முத்து,மீனாவை பாராட்டிய பரசு. கடுப்பான விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பார்வதி மனோஜ் பணத்தை கண்டுபிடிக்க வெற்றிலையில் மை போட்டு பார்க்கும் சாமியாரை அழைத்து வர அவர் வெத்தலையில் மை போட்டு பார்க்க எதுவும் தெரியாமல் இருக்கிறது ஸ்ருதி கிண்டல் அடிக்க பிறகு அவர் வெற்றிலையில் ஒரு ஓட்டை போட்டு பார்க்க சுருதி இப்போ தெரியுது என்று சொல்ல என்ன தெரியுது என்று மனோஜ் கேட்க அவர் போட்டோ ஓட்ட வழியாக கைத்தெரியுது என்று சொல்ல அனைவரும் சிரிக்கின்றனர் இதனால் சாமியார் டென்ஷன் ஆகி மனோஜ் வைத்த காசையும் எடுத்துக்கொண்டு இவங்க எல்லாம் என்ன கிண்டல் பண்றாங்க நான் இனிமேல் கண்டுபிடிக்க முடியாது என்று சொல்லி வேக வேகமாக சென்று விடுகிறார்.

உடனே மனோஜை மற்றவர்கள் கிண்டல் செய்ய அவர் ரூமுக்கு சென்று விடுகிறார். மறுபக்கம் முத்து தனியாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்க மீனா வருகிறார் என்ன விஷயம் என்ன யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க அதற்கு முத்து இவ்வளவு படிச்சிருக்கானா மூடநம்பிக்கை நம்பிகிட்டு இருக்கான் அப்ப படிப்புக்கும் மூளைக்கும் சம்பந்தம் இல்லையா என்று எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார் நானும் உங்க அண்ணன் முதல்ல கொஞ்சம் அறிவாளியா இருப்பார் என்று தான் நினைச்சேன் ஆனா இப்படி இருக்காரு என்று சொல்லி பேசி கொள்கின்றனர் இது மட்டும் இல்லாம இந்த பணத்தை அவன் கண்டுபிடிக்கிற மாதிரி தெரியல இது அப்பாவோட பணம் இதை நான் கண்டுபிடிச்சே ஆகணும் என்று சொல்ல அதற்கு மீனா மாமா தான் நம்ம இந்த விஷயத்துல தலையிட வேணாம்னு சொல்லி இருக்காரே என்று சொல்ல ஆனால் இவனைப் பார்த்தால் கண்டுபிடிக்கிற மாதிரி தெரியல ஒன்னு கதிர தேடி ஓடி ஆக்சிடென்ட் ஆகி வரும் இல்லன்னா சாமியாரை கூட்டிட்டு வரான் இவன் எப்படி கண்டு பிடிப்பான் நம்ம சிசிடிவி வீடியோல இருக்குற அவனோட போட்டோவ என்னோட ஃப்ரெண்ட்ஸ்க்கு அனுப்பி தேடிப் பார்க்க சொல்றேன் என முடிவெடுக்கின்றனர்.

மறுபக்கம் மனோஜ் பாத்ரூமில் இருந்து வெளியே வர டிரஸ் ஓட ரோஸ் இருக்கிறது மனோஜ் வந்து பார்க்க சர்ப்ரைஸ் ஆகி நிற்க ரோகினி ஓடி வந்து கட்டிப்பிடித்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லுகிறார் உனக்கு இன்னைக்கு ஃபுல்லா சர்ப்ரைஸ் இருந்துகிட்டே இருக்கும் மனோஜ் நீ ரெடியாயிட்டு வா என்று சொல்ல கிளம்பி வெளியே வருகிறார். பிறகு வீட்டில் இருப்பவர்களும் மனோஜ்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல ரோகினி மனோஜ்க்குப் பிடித்த ஐட்டம் சொல்ற சமைச்சு கொடுங்க மீனா என்று சொல்ல இன்னைக்கு ஒரு நாள் பண்ணி தரேன் என்று சொல்லுகிறார்.உடனே முத்து மனோஜை கிண்டல் அடிக்க இன்னைக்கு ஒரு நாளாவது அவர் எதுவும் சொல்லாதீங்க என்று சொல்ல முத்துவும் சரி நான் எதுவும் சொல்ல மாட்டேன் என்று சொல்லிவிடுகிறார்.

