விஜயா சொன்ன வார்த்தை, முத்து கொடுத்த பதிலடி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரை விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மீனா விளக்குக்கு அலங்காரம் செய்ய அந்த நேரம் பார்த்து ரோகினி உள்ளே வருகிறார். எங்க போயிருந்த ரோகினி என்று கேட்க ஷாப்பிங் போன ஆன்ட்டி என்று சொல்லுகிறார். வந்து விளக்கேத்து என்று சொல்ல அதற்கு முத்து எல்லாம் ஏற்பாடு மீனா விளக்கேத்த மட்டும் பார்லர் அம்மாவா என்று கேட்க இந்த வீட்டோட மூத்த மருமக அவதார் என்று சொல்லுகிறார்.

உடனே மீனா தீபம் யார் ஏற்றினாலும் எரியும். ரோகினி மீனா விடம் ஒரு தட்டு எடுத்துக்கிட்டு வாங்க என்று சொல்ல,அதில் பழங்களை வைத்து ஒரு புடவையை வைத்து விஜயாவிடம் கொடுக்கிறார்.புடவையைப் பார்த்து விஜயா சூப்பரா இருக்கு என்று சந்தோஷப்படுகிறார். உடனே முத்து அப்பாக்கு வாங்கிட்டு வரலையா என்று கேட்க இது லேடிஸ் கும்பிடற சாமி அதனால் ஆன்ட்டிக்கு மட்டும் வாங்கிட்டு வந்தேன். ஜென்ஸ் சாமி கும்பிடும் பொது அவங்களுக்கும் சேர்த்து வாங்கிட்டு வருவேன் என்று சொல்லி ரோகினி சமாளிக்கிறார். அதற்கு மீனா புருஷன் பொண்டாட்டியா இருக்கும் போது தனியா எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கக் கூடாது என்று சொல்ல உடனே விஜயா உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டவுடன் மீனா சென்று விடுகிறார்.

ரோகினி நீங்க இந்த புடவையை தான் கட்டிட்டு வரணும் இதுக்கு பிளவுஸ் கூட வாங்கிட்டு வந்துட்டேன் என்று பிளவுஸ் எடுத்துக் கொடுக்க விஜய்யா கட்டிக் கொண்டு வரேன் என்று உள்ளே செல்கிறார். அந்த நேரம் பார்த்து மீனாவுடன் பூ கட்டுபவர்கள் வருகின்றனர். அவர்களை உட்கார வைத்த மீனா பேசிக் கொண்டிருந்தபோது விஜயா வெளியே வருகிறார். பூ கட்டுபவர்கள் கொலு பொம்மையை தொட்டு பார்த்துக் கொண்டிருக்க, விஜயா உடனே அவர்களை திட்டி அசிங்கப்படுத்த அண்ணாமலை விஜயாவை அடக்குகிறார்.

உடனே விஜயா தீபாதாரணை காட்டி பூஜையை முடிக்க ரோகினி மற்றும் மனோஜ் இருவரும் உள்ளே சென்று ஒரு நேம் போர்டு எடுத்துக் கொண்டு வருகின்றன. அதனை விஜயா தான் திறந்து வைக்க வேண்டும் என்று சொல்லி விஜயாவை கட் பண்ண சொல்லுகின்றன.

அதில் ரோகிணி ஆன்லைன் கிளாஸ் மேக்கப் சொல்லிக் கொடுக்கப் போவதாக விஜயாவின் ஆரம்ப எழுத்து வி ஐ வைத்து ஆரம்பித்துள்ளார். உடனே முத்து அம்மாவோட ஃபுல் பேரை வச்சா செட் ஆகவில்லை என்று ஒரே எழுத்து வச்சுட்டீங்களா? என்று கிண்டல் அடிக்க உடனே மனோஜ் அப்படி எல்லாம் இல்லமா இப்பல்லாம் ஓரெழுத்து வைக்கிறது தான் ஃபேஷன் என்று சொல்லி சமாளிக்கிறார். எல்லோருக்கும் சுண்டல் கொழுக்கட்டை வைத்துக் கொடுத்த மீனா, விஜயா பூ கட்டுபவர்களை இப்படி எல்லாரும் வீட்டுக்கும் போயிட வேண்டியதுதானா சாப்பாடு கிடைக்கும் என்று நக்கலாக பேச நாங்க எல்லாம் அப்படி கிடையாது எங்க வீட்ல ஒருத்தனா தான் முத்துவையும் மீனாவையும் நாங்க நினைக்கிறோம் என்று சொல்ல விஜயா பேசாமல் உட்கார்ந்து இருக்கிறார். அவர்கள் நாங்க கிளம்புறோம் மீனா என்று சொன்ன உடனே முத்து வாங்க நடராஜ் பண்றேன் என்று சொல்லியும் பரவாயில்லை நாங்க போகிறோம் என்று அவர்கள் சொல்ல, நான் கூட்டிட்டு போறேன் என்று சொல்லுகிறார் முத்து.

