ஸ்ருதி எடுத்த முடிவு, அதிர்ச்சியில் ரவி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருக்க முத்துவும் மீனாவும் வருகின்றனர். நீங்க ஏன் அத்தை இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்டேன் நீ தான் காலையிலேயே ஆள காணோமே நான் என்ன பண்ண முடியும் என்று கேட்கிறார் நான் இவரை கூட்டிட்டு வர போயிருந்தேன் என்று சொல்ல, ஆமா இவன் ஸ்கூல் படிக்கிறான் இவன போய் தான் இவ கூட்டிட்டு வர்ற என்று கிண்டல் பண்ணிக்கிறார். உடனே அண்ணாமலையும் வந்து விடுகிறார் மேலே இருந்து மனோஜ் பற்றும் ரோகிணி கீழே இறங்கி வந்து காபி எங்க ஆன்ட்டி என்று கேட்க, போயிட்டு வந்திருக்காங்கல்ல சொல்ல,மீனா குடுங்க அத்தை நான் கோலம் போட்டுட்டு வந்து காபி போடுகிறேன் என்று சொல்லுகிறார். உடனே மீனாவின் கையில் இருக்கும் கோலமாவை வாங்கி முத்து போய் உன் பொண்டாட்டிய போட சொல்றா என்று சொல்ல அவ ஏன் செய்யணும் என்று கேட்கிறார். அப்ப இவன் மட்டும் எல்லா வேலையும் செய்யணும்மா என்று கேட்ட மனோஜ் வாயை மூடுகிறார். பிறகு ஜெயிலுக்குப் போய் வந்ததை கிண்டலாக மனோஜ் பேச நான் தப்பு பண்ணிட்டு போல தப்பு பண்ணிட்டு பிராடுத்தனம் பண்றவங்க எல்லாம் தப்பிச்சுக்கிட்டு தான் இருக்காங்க எங்களுக்கு தான் நேரம் சரியில்லை என்று சொல்ல விஜயா சரி நம்ம காபி குடிக்க போலாம் வாங்க என்று மேலே அழைத்து சொல்லுகிறார். அண்ணாமலை அமைதியாகவே இருக்க முத்துவும் மீனாவும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கின்றனர். முத்து அண்ணாமலையை சமாதானப்படுத்த இனிமே இந்த தப்பு பண்ணாதீங்க என்று அட்வைஸ் கொடுத்துவிட்டு கிளம்புகிறார்.

ரூமில் ஸ்ருதி படுத்துக் கொண்டிருக்கிறார் ரவி எழுந்து வேலைக்கு கிளம்பி கொண்டிருக்கிறார் தூக்கத்திலிருந்து எழுந்த சுருதி இங்கே ஒருத்திக்கு பிவரா இருக்கு நீ பாட்டுக்கு கிளம்பிட்டியா என்று கேட்க பிவரா என்று தொட்டுப் பார்க்க பீவரா இருக்கு என்று ரவியும் சொல்லுகிறார். ஓ உனக்கு அதுவே முதல்ல தெரியாதா என்று கேட்க நான் இந்நேரம் டப்பிங் போயிருப்பேன் நான் ஏன் படுத்துகிட்டு இருக்கேன் என்று நீ யோசிக்கலயா. என்று கேட்க நீ டப்பிங் லீவ் சொல்லி இருக்கேன் நினைச்சேன் என்று சொல்லுகிறார். அதெல்லாம் இல்ல இன்னைக்கு என் கூட இரு என்று சொல்லுகிறார் சுருதி. இன்னைக்கு ஏன் ஹோட்டலில் முக்கியமான விஷயம் இருக்கு என்று நான் கிளம்பனும் என்று சொல்ல அப்ப எனக்காக இருக்க மாட்டியா நான் இந்த மாதிரி ஃபீவர் இருந்தா தனியா இருக்க மாட்டேன் கூட இரு ரவி என்று மறுபடியும் கேட்க அந்த நேரம் பார்த்து ரவியின் ஓட போன் பண்ணுகிறார்.

