siragadikkaaasai serial episode update 15-11-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ரோகினி அம்மா கிரிஷ் மற்றும் மகேஸ்வரி மூவரையும் வீட்டுக்கு கட்டாயப்படுத்தி அழைத்து வருகிறார். வீட்டில் கிச்சனில் மீனா வேலை பார்த்துக் கொண்டிருக்க ஸ்ருதி வீட்டில் நடப்பதை வீடியோ எடுத்துக் கொண்டு வந்து கிச்சனுக்கு வருகிறார் அப்போது மீனா அப்பளத்தை கரிச்சி எடுக்க உங்களுக்கு என்ன ஆச்சு மீனா புது டிஷ் ட்ரை பண்றீங்களா என்று கேட்க மீனா எதுவுமே பேசாமல் அமைதியாக யோசித்துக் கொண்டே இருக்கிறார். பிறகு சுருதி மீனாவை தட்டி விட்டு உங்களுக்கு என்ன ஆச்சு என்று கேட்க ஒன்றும் இல்லை நான் நல்லாத்தான் இருக்கேன் என்று சொல்லுகிறார். இல்லையே நீங்க இது மாதிரி பண்ணக்கூடிய ஆள் இல்லை என்று சொல்ல இவ்வளவு கரிய விட மாட்டீங்க என்று கேட்பார் ஆமா கரியவிட்டு இருக்கக் கூடாதுதான் என்று சொல்லுகிறார் என்ன சம்பந்தமே இல்லாம பேசிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க ஒன்னு இல்ல ஸ்ருதி நான் நல்லா தான் இருக்கேன் என்று சொல்லுகிறார்.
இதுல கொஞ்சம் உப்பு போடல என்று சொல்லி எடுக்க அது சக்கர மீனா எனக்கே வித்தியாசம் தெரியுது நீங்க இது மாதிரி பண்ண மாட்டீங்களே என்று கேட்கிறார். உடனே மறுபக்கம் ரோகினி நம் மீனாவுக்கு வரும்னு தெரிஞ்சிருச்சு அவ கால்ல போய் நம்ம வேற மாதிரி ஆயிடுச்சு எப்ப இருந்தாலும் சொல்லிடுவா அவளை கண்காணிச்சுக்கிட்டே இருக்கணும் என்று சொல்லி கிச்சனுக்கு வர ஸ்ருதி மீனாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். உடனே ரோகினி வந்தவுடன் எனக்கு மீனா டல்லா இருக்காங்க என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்லாம நல்லா தான் இருக்காங்க என்று ரோகினி சொல்ல சரி என்னமோ பண்ணுங்க என்று சொல்லிவிட்டு சுருதி சென்று விடுகிறார். ரோகிணி ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா மீனா என்று கேட்க நீ பண்ண வரைக்கும் போதும் போ என்று சொல்லி அனுப்பி விடுகிறார்.
மறுபக்கம் முத்து வந்து நம்ம வீட்டுக்கு யார் வந்திருக்காங்க தெரியுமா அவங்களும் நம்மளுக்கு சொந்தக்காரங்க மாதிரி தான் என்று சொல்லி மூவரையும் உள்ளே அழைத்து வந்து நிற்க வைக்கிறார் ரோகினி பார்த்து அதிர்ச்சி அடைய முதலில் யார் வந்திருக்கிறார் என்ற சந்தோஷத்தில் வந்து பார்த்த மீனா இவர்களை பார்த்தவுடன் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார். அண்ணாமலை அவர்களிடம் நலம் விசாரித்து விட்டு உட்காருங்கள் சாப்பிடலாம் என்று சொல்லுகிறார்.
ரோகினி மீனாவிடம் வந்து என்ன மீனா முத்து இவர்களை கூட்டிட்டு வந்திருக்காரு அவர் கிட்ட சொல்லிட்டீங்களா என்று கேட்க அவருக்கு உண்மை தெரிஞ்சா நீ இந்த நேரம் வீட்டில் இருக்க மாட்ட என்று சொல்ல ரோகிணி அமைதியாக சென்று விடுகிறார் பிறகு குடும்பத்தில் இருப்பவர்கள் என்ன பேசுகின்றனர்? மனோஜ் என்ன பண்ணுகிறார்? அதற்கு அண்ணாமலை என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…
சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்யின் கடைசிப்படமாக…
தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! துபாயில் இருந்து கடந்த மார்ச்…
சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார் சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி…
பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர்…