கொஞ்ச நேரத்தில் ஒரு நபர் மனோஜ் பெயரில் கார் புக் ஆக இருப்பதாகவும் கலர் சூஸ் பண்ணீங்கன்னா ரெடி ஆயிடும் என்று சொல்லுகிறார். உடனே மனோஜ் நான் எதுவும் பண்ணல என்று சொல்ல ரோகிணி உனக்காக நான் தான் பண்ணி இருக்கேன் மனோஜ் இதுவும் ஒரு சர்ப்ரைஸ் என்று சொல்லி கலரை சூஸ் பண்ணி கொடுக்கின்றனர். ஆனால் முத்துவின் வாய் மனோஜை கலாய்க்காமல் இருக்க முடியவில்லை வாய் திறந்து திறந்து அமைதியாக உட்கார்ந்து விடுகிறார். கொஞ்ச நேரத்தில் கேக் எடுத்துக்கொண்டு வந்து ஒரு நபர் கொடுக்க இதுவும் ஒரு சர்ப்ரைஸ் என்று கேட்க எடுத்து வைத்து அனைவரையும் கேக் வெட்ட கூப்பிடுகின்றனர் மீனா அத்தை மாமா வந்துட்டோம் என்று சொல்ல அவங்க வரும்போது இன்னொன்னு வெட்டிக்கலாம் டைம் ஆகுது என்று சொல்லி கேக் வெட்டுகின்றனர். பிறகு நாளைக்கு பரசு மாமா கல்யாணம் இருக்கு யாரும் மறந்துடாதீங்க என்றும் முத்து சொல்ல ரோகிணி நான் தான் மேக்கப் போறேன் எப்படி மறந்திடுவேன் என்று சொல்லுகிறார்.

பிறகு அனைவரும் பரிசு கல்யாணத்திற்கு காரில் வந்து இறங்க, உள்ளே கறிக்கடைக்காரர் மணி எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்து கொண்டிருக்கிறார். இவர்கள் குடும்பத்துடன் வர பரசு சந்தோஷமாக இவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் செல்கிறார் அண்ணாமலை மீனாவின் டெகரேஷன்களை பாராட்ட பரசு முத்து மீனாவை பற்றி பெருமையாக பேசுகிறார். இதனால் விஜயா கல்யாணம் முடிகிற வரைக்கும் இவங்க ரெண்டு பேர் புராணம்தான் ஓடும் என்று கடுப்பாகிறார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரோகினி பொண்ணு ரூம் எங்க இருக்குன்னு சொல்லுங்க மேக்கப் போடணும் என்று சொல்லி சென்று விட பிறகு இருப்பவர்கள் உள்ளே சென்று உட்காருகின்றனர் உடனே மணி மேக்கப் போட வந்திருக்காங்க அவங்களுக்கு காபி கொடுக்கணும் என்று அவரே போக அவர் ரோகினியை பார்க்கிறாரா? இல்லையா? என்ன நடக்கப் போகிறது? என்று இன்றைய எபிசோட் பார்த்த தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update 19-03-25
jothika lakshu

Recent Posts

சாமை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

சாமை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

2 hours ago

“ழகரம்”என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய சூர்யா.!!

புதிய தயாரிப்பு நிறுவனம் சூர்யா தொடங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில்…

6 hours ago

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, சுரேகா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

7 hours ago

இட்லி கடை : தனுஷ் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தை இயக்க தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…

9 hours ago

கண்மூடித்தனமாக யாரையும் நம்பாதீங்க. அஜித் சொன்ன தகவல்.!!

அடுத்தவன் காலை மிதிச்சுட்டு முன்னேறாதீங்க என்று அஜித் அட்வைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…

10 hours ago

வித்யாவிடம் மீனா கேட்ட கேள்வி, மனோஜ் சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராணியிடம்…

12 hours ago