ஸ்ருதி அந்த போனை எடுக்க அவரிடமிருந்து புடுங்கி ரவி பேசுகிறார் ஸ்ருதி ஸ்பீக்கரில் போடு என்று சொல்ல அவரும் ஸ்பீக்கரில் போட்டு கிளம்பிட்டீங்களா ரவி எங்க இருக்கீங்க என்று கேட்க நான் வீட்லதான் இருக்கேன் என்று சொல்லுகிறார் இன்னைக்கு எனக்கு லீவு தேவைப்படுது என்று அவரிடம் கேட்க இன்னைக்கு எவ்வளவு முக்கியமான விஷயம் நடக்குது இந்த டிஷை நீங்க தான் பண்ணனும் அப்படி இருக்கும்போது எப்படி லீவு கேக்குறீங்க என்று கேட்க அதற்கு என் ஒய்ஃப்க்கு உடம்பு சரியில்ல அதனால தான் கேட்கிறேன் பக்கத்துல இருந்து பார்த்துக்கணும் என்று சொல்லுகிறார். ஆனால் எவ்வளவு சொல்லியும் கேட்காத நீத்து நீங்க ஜாயிண்ட் ஃபேமிலில தானே இருக்கீங்க அவங்க பார்த்துப்பாங்க நீங்க வந்து தான் ஆகணும் என்று சொல்லிவிட்டு ஃபோனை வைக்க சரி என்று சம்மதித்து விடுகிறார் ரவி. அப்போ நான் இவ்வளவு சொல்லியும் நீ வேலைக்கு போகணும்னு சொல்ற இல்ல என்று சொல்ல அதற்கு நீயே கேட்டுட்டு தான் இருந்தேன் என்று சுருதியிடம் சொல்ல அவர் வேலையில் இருந்து நிற்க சொல்கிறார். அதெல்லாம் இப்போதைக்கு முடியாது, நான் போயிட்டு சீக்கிரமா வந்து உன்னை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறேன் மீனா அண்ணன் கிட்ட சொல்லிட்டு போறேன் அவங்க உன்ன பார்த்துப்பாங்க என்று சொல்லிவிட்டு ரவி கிளம்பி விடுகிறார்.

பிறகு ஸ்ருதி பெட்டியுடன் வெளியே கிளம்ப அதனைப் பார்த்த மீனா எங்க போறீங்க சுருதி உங்களுக்காக கஞ்சி வச்சிருக்கு குடிச்சிட்டு படுங்க என்று சொல்ல, அதெல்லாம் எனக்கு ஒன்னும் வேணாம் மீனா நான் போறேன் என்று சொல்லுகிறார். எங்க போறீங்க என்று கேட்க எங்க அம்மா வீட்டுக்கு போக போற ரவிக்கு என் மேல எந்த அக்கறையும் கிடையாது அன்னைக்கு உங்களுக்கு தலையில் அடிபட்ட போ முத்து ஒரு நாள் ஃபுல்லா உங்க கூட இருந்தாருல்ல இத்தனைக்கும் நீங்க விருப்பம் இல்லாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க ஆனா நான் இவனை எங்க வீட்ல எதிர்த்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன் ஆனா இவனுக்கு என் மேல பாசமே இல்ல என்று சொல்லி வெளியே கிளம்புகிறார். மீனா எவ்வளவு தடுத்து நிறுத்தியும் கேட்காத சுருதி வாசல் வரையும் வர வாசலில் விஜயா வருகிறார். என்னம்மா ஆச்சு எதுக்கு பெட்டியோட நிக்கிற என்று கேட்க நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன் என்று சொல்லுகிறார்.

