siragadikkaaasai serial episode update 12-11-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா டான்ஸ் ஆட அனைவரும் பார்த்து ரசிக்கின்றனர் ஆனால் மீனா அந்த மனநலம் பாதிக்கப்பட்டிருந்தவர் போல சொன்னது நினைத்துக் கொண்டிருக்கிறார் பிறகு விஜயா உடன் சேர்ந்து முத்து ரோகினி ஸ்ருதி ரவி மனோஜ் என அனைவரும் டான்ஸ் ஆட வீடே கலகலப்பாக இருக்கிறது டான்ஸ் முடிந்த பிறகு அங்கு வேலை செய்யும் பெண்மணி சூப்பரா டான்ஸ் ஆடுறீங்க நீங்க சினிமாவில் நடித்திருக்கலாம் என்று சொல்ல எங்க இங்க கல்யாணம் பண்ணிட்டு எப்படி நடிக்க முடியும் என்று சொல்லுகிறார்.
உடனே பாட்டி மீனாவிடம் வந்து நான் உன்னை கவனித்துக் கொண்டே தான் இருக்கேன் உனக்கு என்ன ஆச்சு மீனா என்று கேட்க முத்து கோவிலில் ஒரு ஆள் பேசிய விஷயத்தை சொல்லுகிறார் யார் பாட்டி அவரு மனநலம் சரியில்லாதவரா என்று கேட்க ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் வந்து அது யார் யார் கிட்டயும் பேச மாட்டான் கொஞ்ச நாள் முன்னாடி மழை வரும்னு சொன்னா உடனே மழை வந்துச்சு ஒரு பொண்ணு கிட்ட தாலி கட்டிக்கோனு சொன்னா ரொம்ப நாளா கல்யாணம் ஆகாம இருந்தா அந்த பொண்ணு ஒரு வாரத்திலேயே கல்யாணம் முடிஞ்சிடுச்சு என்று சொல்ல மீனா பார்த்து இந்த ஊரை விட்டு போயிடுனு சொன்னாரு என்று சொல்ல உடனே பாட்டி அப்படியா சொன்னாரு என்று சொல்லி அதிர்ச்சி அடைகிறார் அதுவுமில்லாமல் சாமி கும்பிடுதானே வந்திருக்கும் அப்படி எதுவும் நடக்காது என்று சொல்லிவிட்டு அமைதியாகி விடுகின்றனர்.
இரவு அனைவரும் தூங்க ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க மீண்டும் அவர் வந்து தேங்காயால் கதவை ஓங்கி அடிக்கிறார் சத்தம் கேட்டு வெளியில் வந்த மனோஜ் யாருடா நீ எதுக்கு வந்த என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க அவர் சிரித்துக் கொண்டே இருக்கிறார் உடனே சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருக்கும் அனைவரும் வெளியில் வந்து நிற்கின்றனர் இவர் தான் பாட்டி என்று சொல்ல அந்த ஆள் சிரித்துக் கொண்டே இருக்கிறார் ரோகினியை பார்த்து முறைத்து விட்டு மனோஜை பார்த்து சிரிக்கிறாள் பிறகு அண்ணாமலை அவர் பசியோடு இருப்பாரோ சாப்பாடு போடுமா என்று சொன்னால் அண்ணாமலையை பார்த்து அழுகிறார். உடனே மீனா விடம் உன்ன தான் இங்க இருக்க வேணாம்னு சொன்னேன்ல போயிடு இந்த ஊரை விட்டு போயிடு என்று சொல்லிவிட்டு முத்துவிடம் அவளை கூட்டிகிட்டு இருந்து போ என்று சொல்லி சிரித்துக்கொண்டே சென்று விடுகிறார். மறுநாள் காலையில் அனைவரும் ரெடியாகி பூஜை செய்துவிட்டு தீபாவளியை பட்டாசு வெடித்து சந்தோஷமாக கொண்டாடுகின்றனர்.
மறுபக்கம் திவசம் செய்வதற்காக லட்சுமி ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க ஐயர் வந்து நம்ம சொன்ன கோவில்ல பண்ண முடியாது அவங்க ஒரு டெத் நடந்திருக்கு இரண்டு கிலோமீட்டர் தனி ஒரு கோவில்ல ஆத்தங்கரை வச்சுக்கலாம் என்று சொல்ல லக்ஷ்மியும் சரியான சொல்லுகிறார். பிறகு என்ன நடக்கிறது? ரோகிணி என்ன செய்யப் போகிறார்?பாட்டி என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…
சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்யின் கடைசிப்படமாக…
தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! துபாயில் இருந்து கடந்த மார்ச்…
சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார் சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி…
பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர்…