விஜயா முத்துவை வெறுக்க காரணம் என்ன? மீனாவிடம் உண்மையை சொல்லும் முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம் எந்த ஊர்லயும் அம்மா புள்ளைய வெறுக்க முடியாது ஆனா உங்க அம்மா உங்களை வெறுத்து பேசும்போது எப்படி இப்படி எல்லாம் நடக்குதுன்னு நான் ரொம்ப யோசிச்சிருக்கேன் உங்க ரெண்டு பேருக்குள்ள என்னதான் நடந்தது உங்க வாழ்க்கையில என்ன நடந்ததுன்னு இப்பவாவது சொல்லுங்க எதுக்கு உங்க அம்மா இப்படி நடந்துக்கிறாங்க என்று கேட்க முத்துவும் பிளாஷ் பேக் விஷயங்களை சொல்ல ஆரம்பிக்கிறார்.அப்போது விஜயா ஒரு சாமியாரை சந்திக்கிறார் அப்போது கொஞ்ச நாளா சின்ன சின்ன விபத்தும் மன கஷ்டங்களும் இருப்பதாக அவரிடம் சொல்ல அவர் சோழி போட்டு பார்க்கிறார் இரண்டாவது மகனுக்கு என்ன வயசாகுது என்று கேட்க ஆறு வயசு ஆகுது என்று சொல்லுகிறார் அப்போ அவன் தான் பிரச்சனை என சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார் என்ன சொல்றீங்க என் பையன் நாளை என்ன பிரச்சனை என்று கேட்க உங்க பையன ஒரு ஆறு வருஷத்துக்கு நீங்க பிரிஞ்சு இருக்கணும் என்று சாமியார் சொல்லி விடுகிறார்.

உடனே விஜயா 2 பசங்கள விட என்னோட இரண்டாவது பையன் தான் என் மேல ரொம்ப பாசமா இருப்பான் அம்மா அம்மான்னு என்ன சுத்தி சுத்தி வரமா அவன விட்டுட்டு என்னால இப்படி ஆறு வருஷம் பிரிந்து இருக்க முடியும் என்று விஜயா கேட்க அதற்கு அந்த சாமியார் எல்லாத்தையும் வெளிப்படையா சொல்ல முடியாது அந்தப் பையன் இருந்தான் உங்க குடும்பத்துல யாராவது உயிர் ஆபத்து ஏற்படும் என்று சொல்ல இதற்கு வேறு வழியே இல்லையா என்று விஜயா கேட்கிறார் அவர் ஆறு வருஷம் தானே யாராவது தெரிஞ்சவங்க வீட்டுல விட்டுட்டு அதுக்கப்புறம் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுங்க என்று சொல்ல விஜயாவும் வேறு வழி என்று அண்ணாமலை இடம் இது பற்றி பேசுகிறார். அவர் ஜோசியத்தை எல்லாம் நம்பத் தேவையில்லை நம்ம பையன எப்படி எடுத்துக்கிட்டு போய் விட முடியும் என்று கேட்க உங்களோட அம்மா வீட்டுல ஒரு ஆறு வருஷம் விடலாம் என விஜயா சொல்ல அண்ணாமலை முதலில் மறுக்க வலு கட்டாயமாக விஜயா பேச சரி நான் அம்மாகிட்ட பேசிட்டு முடிவெடுக்கிறேன் என சொல்லுகிறார் அந்த நேரம் பார்த்து ஆறு வயதில் இருக்கும் முத்து உள்ளே ஓடி வந்து அம்மா அப்பா ஓடிவாங்க பிளைன் பார்க்கலாம் என கையைப் பிடித்து இழுத்து வருகிறார்.

