siragadikkaaasai serial episode update 18-11-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் செக்கை வாங்கிவிட்டு சந்தோஷமாக பார்த்து முத்தம் கொடுக்கிறார் ரோகினி இடம் கொடுத்து நீயும் முத்தம் கொடு இது நம்ம வாழ்க்கையில கிடைச்சிருக்கிற மிகப்பெரிய சந்தோஷம் என்று சொல்லி கொடுக்க ரோகினியும் முத்தம் கொடுக்கிறார். உடனே அவரது நண்பர் நானும் கொடுக்கவா என்று கேட்க நீங்க எப்படி கொடுக்க முடியும் என்று கேட்கிறார். பிறகு அனைவரும் சாப்பிட உட்காரா ரோகினி மீனாவுக்கு உதவி செய்கிறார் உடனே நீ எதுக்குமா இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க வேற ஒன்னும் செய்ய சொன்னாளா என்று கேட்க அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ஆன்ட்டி அவங்க தனியா வேலை செஞ்சிட்டு இருந்தாங்க என்று சொல்லுகிறார்.
பிறகு ரோகிணி அனைவருக்கும் பரிமாற ஒரு வாய் எடுத்து சாப்பிட்டு விட்டு காரமாக இருப்பதாக சொல்லுகிறான் உடனே மனோஜ் காய் சாப்பிட்டுவிட்டு உப்பு கம்மியாகவும் ரசத்தில் உப்பு அதிகமாக இருப்பதாக கம்ப்ளைன்ட் பண்ணுகின்றன எதுக்கு இப்படி சமைச்சி இருக்கா நாங்க சாப்பிடணும்னு நினைச்சியா இல்ல சாப்பிட கூடாதுன்னு நினைச்சியா என்று விஜயா திட்ட,அண்ணாமலை என்னைக்கோ ஒருநாள் தவறி போறதெல்லாம் சகஜம் தான் என்று சொல்லிவிட்டு மீனாவுக்கு உடம்பு சரியில்ல நான் என் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போடா என்ற முத்துவுடன் சொல்ல அவளுக்கு உடம்பு எல்லாம் சரியா தான் இருக்கு மனசு தான் சரியில்ல என்று சொல்லுகிறார்.
அவை எதையோ போட்டு மனசுக்குள்ள யோசிச்சுக்கிட்டு இருக்கா எதுவா இருந்தாலும் சொல்லு மீனா எதுக்கும் கவலைப்படாத என்று முத்து சொல்லுகிறார். உடனே மீனாவும் ஏதோ தெரியாம நடந்துச்சுங்க என்று சொல்லுகிறார் உடனே ஸ்ருதி நான் என்னோட ரெஸ்டாரன்ட்ல இருந்து இப்ப சாப்பாடு எடுத்துட்டு வரவா என்று கேட்க மனோஜ் எனக்கு தம்மட்டன் பிரியாணி என்று சொல்ல முத்து பிரிட்ஜில் தயிர் இருக்கு அத வச்சு சாப்பிட்டுக்கலாம் என்று சொல்லுகிறார்.
அண்ணாமலையும் சரி ஒரு நாளைக்கு தானே அல்லாத தயிர் வச்சு சாப்பிட்டுக்கோங்க என்று சொல்லுகிறார். உடனே கிச்சனுக்குள் வந்த மீனா கோபமாக இருக்க ரோகினியும் பின்னாலே வருகிறார் எதுக்குங்க இப்படி இருக்கீங்க என்று கேட்க ஏன் எதுக்குன்னு உனக்கு தெரியாதா என்று கோபமாக பேசுகிறார் உன்னால் என்னால எந்த விஷயமும் பண்ண முடியல அவர் இப்ப கண்டுபிடிக்க ஆரம்பிச்சுட்டாரு அவருக்கு என் மனசுல ஏதோ மறைக்கிற வரைக்கும் தெரிஞ்சுடுச்சு இதுக்கு மேல நான் அவர்கிட்ட மறைக்க மாட்டேன் உண்மைய சொல்ல தான் போறேன் என்று மீனா வெளியில் வர உடனே கத்தியை எடுத்து கையில் வைத்துவிட்டு நீங்க பொய் சொன்னீங்கன்னா நான் என்னோட கைய அறுத்துப்பேன் என்று சொல்ல மீனா கத்தியை வாங்கி கீழே போடுகிறார்.
என்ன சத்தம் மீனா என்று கேட்க பழம் கட் பண்ண கத்தி எடுத்தேன் கீழே விழுந்துடுச்சு என்று சொல்ல பார்த்து பத்திரமா பண்ணு என்று சொல்லுகிறார். பிறகு மீனா மொட்டை மாடியில் இருக்கிற ரோகினி வந்து பேசுகிறார் மீனா கண்கலங்கி கொண்டிருக்க இதுக்கு மேல நீங்க இவ்வளவு கில்ட்டியா ஃபீல் பண்றீங்க என்று கேட்க உனக்கு தான் எந்த ஒரு குற்ற உணர்ச்சியுமே இல்லை இந்த குடும்பத்தை ஏமாத்துறவனும் நினைப்பு இல்லை என்று சொல்ல என் வாழ்க்கையில நடந்த சில சம்பவத்துனால தான் நான் இது மாதிரி பொய் சொன்ன என்று சொல்ல அப்படி உன் வாழ்க்கையில் என்னதான் நடந்துச்சு என்று மீனா கேட்கிறார் அப்போது ரோகிணி அவர் சிறிய வாழ்க்கையில் இருந்து திருமணம் ஆனவரை நடந்த அனைத்து உண்மைகளையும் மீனாவிடம் சொல்லி அழுகிறார். ரோகினி என்ன சொல்லுகிறார்? மீனா என்ன செய்யப் போகிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…
சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்யின் கடைசிப்படமாக…
தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! துபாயில் இருந்து கடந்த மார்ச்…
சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார் சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி…
பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர்…