உடனே மீனாவிடம் நீ எதனா சண்டை போட்டியா உனக்கு என்னடி பிரச்சனை என்று கேட்க உடனே என்கிட்ட வந்துராதீங்க ஸ்ருதிக்கும் ரவிக்கும் பிரச்சனை அதனால அவங்க போறாங்க என்று சொல்ல ரவி அப்படி எல்லாம் பண்ண மாட்டானே என்று சொல்ல அப்ப நான் அப்படிதான் சண்டை போடுவேன் என்று ஸ்ருதி கேட்டு விஜயா எவ்வளவு தடுத்து நிறுத்தியும் அவர் கிளம்பி விடுகிறார். உடனே விஜயா எல்லாம் இவனுங்கள சொல்லணும் புருஷனை மயக்கி வச்சுக்கிட்டு இப்படி பண்ணிக்கிட்டு இருக்காலுங்க, என்று கோபப்பட்டு உள்ளே செல்கிறார். இதையெல்லாம் முத்து வெளியில் நின்று வேடிக்கை பார்க்கிறார்.

பிறகு என்ன நடந்தது என்று மீனா விடம் கேட்க மீனா நடந்ததை சொல்கிறார். சரி விடு அவனும் கூட இருந்திருக்கணும் இல்ல என்று சொல்லிவிட்டு, உடம்பு சரியானதும் திரும்பி வந்துருவாங்க நீ போய் காபி எடுத்துட்டு வா என்று அனுப்பி வைக்கிறார். ரெஸ்டாரன்ட் இல் ரவி சுருதி பற்றி நினைத்துக் கொண்டிருக்க நீத்து என்ன ரவி யோசிச்சுட்டு இருக்கீங்க என்று கேட்க, உங்க வைஃப் உடம்பு சரியில்லைன்னு சொன்னீங்க இல்ல நீங்க கால் பண்ணி பேசுங்க என்று சொல்ல அவரும் கிச்சனுக்கு வருகிறார்.

உடனே விஜயா போன் போட்டு ஸ்ருதி நடந்து கொண்ட விஷயத்தை சொல்ல என்னாச்சும்மா என்று கேட்க அவ அம்மா வீட்டுக்கு போயிட்டா என்று சொல்லுகிறார் விஜயா. என்ன நடந்தது என்று கேட்க அவளுக்கு உடம்பு சரியில்ல நான் வேலைக்கு வந்துட்டேன் அதனால கோவிச்சுக்கிட்டா என்று சொல்ல நாங்கெல்லாம் இருக்கோம்ல அதுக்கு எதுக்கு போகணும் நீயும் உன் வேலையை பார்க்க வேண்டாம் வா என்று ரவியிடம் சொல்லுகிறார் விஜயா.

விஜயா ரவியிடம் என்ன சொல்கிறார்? அதற்கு ரவியின் பதில் என்ன? ரவி என்ன செய்யப் போகிறார் என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update
jothika lakshu

Recent Posts

Don’t Trouble the Trouble Teaser

Don’t Trouble the Trouble - Teaser (Tamil) | Fahadh Faasil | Ssara | Shashank Yeleti

6 hours ago

Train Official Teaser

Train Official Teaser | Vijay Sethupathi | Mysskin | Shruti Haasan | Kalaippuli S Thanu

6 hours ago

Anbe Diana Official Trailer

Anbe Diana Official Trailer | Pari Elavazhagan, Ramya Ranganathan, Roja | Bharath Sankar

6 hours ago

Oh Sukumari Teaser

Oh Sukumari Teaser (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath Dharshan | Bharath Manchiraju

6 hours ago

இதயம் முரளி திரை விமர்சனம்

பள்ளிப் பருவ காதல், கல்லூரி நினைவுகள், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை இணைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'இதயம் முரளி'. திருச்சியில்…

6 hours ago

லட்சுமி காந்தன் கொலை வழக்கு திரை விமர்சனம்

1970-களின் தமிழக கிராமப்புற பின்னணியில் நகரும் 'லட்சுமி காந்தன் கொலை வழக்கு', மரண தண்டனை, நீதி மற்றும் மனிதநேயம் குறித்து…

6 hours ago