விஜயா பேசிக்கொண்டே இருக்க மீனா கொழுக்கட்டைகளை விஜயாவிடம் அடுக்கி இந்தாங்க இது சாப்பிட்டுக்கிட்டே இருங்க என்று சொல்ல அப்போ நான் பேசுறது எப்படி சொல்றா பாருங்க என்று சொல்ல உடனே அண்ணாமலை என்ன மீனா அப்படி பண்ற விஜயா கடைக்கு கொழுக்கட்டை பத்தாது சிமெண்ட் வேணும் என்று சொன்ன அனைவரும் சிரிக்கின்றனர் விஜயா கடுப்பாகி உள்ளே சென்று விடுகிறார்.

முத்துவும் மீனாவும் செருப்பு தைக்கும் தாத்தா பாட்டிக்கு துணி எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து கொலுவிற்கு கூப்பிடுவதற்காக மொத்த ஆரம்பிக்க அவரை தடுத்து ஓரமாக கூப்பிட்டு செல்கிறார் மீனா. ஏன் என்ன ஆச்சு எதுக்கு என்னை கூப்பிடுற என்று கேட்க அவங்களை எதுக்கு குழுவுக்கு கூப்பிடுறீங்க என்று கேட்க தாத்தா பாட்டி எல்லாம் சொல்ற அப்புறம், அதுக்காக சொல்லல அவங்க எங்க அம்மா தங்கச்சி வீட்டுக்கு வந்தாலே அசிங்கப்படுத்துவாங்க அவங்களுக்கு பழகிடுச்சு ஆனா இவங்கள அது மாதிரி பேசினா தப்பா ஆயிடும். இவங்களுக்கு மரியாதை இருக்காது அதனால வேண்டாம் என்று சொல்லுகிறார் ஆனால் முத்து அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் என்று ரெண்டு பேருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட மக்கள் அங்கு கூடி விடுகின்றனர். உடனே ஒருவர் ஒருவர் மாற்றி மாற்றி பேச இதுதான் நாலுபேர் நாலு விதமா பேசுறதா நாங்க சும்மா தான் பேசிகிட்டு இருந்தோம் போங்க என்று அவர்களை அனுப்பி வைக்கின்றனர். உடனே மீனா நான் சொல்றதை கேளுங்க சொல்ல வேண்டாம் என சொல்லிவிட்டு தாத்தா பாட்டி இடம் வந்து பேசிவிட்டு கிளம்புகின்றனர்.

மறுபக்கம் ரோகினி முத்துவின் போனிலிருந்து வீடியோவை எடுக்க என்ன பிளான் போடுகிறார்? அதற்கு வித்யா என்ன சொல்லுகிறார் என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்

SiragadikkaAasai Serial Episode Update
jothika lakshu

Recent Posts

Thadumaarudhe Video Song

Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…

16 hours ago

‘டாக்ஸிக்’ படத்தின் ‘தடுமாறுதே’ பாடல் வெளியீடு – யஷ், தாரா சுதாரியாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்கிறது!

'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…

1 day ago

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ‘கட்டா குஸ்தி 2’ – உலகளவில் ரூ.55 கோடி வசூல்!

செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…

1 day ago

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய ட்ரோன் விருதால் கவுரவிக்கப்பட்ட சாதனையாளர்

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…

1 day ago

நடிகர் அர்ஜுன் தாஸின் கான் சிட்டி ஓடிடி தேதி அறிவிப்பு!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…

2 days ago

கவின் – நயன்தாரா நடிக்கும் ‘Hi’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…

2 days ago