உடனே அண்ணாமலையும் விஜயாவும் முத்துவை அழைத்துக் கொண்டு பாட்டி வீட்டுக்கு வருகிறார். அங்கு சொந்தக்காரர்களும் பாட்டி என அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்க விஜயா ஜோசியரை சந்தித்த விஷயத்தை சொல்ல இதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல விஜயா என்று பாட்டி சொல்லுகிறார் ஒரு சின்ன பையனால என்ன ஆயிடப்போது என்று கேட்க விஜயா கண்கலங்கி அழுகிறார் எனக்கு மட்டும் அவனை இங்க விட்டுட்டு போனாலும் எண்ணம் கிடையாது பிற்காலத்துல ஏதாவது வீட்ல ஒரு சம்பவம் நடந்தா அதுக்கு இவன் ஆளாக கூடாது இது தெரியாம இருந்திருந்தா கூட நம்ம ஏதோ ஒரு காரணம் என்று நினைத்து இருக்கலாம் நாளைக்கு இவன் பேர்ல எந்த கஷ்டமும் வரக்கூடாது அதுக்காக தான் அத்தை நான் இப்படி யோசிக்கிறேன் என்று சொல்ல உடனே சொந்தக்காரர்களும் எனக்கும் இவங்க சொல்றதுதான் சரின்னு படுது ஒரு ஆறு வருஷம் மட்டும் இங்க வச்சுக்கோங்க அத்தை என்று சொல்லுகிறார். பாட்டியும் வேறு வழி இல்லாமல் சரி அண்ணாமலையை எப்படி நல்லபடியாக வளர்த்த ஆளாக்கி இருக்கணும் அதே மாதிரி முத்துவையும் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருக்கும் முத்துவை கூப்பிட்டு இனிமே நீ பாட்டி வீட்லதான் இருக்கப் போற இங்க இருக்குற ஸ்கூல்ல தான் படிக்கப் போற என்று சொல்ல ஆஹா நான் இங்க இருக்க மாட்டேன் அம்மா கூட தான் இருப்பேன் அம்மா கூட தான் இருப்பேன் என அடம் பிடிக்கிறார். உடனே விஜயா முத்துவை கட்டிப்பிடித்து கண் கலங்கி அழுதுவிட்டேன் எங்கேய விட்டு சென்று விடுகிறார்.

பிறகு வீட்டில் எனக்கு முத்து ஞாபகமாக இருக்கு என்று அண்ணாமலை இடம் சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து போன் வருகிறது முத்துவாக இருக்கும் என்று போனை எடுத்துப் பேச அது விஜயாவின் மாமியார் என்ன விஷயம் என்று விசாரிக்க முத்து எங்க செட் ஆயிட்டா அவங்க பிரண்டு கூட விளையாட போயிருக்கான் அவன் இங்க நல்லா பாத்துக்குறேன் நீங்க கவலைப்படாதீங்க என்று சொன்ன பிறகு அண்ணாமலை இடம் முத்துவுக்கு டிரஸ் கொடுத்து விடு என்று சொல்லுகிறார். எனக்கு முத்துவை பாக்கணும் போல இருக்கு நான் வந்து டிரஸ் எடுத்துக்கிட்டு நானும் அவரும் வருமென சொல்லுகிறார். பிறகு என்ன நடக்கிறது? மீண்டும் விஜயா சாமியாரை சந்திக்க அவர் என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikkaaasai serial episode update 13-09-25
jothika lakshu

Recent Posts

புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

14 hours ago

Bison – Poison ? Ameer Speech Bison Thanks Meet

https://youtu.be/hvOcBNB9q5M?t=1

16 hours ago

Mari Selvaraj Speech Bison Thanks Meet

https://youtu.be/V8EF1lKofzs?t=1

16 hours ago

Pa Ranjith Speech Bison Thanks Meet

https://youtu.be/XH3vQluc4Eo?t=518

16 hours ago

Aaru Arivu Movie Audio Launch | Ambedkar | Thol Thirumavalavan

https://youtu.be/VRvtIfqauzI?t=7

16 hours ago

பைசன் : 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…

17 hours ago