனக்கு போன் பண்ணிட்டு அப்புறம் வந்து பாரு அப்பதான் உள்ள விடுவாங்க என்று சொல்லிவிட்டு ரோகிணி கையில் ஊருக்கு போக பணத்தை கொடுத்து விட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் மீனா கடை ஒன்றுக்கு பூ கொடுத்து விட்டு வரும்போது சீதா போன் பண்ணுகிறார் எந்த கோவில் இருக்கீங்க சீதா என்று கேட்க வீட்டுக்கு வந்துட்டோம் அக்கா காலைல தான் வந்தோம் என சொல்லுகிறார் அம்மா எங்க இருக்காங்க என்று கேட்க வீட்டிலேயே விட்டுட்டோம் என்று சொல்ல சீதா இவ்வளவு நாள் அம்மா எங்கேயுமே போகாம கடையில் இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க இல்ல அக்கா என்று கேட்க மீனா அம்மா சீதா அப்பா இருந்தா போவாவது எங்கேயாவது ஒரு நாள் எப்பயாவது குற்றாலம் போவோம் அதுக்கு அப்புறம் நம்ம எங்கேயுமே போனதில்லையே என்று சொல்லுகிறார்.

ஆமா இப்ப கொஞ்சம் அம்மா ரிலாக்ஸ் ஹா பீல் பண்ணி இருப்பாங்க என்று சொல்லிவிட்டு நான் உனக்காக நிறைய ஸ்னாக்ஸ் புடவை எல்லாம் வாங்கி இருக்கேன் நீ வீட்டுக்கு வா அக்கா என்று சொன்ன சரி நான் நாளைக்கு வரேன் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மீனாவை கிராஸ் பண்ணி ரோகினியின் அம்மா சென்று கொண்டிருக்க மீனா போன வைத்துவிட்டு பிறகு வண்டியை எடுக்கும்போது கவனித்து விடுகிறார் பிறகு கூப்பிட்டு என்னாச்சுமா இருக்குமா நீங்க இப்படி பண்றீங்க எதுக்கு தனியா விட்டுட்டு போனீங்க என்று கேள்வி மேல் கேள்வி கேட்க லட்சுமி கண்கலங்கி அழுகிறார்.. நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் மீனா கிருஷ் அவனோட அம்மாகிட்ட இருக்கணும்ன்றதுக்காக தான் விட்டுட்டு போனேன் என்று சொல்ல அவன் எப்படி தனியா உங்க அம்மாவை தேடி கண்டுபிடிப்பான் அவன் எங்க கூட தான் இருந்திருப்பான் என்று கேட்க நான் மிகப்பெரிய பாவி எனப் பெரிய தப்பு பண்ணிட்டேன் நீயும் முத்து தம்பியோ இல்ல நான் இன்னிக்கு என் உயிரே இருந்திருக்காது ஆனா நான் உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன். என்றெல்லாம் பேசி திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் பஸ் வந்தவுடன் நான் எனக்கு பஸ் வந்துருச்சு நான் ஏறி போறேன் என்று சொல்லிவிட்டு நீயும் முத்து தம்பியும் உன் மனசுக்கு நீங்க நல்லா இருக்கீங்க நான் தான் பாவி என்று சொல்லிக்கொண்டு பஸ்ஸில் ஏறி சென்று விடுகிறார்.

மறுபக்கம் செல்வம் அவரது மச்சானுடன் வண்டியில் வந்து கொண்டிருக்க பின்னால் உட்கார்ந்து இருக்கும் மச்சான் ஹெல்மெட் போடாததால் அருண் அவரது போலீஸ்காரர்களுடன் செக்கிங் இருக்கிறார் அவரது மச்சான் போயிடலாம் என சொல்ல செல்வம் அவன் முத்துவோட சகல தான் நாங்க தான் முன்னாடி நின்னு கல்யாணம் எல்லாம் பண்ணும் நல்லா தெரியும் பேசிக்கலாம் என்று வர அருண் வண்டியை நிறுத்துகிறார். பிறகு அருண் என்ன கேட்கிறார்?அதற்கு செல்வத்தின் பதில் என்ன? மீனா வீட்டில் வந்து என்ன சொல்லுகிறார்?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update 20-08-25
jothika lakshu

Recent Posts

கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

2 hours ago

சன் டிவியில் மூன்று சீரியல்கள் இணையும் மெகா சங்கமம்..!

சன் டிவியின் மூன்று சீரியல்கள் மெகா சங்கமமாக இணைய உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென…

3 hours ago

சுந்தரவல்லி வளையில் சிக்கிய சூர்யா, நந்தினிக்கு விழுந்த அறை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

4 hours ago

தளபதி விஜய்க்கு திரிஷா சொன்ன வாழ்த்து..!

விஜய்க்கு திரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. ஜோடி படத்தின் மூலம்…

10 hours ago

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஃபைனலிஸ்ட் யார் தெரியுமா?முழு விவரம் இதோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது…

11 hours ago

மதராசி : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

11 hours ago